செய்திகள் :

Prithvi Shaw: "பலமுறை ஏமாற்றப்பட்டேன்!" - வைரலாகும் பிரித்வி ஷாவின் காதலி அகிருதியின் பதிவு

post image

இந்தியக் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவின் ஃபியான்சே அகிருதி அகர்வால், தான் 'பலமுறை ஏமாற்றப்பட்டதாகக்' கூறி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Akriti Agarwal Instagram Story
Akriti Agarwal Instagram Story

இந்தப் பதிவில் அவர் பிரித்வி ஷாவின் பெயரையோ அல்லது வேறு யாருடைய பெயரையோ நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், இணையத்தில் இந்த விமர்சனம் பிரித்வி ஷா மீது வைக்கப்பட்டதாக பகிர்ந்து வருகின்றனர். இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அகிருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரித்வி ஷாவை 'அன்ஃபாலோ', செய்யவோ அல்லது தங்களது நிச்சயதார்த்தப் புகைப்படங்களை நீக்கவோ இல்லை.

அகிருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில், "நான் பலமுறை ஏமாற்றப்பட்டேன், இருந்தும் நான் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. வாழ்க்கையில் ஒரு படி மேலே எடுத்து வைத்த பிறகும் இப்படியா என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை.

Prithvi Shaw - பிரித்வி ஷா
Prithvi Shaw - பிரித்வி ஷா

எல்லாமே உண்மைதான். வெளியாகும் ஒவ்வொரு வதந்தியும் உண்மைதான். அவரைப் பற்றி நீங்கள் சமூக வலைத்தளங்களில் பார்ப்பது அத்தனையும் உண்மை" என்று பதிவிட்டிருந்தார்.

அகிருதி அகர்வால் ஒரு நடிகை மற்றும் சமூக வலைத்தள இன்ஃப்ளூயன்சர் ஆவார். 2026-ம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் பிரித்வி ஷா இடம்பிடித்திருந்தார்.

ஆனால், மோசமான உடற்தகுதி மற்றும் ஃபார்ம் அவுட் காரணமாக இந்த சீசனில் அவருக்கு ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்புக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மெஸ்ஸி, ரொனால்டோவை முந்திய எம்பாப்பே - நாக்அவுட் சுற்றின் புதிய `சுல்தான்'

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கிலியன் எம்பாப்பே (Kylian Mbappe) புதிய உலக சாதனைகளைப் படைத்து சரித்திரம் எழுதி வருகிறார்.செவ்வாய்க்கிழமை நடந்த Round 32 தகுத... மேலும் பார்க்க

Mr Beast & Cristiano Ronaldo: `ரொனால்டோ மிகச்சிறந்த மனிதர்' - நெகிழும் மிஸ்டர் பீஸ்ட்!

யூடியூப் உலகின் முடிசூடா மன்னன் மிஸ்டர் பீஸ்ட் (MrBeast). யூடியூப் தளத்தில் 500 மில்லியன் (50 கோடி) சந்தாதாரர்களைக் கடந்த முதல் தனிநபர் படைப்பாளி என்ற மாபெரும் சாதனைக்குச் சொந்தக்காரர். அதுபோல், உலகெங... மேலும் பார்க்க

மும்பை டு ராஜஸ்தான் : அணி மாறும் ஹர்திக்? - டிரேடிங்கில் மும்பை கேட்கும் வீரர் யார்?

ஐபிஎல் தொடர் முடிந்தாலும், அணிகளுக்குள் நடக்கும் மாற்றங்கள் குறித்த பரபரப்புக்கு ஒருபோதும் குறைவிருக்காது. அந்த வகையில், ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியில் மிகப் பெரிய புயல் வீசத் தொடங்கி... மேலும் பார்க்க

FIFA 2026: பீர் தீர்ந்தது, நகரம் அதிர்ந்தது - 28 வருட ஏக்கத்தைக் கொண்டாடிய ஸ்காட்லாந்து ரசிகர்கள்!

2026 ஃபிஃபா உலகக் கோப்பை (FIFA World Cup 2026) கால்பந்து திருவிழாவின்போது அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடைபெற்ற ஒரு நெகிழ்ச்சியான, வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுதான் இது. கால்பந்து என்றாலே கொண்டாட்டம... மேலும் பார்க்க

Soft Baseball: நேபாளத்தில் தங்கம் வென்ற தமிழ்நாடு மாணவிகள்: உலகக்கோப்பையை வெல்ல தீவிர பயிற்சி !

விளையாட்டு உலகில் கிரிக்கெட், கால்பந்து, வாலிபால் போன்ற போட்டிகள் அனைவருக்கும் பரிச்சயமானவை. ஆனால், பலருக்கும் அதிகம் அறிமுகமில்லாத சாஃப்ட் பேஸ்பால் (Soft Baseball) விளையாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த மூ... மேலும் பார்க்க

FIFA: ஃபிஃபாவின் புதிய மரபு; இரண்டு அரிய அடையாளங்களுடன் களமிறங்கிய லூகா மோட்ரிச்!

2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் 'Group L' பிரிவின் ஆரம்பச் சுற்று ஆட்டத்தில், உலகக் கால்பந்து ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் இங்கிலாந்து மற்றும் குரோஷியா அணிகள் நேருக்கு நேர் மோதின. ஆட்டம் தொடங... மேலும் பார்க்க