செய்திகள் :

"திமுக ஆதரவு பதவியில் தொடர விருப்பமில்லை" - வேலூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவர் ராஜினாமா

post image

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. காங்கிரஸ் கட்சியில் பேரணாம்பட்டு ஒன்றியத் தலைவராக இருந்து வரும் கிருஷ்ணவேணி, கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது வேலூர் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினராக (District Councillor) 8-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதையடுத்து, தி.மு.க உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்ததால், மாவட்ட ஊராட்சிக் குழுவின் துணைத் தலைவராகவும் (District Panchayat Deputy Chairman) தேர்ந்தெடுக்கப்பட்டார் கிருஷ்ணவேணி.

காங்கிரஸ் கிருஷ்ணவேணி
காங்கிரஸ் கிருஷ்ணவேணி

இந்த நிலையில், தி.மு.க கூட்டணியிலிருந்து விலகி த.வெ.க ஆட்சியமைக்க காங்கிரஸ் கைகொடுத்ததால், தி.மு.க ஆதரவில் தனக்குக் கிடைத்த மாவட்ட ஊராட்சிக்குழுத் துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார் கிருஷ்ணவேணி.

இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியரையும் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்திருக்கிறார்.

''த.வெ.க-வுடன் நாங்கள் இணைந்ததால், தி.மு.க ஆதரவில் கிடைத்த பதவியில் தொடர எனக்கு விருப்பமில்லை. எனவேதான் என்னுடைய பதவியை மனப்பூர்வமாக முன் வந்து ராஜினாமா செய்கிறேன்'' என்கிறார் கிருஷ்ணவேணி.

"பழையபடி +2 மதிப்பெண்களின்படி, MBBS இடங்கள் ஒதுக்கப்படணும்" - முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் வேண்டுகோள்

வினாத்தாள் கசிந்ததால், கடந்த 3-ம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுதேர்வு நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுக த... மேலும் பார்க்க

துரைமுருகனின் அறையில் ஆனந்த்; கே.என்.நேரு அறையில் அருண்ராஜ்! - தலைமைச் செயலக சுவாரஸ்யங்கள்!

தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்று 3 நாட்கள் ஆகிறது. திமுக, அதிமுக என இருபெரும் கட்சிகள் ஆட்சி நடத்திய சட்டமன்றத்தில் இப்போது தவெகவின் ஆட்சி நடக்கிறது. தவெக-வினரின் வருகையால் சட்டமன்றமே ஒருவித புத... மேலும் பார்க்க

`விஜய்யின் முதன்மை செயலாளரான ஆஸ்தான ஜோதிடர்' - ஊத்துக்குளி வெற்றிவேல், ரிக்கி ராதன் பண்டிட் ஆன கதை!

தமிழக முதல்வரின் சிறப்பு அரசியல் செயலாளர் என்கிற பதவிக்கு த.வெ.க-வின் செய்தி தொடர்பாளரும், முதல்வர் விஜய் அவர்களின் ஆஸ்தான ஜோதிடருமான ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமனம் செய்யப்படுவதாக தமிழக அரசின... மேலும் பார்க்க

‘ஆட்சியிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பிறகும் உதயநிதி ஸ்டாலின் திருந்தவில்லை’ – வானதி சீனிவாசன் சாடல்

பா.ஜ.க. தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஜே.சி.டி.பிரபாகரை வாழ்த்தி பேசிய எதிர்க்க... மேலும் பார்க்க

தவெக: ``திரைமறைவு பேரமா? விஜய் அடுத்த எம்.ஜி.ஆரா? ஆட்சியில் பங்கு?" - திருமாவளவனின் 'பளீச்' பதில்கள்

தவெக ஆட்சி அமைக்க மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருக்கும் இடதுசாரிகள், விசிக கட்சிகளின் ஆதரவை தவெக தலைவர் விஜய் கோரியிருந்தார். நீண்ட விவாதங்களுக்குப் பிறகே மூன்று கட்சிகளும் தங்கள் ஆதரவை வெளியி... மேலும் பார்க்க

ஜோலார்பேட்டை: சிதிலமடைந்த `அம்மா’ பூங்கா... சமூகவிரோத கூடமாக மாறிய அவலம் - கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குஉட்பட்ட ஏலகிரி மலை அடிவாரம் பொன்னேரி ஊராட்சியில், கடந்தகால அ.தி.மு.க ஆட்சியின்போது `அம்மா’ பூங்கா அமைக்கப்பட்டது. அந்தப் பகுதி மக்கள் நடைப்பயி... மேலும் பார்க்க