செய்திகள் :

``திமுக எங்களை முதுகில் குத்தவில்லை, நெஞ்சில் குத்திவிட்டார்கள்!" - வைகோ காட்டாமான பேட்டி

post image

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இன்று நெல்லையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் விரைவில் நடைபெற்வுள்ள இடைத்தேர்தலில் ம.தி.மு.க போட்டியிடாது. அதே சமயம், முதல்வர் விஜய் தலைமையில் தமிழகத்தில் நடைபெற்றுவரும் அரசியல் மாற்றத்துக்கு ம.தி.மு.க உறுதுணையாக இருக்கும்.

தி.மு.க கூட்டணியில் இருந்தபோது எங்கள் கட்சி தொடர்ந்து அவமதிக்கப்பட்டது. சுயமரியாதையைக் காக்கவே கூட்டணியில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.

தி.மு.க-வைப் பொறுத்தவரை, அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்தது. அந்த முயற்சிகள் குறித்து தகவல் கிடைத்ததாலேயே பொதுக்குழு முடிவின் அடிப்படையில் தி.மு.க-விலிருந்து வெளியேறினோம்.

தி.மு.க., எங்களை முதுகில் குத்தவில்லை ஆனால், நெஞ்சில் குத்திவிட்டார்கள். இருந்தாலும் எங்கள் இயக்கத்தினர் உறுதியுடன் இருக்கிறார்கள். ம.தி.மு.க மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை மக்கள் நம்பமாட்டார்கள்.

முதலமைச்சர் விஜய், ஒரு கரிஸ்மாட்டிக் தலைவராக உள்ளார். அவருக்குப் பின்னால் இளைஞர்கள், இளம் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். விஜய்க்கு இளந்தலைமுறையினரிடம் அதிக ஆதரவு உள்ளது. வருங்கால இளைய தலைமுறையினரும் விஜய் பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள்.

அதனால், அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் 35 முதல் 45 சதவீத வாக்குகளை த.வெ.க பெறும் வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு முதலமைச்சராக விஜய் இருப்பார். அதைத் தொடர்ந்தும் பல ஆண்டுகளுக்கு விஜய் தலைமையிலான ஆட்சியே அமையும்.

தமிழக வெற்றிக்கழகம் தலைமையிலான கூட்டணியில் நாங்கள் கௌரவமாக நடத்தப்படுவோம். கண்ணியமாக நடத்தப்படுவோம். தி.மு.க-வோடு ஏற்பட்ட கசப்பான உணர்வு விஜயுடன் இருக்கும்போது ஏற்படாது.

சமீபத்தில் த.வெ.க சட்டப்பேரவை உறுப்பினருக்கு 35 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அரசியல் மோசடி நடந்துள்ளது. அதில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க தொடர்பு குறித்தும் பல கேள்விகள் எழுந்துள்ளன. எனவே, இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி பின்னணியில் இருப்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்" என்றார்.

"ஸ்டாலின் பேச்சின் பின்னணி என்னவென்று இப்போதுதான் தெரிகிறது" - திமுகவை விமர்சித்த பெ.சண்முகம்

தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாக ஐபிடிஎஸ் கருத்து கணிப்பு அமைப்பைச் சேர்ந்த திருநாவுக்கரசு, அவருக்குப் பின்னணியில் செயல்பட்ட நரேஷ், தியாகராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதில் திம... மேலும் பார்க்க

'கரூரில எங்களுக்கு ஒரு கணக்கு வழக்கு இருக்கு, அதை முடிக்காம விட மாட்டோம்'- ஆதவ் அர்ஜுனா காட்டம்

தவெக இணைப்பு விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்டார். நிகழ்ச்சி மேடையில் பேசிய அவர், "தமிழக அரசியல் 2026-க்கு முன்பு, 2026-க்கு பின்பு என்று மாறிவிட்டது. விஜய் என்ற முழக்கம் தமிழ்நாட்டில் மட்டும... மேலும் பார்க்க

"இது ட்ரைலர்தான்; மெயின் பிக்சரை டெல்டாவில் காட்டுவோம்" - தவெக இணைப்பு விழாவில் விஜயபாஸ்கர் 'பன்ச்'

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள் சி. விஜய பாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்திருக்கின்றனர். தவிர பல அதிமுக முன்னாள் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தவெகவில் இணைந... மேலும் பார்க்க

”இனி சுடு தண்ணீருக்காக அலைய வேண்டாம்” - கோரிக்கை வைத்த கர்ப்பிணிகள்; நெகிழ வைத்த மாவட்ட ஆட்சியர்!

அரியலூர் மாவட்டம், அரசு மகப்பேறு மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட தாய்சேய் நல மையம் செயல்பட்டு வருகிறது. இதில் மகப்பேறு உயர் கண்காணிப்புப் பிரிவு, மகப்பேறு தீவிர சிகிச்சைப் பிரிவு, வளர் இளம் பிள்ளை கவ... மேலும் பார்க்க

"தவெக வரலாற்றில் கரூர் ஒரு கரும்புள்ளி.!"- தவெக இணைப்பு விழாவில் பேசிய எம்.ஆர் விஜயபாஸ்கர்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தவெகவில் அதிகாரபூர்வமாக இணைந்திருக்கின்றனர். தவிர பல அதிமுக முன்னாள் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தவெகவில் இணைந்திருக்... மேலும் பார்க்க