செய்திகள் :

'செந்தில் பாலாஜியோடு தனியே என்ன பேசினீர்கள் என்பதையும்.!' - சி.வி சண்முகம் தரப்புக்கு அதிமுக பதிலடி

post image

அதிமுகவில் கலகக்குரல் வெடித்திருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு குழு, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், வேலுமணி தலைமையில் ஒரு குழு என அதிமுக இரண்டாக பிளவுபட்டிருக்கிறது.

எஸ்.பி வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான குழு இணைந்து தவெகவுக்கு ஆதரவு கொடுப்பதாக அறிவித்திருக்கின்றனர். தவிர 'திமுக ஆதரவோடு முதலமைச்சராகலாம் என்றார் பழனிசாமி இதைக் கேட்டு நாங்கள் பேரதிர்ச்சிக்குள்ளானோம்' என்று சி.வி.சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் குற்றம்சாட்டியிருந்தார்.

எம்.ஜி.ஆர் மாளிகை
எம்.ஜி.ஆர் மாளிகை

இந்நிலையில் அதிமுக தலைமை கழகம் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறது.

``சொந்த மாவட்டத்தில் வெற்றி பெற வக்கில்லாதவர்களின் சங்கமம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறது! திமுக-வுடன் கூட்டணி என்று ஊடகங்களில் வந்த சில வதந்திகளை தூக்கிக் கொண்டு வருவதை தான் இத்தனை நாள் நீங்கள் தீட்டிக் கொண்டிருந்த மாபெரும் திட்டமா?

அதே ஊடகங்களில் நீங்கள் மூன்று பேரும் போய் த.வெ.க-விடம் மந்திரி பதவிக்கு மண்டியிட்டு கிடப்பதாக கூட செய்திகள் வருகிறதே… அதையும் ஏற்கிறீர்களா? அது சரி, அதான் ஆளுங்கட்சி பக்கம் வாலாட்ட செல்கிறோம் என்று சொல்லி விட்டீர்களே?

பிறகு, நேற்று திமுக-வின் செந்தில் பாலாஜியோடு அரை மணி நேரம் தனியாக என்ன பேசினீர்கள் என்பதையும் சொல்வீர்களா? கழகம் யாரோடு கூட்டணியில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய நீங்கள் எல்லாம் யார்?

1,34,25,260 வாக்குகள் விழுந்தது நம் கழகத்திற்காக, நம் கூட்டணிக்காக, இரட்டை இலைக்காக, எடப்பாடியார் என்ற மக்களின் முதல்வருக்காக! அவர் போட்ட பிச்சையில் வெற்றியை பெற்றுவிட்டு, இன்று உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்து, நம் கட்சியை, நம் தொண்டர்களை, நம்மை நம்பி நின்ற கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, அமமுக ஆகியவற்றை, அதன் தொண்டர்களை கைகழுவி விட்டு நீங்கள் மட்டும் அதிகாரத்தோடு வாழ நினைப்பது ஈனத்தனம் இல்லையா?

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

நீங்கள் எல்லாம் அவ்வளவு பெரிய தலைவர்கள் என்றால், உங்கள் சொந்த மாவட்டத்தில் என்ன கிழித்தீர்கள்? உங்களின் இந்த அதிகாரத் திமிர், பண்ணையார்தனத்தை இன்னும் எத்தனை ஆண்டுகள் தொண்டர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்? மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களால் தான் இந்த இயக்கத்தைக் கட்டிக் காத்தவர்!

எடப்பாடியாரால் தான் தொண்டர்கள்! எடப்பாடியாருக்காக தான் தொண்டர்கள்! இந்த இயக்கம் சில சட்டமன்ற உறுப்பினர்களின் இயக்கம் அல்ல. தொண்டர்களின் இயக்கம். இந்த இயக்கத்திற்கு எந்த ஒரு பிரச்சனை வந்தாலும், தொண்டர்கள் எடுக்கும் முடிவு தான் வெற்றி பெற்றுள்ளது. இப்போதும் தொண்டர்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டார்கள்!" என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜோலார்பேட்டை: சிதிலமடைந்த `அம்மா’ பூங்கா... சமூகவிரோத கூடமாக மாறிய அவலம் - கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குஉட்பட்ட ஏலகிரி மலை அடிவாரம் பொன்னேரி ஊராட்சியில், கடந்தகால அ.தி.மு.க ஆட்சியின்போது `அம்மா’ பூங்கா அமைக்கப்பட்டது. அந்தப் பகுதி மக்கள் நடைப்பயி... மேலும் பார்க்க

"திமுக ஆதரவு பதவியில் தொடர விருப்பமில்லை" - வேலூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவர் ராஜினாமா

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. காங்கிரஸ் கட்சியில் பேரணாம்பட்டு ஒன்றியத் தலைவராக இருந்து வரும் கிருஷ்ணவேணி, கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது ... மேலும் பார்க்க

வினாத்தாள் கசிவு விவகாரம்: மே 3ல் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வு ரத்து! - சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நீட் தேர்வு முறைகேடு புகார்களைத் தொடர்ந்து, கடந்த மே 3, 2026 அன்று நடைபெற்ற நீட் (இளங்கலை) தேர்வை ரத்து செய்வதாகத் தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள... மேலும் பார்க்க

'ஆளும்கட்சி உறுப்பினர்களை விட மற்ற கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கைதான் அதிகம், அதனால்.!'- ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகராகத் தேர்வாகி இருக்கும் ஜே.சி.டி.பிரபாகருக்கு தமிழக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக... மேலும் பார்க்க

"நானும் முதல்வரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள்தாம்; ஆனால்" - உதயநிதி பேச்சைக் கேட்டு சிரித்த விஜய்

தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகராகப் போட்டியின்றி இன்று ஜே.சி.டி.பிரபாகர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். புதிய சபாநாயகருக்கு எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டசபையில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வக... மேலும் பார்க்க

'சபாநாயகரை ஏன் அவை முன்னவரும், எதிர்க்கட்சி தலைவர் அமர வைக்கிறார்கள்?' - விஜய் சொன்ன குட்டி வரலாறு

தமிழ்நாடு சட்டமன்றம் இன்று கூடியுள்ளது. சபாநாயகராக தவெக சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர் தேர்ந்தெடுக்கப்பட்டு, சபாநாயகர் இருக்கையில் அமர வைக்கப்பட்டார். அதன் பின், ஒவ்வொரு கட்சிக்கும் பேச வாய்ப்ப... மேலும் பார்க்க