செய்திகள் :

₹5 கோடி ஓய்வுக்கால நிதி: NRI-களுக்கான ரகசிய முதலீட்டு வரைபடம்!

post image

வெளிநாட்டில் வேலை பார்க்கும் நம்மவர்களில் பலரிடம் ஒரு விசித்திரமான முரண்பாடு உண்டு. சம்பாத்தியம் என்னவோ பல லட்சங்களைத் தாண்டும்; ஆனால், முதலீடு என்று வரும்போது மட்டும் அதீத பாதுகாப்பைத் தேடிப் பழைய காலத்துக்கே சென்றுவிடுவார்கள்.

பல வருடங்கள் குடும்பத்தைப் பிரிந்து, ரத்தமும் வியர்வையுமாகச் சம்பாதித்த பணம். அதை எந்தவிதத்திலும் இழந்துவிடக் கூடாது என்ற அந்த ஆழமான பயம் முற்றிலும் நியாயமானதுதான். அந்த ஒரு பயத்தாலேயே, கையில் சேரும் பெரிய தொகையை அப்படியே நிரந்தர வைப்பு நிதியில் (FD) முடக்கி வைத்துவிட்டு நிம்மதியாக உறங்குவார்கள்.

ஆனால், அந்த நிம்மதி ஒரு மாயை! ஏழு சதவீத வட்டி கிடைக்கிறது என நீங்கள் கணக்குப் போடும்போது, ஆறு சதவீத பணவீக்கம் உங்கள் பணத்தின் வாங்கும் திறனை அமைதியாகத் தின்று தீர்க்கிறது. முடிவில், உங்கள் பணத்தின் உண்மையான வளர்ச்சி வெறும் ஒரு சதவீதம் மட்டுமே. இது நீங்கள் தேடிய பாதுகாப்பல்ல; உங்களின் எதிர்காலத்தை மெதுவாக அழிக்கும் ஒரு நிதிச் சிறை.

NRI

ஊருக்குத் திரும்ப இருக்கீங்களா?

வெளிநாட்டில் ஒரு சொகுசான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு, நிரந்தரமாக ஊர் திரும்பலாம் என முடிவெடுக்கும்போதுதான் பலருக்கும் நிஜமான அதிர்ச்சி காத்திருக்கும். இத்தனை வருடங்கள் வெளிநாட்டில் சேர்த்த பணம், சொந்த ஊரின் தற்போதைய வாழ்க்கை முறைக்கும், பிள்ளைகளின் கல்லூரிச் செலவுகளுக்கும் கொஞ்சமும் போதவில்லை என்ற உண்மை முகத்தில் அறையும். கையில் இருக்கும் குறைவான சேமிப்பை வைத்துக்கொண்டு மீதமுள்ள காலத்தை எப்படி ஓட்டுவது என்ற மன உளைச்சல் மிகப்பெரியது.

சரி என்று இதற்கு நேர்மாறாக, "பணம் வேகமாக வளர வேண்டும்" என்ற ஆசையில், எந்தவிதப் புரிதலும் இல்லாமல் பங்குச்சந்தைக்குள் குதிப்பவர்களும் உண்டு. ஏதோ ஒரு வீடியோவைப் பார்த்தோ, நண்பர்கள் சொல்வதைக் கேட்டோ சேமிப்பு முழுவதையும் ஒரேயடியாக முதலீடு செய்வார்கள். சந்தை லேசாகச் சரிந்தால் கூட, தூக்கம் தொலைத்துப் பதற்றத்தில் வெளியேறுவார்கள்.

பாதுகாப்பை மட்டுமே தேடினால் பணம் வளராது; அதீத வளர்ச்சியை மட்டுமே தேடினால் முதலீட்டில் நிம்மதி இருக்காது. அப்படியென்றால், இந்த இரண்டுக்கும் நடுவே உள்ள அந்தச் சரியான புள்ளி எது?

உங்கள் நிதிப் பயணத்தை சீராக்க ரெடியா?

நிஜத்தைச் சொல்லப்போனால், நீங்கள் ஊர் திரும்பும்போது கையில் ஐந்து கோடி ரூபாய் என்ற ஓய்வுக்காலத் தொகுப்பு நிதி இருப்பது எந்த வகையிலும் சாத்தியமில்லாத மாயாஜாலம் கிடையாது. அது உணர்ச்சிகளைக் கடந்த ஒரு மிக எளிய கணிதம்.

இதற்கு நீங்கள் தினமும் பங்குச்சந்தை நிலவரங்களை மணிக்கணக்கில் ஆராய வேண்டியதில்லை; நிதித்துறை நிபுணராக மாற வேண்டிய அவசியமும் இல்லை. உங்களுக்குத் தேவையானது எல்லாம், பாதுகாப்பையும் வளர்ச்சியையும் சரியாகப் பிரித்து முதலீடு செய்யும் ஒரு தெளிவான வரைபடம் (Blueprint) மட்டுமே!

நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்தது போதும்; இனி, உங்கள் பணமும் உங்களுக்காகக் களம் இறங்கி உழைக்க வேண்டும். அந்தத் தெளிவான நிதி வரைபடத்தை எப்படி உருவாக்குவது? வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலீட்டில் செய்யும் அந்தப் பொதுவான தவறுகளை எப்படித் தவிர்ப்பது?

Labham Workshop for NRIs

உங்களின் இந்த உளவியல் மற்றும் முதலீட்டுக் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே வருகிறது லாபம் வழங்கும் சிறப்பு ஆன்லைன் நிகழ்ச்சி.

தலைப்பு: பாதுகாப்பா? வளர்ச்சியா? முதலீட்டில் எதில் கவனம் செலுத்துவது? (NRI சிறப்பு நிகழ்ச்சி)
பேச்சாளர்: ஏ.ஆர். குமார் (Chief of Content, Labham & முன்னாள் இணை ஆசிரியர், நாணயம் விகடன்)
நாள்: மே 16, 2026 (சனிக்கிழமை)
நேரம்: மதியம் 12:30 மணி (IST)

பங்கேற்பாளர்களுக்கு மட்டும் கிடைக்கும் சிறப்புப் பரிசுகள்:
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும், உங்களின் முதலீட்டு இலக்குகளை நீங்களே சுலபமாகக் கணக்கிட உதவும் இலவச கால்குலேட்டர்கள் மற்றும் எந்தக் குழப்பமுமின்றி ஐந்து கோடி ரூபாய் இலக்கை அடைய உதவும் பிரத்தியேக வரைபடம் (Wealth Blueprint) இலவசமாக வழங்கப்படும்.

குழப்பங்களைத் தவிர்த்து, உங்கள் பணத்தை உங்களுக்கான பாதுகாப்பு அரணாக மாற்றும் கலையை இன்றே கற்றுக்கொள்ளுங்கள்.

முன்பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்: https://labham.money/events/webinar-may16-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_may16_2026

Women Investors: சம்பாதித்தும் உங்களுக்கெனப் பணமில்லையா? உழைக்கும் பெண்கள் செய்யும் மிகப்பெரிய தவறு!

பணம் சம்பாதிப்பதற்கும், செல்வத்தை உருவாக்குவதற்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது. வேலைக்குச் செல்லும் பெரும்பாலான பெண்களுக்கு இது தெரிவதில்லை.மாதச் சம்பளம் கையில் கிடைக்கும்போது ஒரு தற்காலிக சுதந்... மேலும் பார்க்க

Labham: என் வயது 30... கடன் பத்திரங்களில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

கடன் பத்திரங்களில் (Bonds) முதலீடு பற்றி பலரும் விசாரித்து வருகிறார். கடன் பத்திரங்களில் முதலீடு செய்தால் எந்த ரிஸ்க்கும் இல்லாமல் லாபத்தை அள்ளிவிடலாம் என சில யூடிபர்கள் வீடியோ வெளியிட, அதைப் பார்த்த ... மேலும் பார்க்க

NRI Corner: பயந்து ஒதுங்கி நின்றால், எதிர்காலத் தேவைகளை எப்படி நிறைவேற்றிக் கொள்ள முடியும்?

'பிசினஸ் ஆரம்பிக்கலாமா? அய்யய்யோ, அது பெரிய ரிஸ்க் ஆச்சே!' எனப் பலரும் எளிதில் ஒதுங்கிவிடுவார்கள். வேலை செய்வதில் மிகத் திறமைசாலிகளான தமிழர்கள் உலகம் முழுக்க உள்ள மிகப் பெரிய நிறுவனங்களில் தலைமைப் பதவ... மேலும் பார்க்க

'மொட்டை மாடியில் இலவச மின்சாரம்' - ரூ.78,000 மானியம், 70 லட்சம் பேருக்கு வாய்ப்பு; சூப்பர் திட்டம்!

நம்முடைய மின்சாரப் பயன்பாடு வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்பதும், மின் கட்டணங்கள் உயரும் என்பதும் கூடுதல் கவலையைக் குடும்பங்களில் ஏற்படுத்துகிறது. இதிலிருந்து தப்பிக்க நாம் மின்சார நுகர்வோராக... மேலும் பார்க்க

உங்கள் குழந்தையை 21 வயதில் கோடீஸ்வரர் ஆக்குவது எப்படி? பெற்றோர்க்கான சூப்பர் பிளான்!

குழந்தை பிறக்கும் நாள், வீட்டில் சந்தோஷம் மட்டும் வராது... அமைதியாக ஒரு பெரிய பொறுப்பும் உள்ளே நுழைந்துவிடுகிறது!முதலில் பால் பவுடர், அடுத்து பள்ளி சேர்க்கை, பிறகு டியூஷன், கல்லூரி, மேற்படிப்பு, ஒரு ந... மேலும் பார்க்க

SWP PLANNING: NRI-களே, இந்த ஒரு விஷயத்தைச் செய்யுங்க! உங்க லைஃப்டைம் செட்டில்!

"இன்னும் இரண்டு வருஷம்தான்... அதோட ஊருக்குப் போய் நிம்மதியா செட்டிலாகிடணும்!"துபாயிலோ, சிங்கப்பூரிலோ அல்லது அமெரிக்காவிலோ வேலை பார்க்கும் ஒவ்வொரு NRI-ம் தன் நண்பர்களிடம் அடிக்கடி சொல்லும் டயலாக் இது. ... மேலும் பார்க்க