செய்திகள் :

'திமுக திட்டங்களுக்கு தவெக ஸ்டிக்கரா?' - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம் என்ன?

post image

மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார்.

அப்போது பட்ஜெட்டில் திமுகவின் திட்டங்களுக்கு தவெக ஸ்டிக்கர் ஓட்டுகிறது என்ற விமர்சனம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், "ஆட்சி மாறும்போது நல்ல திட்டங்களை தொடர்வது வழக்கம்தான். ஒவ்வொரு ஆட்சியிலும் சில திட்டங்கள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன.

பட்ஜெட்: விஜய் - மரிய வில்சன்
பட்ஜெட்: விஜய் - மரிய வில்சன்

அரசு சார்பிலான திட்டங்கள் 70-80 ஆண்டுகளாக இருக்கும் திட்டங்கள்தான். ஒவ்வொரு ஆட்சியிலும் செய்வதுபோல்தான் இந்த நிதிநிலை அறிக்கையில் செய்துள்ளோம்.

புதிய நிதி ஆதாரங்களைச் சீரமைக்கும் பணிகளை முதல்வர் விஜய் செய்து வருகிறார்" என்றிருக்கிறார்.

தொடர்ந்து மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 உயர்த்தப்படுவது எப்போது என்ற கேள்விக்கு, "நிதி ஆதாரத்தைக் கருத்தில்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் பேசிய அவர், "உங்களுக்கே தெரியும் தமிழக நிதி நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்று... மின்சார வாரியம், ஆவின், போக்குவரத்துத் துறை என எல்லாத்தையும் மூடும் அளவிற்குத்தான் கடந்த ஆட்சி விட்டு சென்றிருக்கிறது.

தமிழக வேளாண் பட்ஜெட்
தமிழக வேளாண் பட்ஜெட்

நேற்று எடப்பாடி சொல்கிறார், புதிய ஆதாரத்தைப் பெருக்குவதற்கு பட்ஜெட்டில் எதுவும் செய்யவில்லை என்கிறார். அவர்கள் ஆட்சியில் அப்படி என்ன செய்தார்கள்.

நிதி ஆதாரத்தைப் பெருக்க திமுக, அதிமுக ஆட்சி காலத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?" என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

சர்ச்சை மேல் சர்ச்சை; மேலிடத்தை தூங்கவிடாமல் செய்யும் விருதுநகர் தவெக! - சாட்டை சுழற்றுவாரா விஜய்?

ஆட்சி அமைத்து முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்து விட்டது தமிழக வெற்றிக் கழக அரசு.அடுத்து திருச்சி கிழக்கு உள்ளிட்ட 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலைச் சந்திக்கவிருக்கிற சூழலில், ஆட்சி அமைந்த இந்த மூன்று மாதங்... மேலும் பார்க்க

'கடைகளில் UPI பயன்படுத்தி பணம் செலுத்துகிறீர்களா?' - அதற்கு இனி மத்திய அரசு கட்டணம் வசூலிக்கலாம்

இதுவரை Paytm, கூகுள் பே, போன் பே மூலம் பேமெண்ட் செய்யும் போது, நேரடியாக எந்தக் கட்டணமும் வசூலிக்கப்பட்டது இல்லை. இனி வசூலிக்கப்படலாம். இதற்கு காரணம், கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4), மத்திய நிதியமைச்... மேலும் பார்க்க

'எத்தனை நாளுக்குதான் சேகர் பாபுவே.!' - அங்கலாய்த்த திமுக எம்.எல்.ஏ; சட்டமன்ற ஹைலைட்ஸ்!

சட்டமன்றத்தில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனையொட்டி சட்டமன்ற வளாகத்தில் இன்றைய நாளில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பு இங்கே.!Udhayanidhi> திமுக-வினர் கருப்பு சட்டையு... மேலும் பார்க்க

`தி.மு.கவுக்கு தாவுகிறாரா கே.டி ராஜேந்திர பாலாஜி?' - பரபரக்கும் விருதுநகர் அரசியல்

விருதுநகர் அ.தி.மு.க தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி ராஜேந்திர பாலாஜி திமுக-வுக்கு தாவ ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார் என்ற தகவலால் விருதுநகர் பரபரத்து கிடக்கிறது. முன்னாள் அமைச்சர் க... மேலும் பார்க்க

'என்னப்பா சொல்ல மாட்டீங்களா...' - உதயநிதியின் காரில் ஏற முயன்ற எடப்பாடி பழனிசாமி!

சட்டமன்றத்தில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவை நிகழ்வுகளை முடித்து விட்டு கிளம்பிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவறுதலாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் காரில் ஏற முயன்றா... மேலும் பார்க்க

அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி; ட்ரம்ப் விதித்த வரியை Refund செய்த அமெரிக்கா; எவ்வளவு தெரியுமா?

2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் உலக நாடுகளைத் துரத்தி வந்த பிரச்னைகளில் ஒன்று - பெரும்பாலான உலக நாடுகள் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த 'பரஸ்பர வரி'. இந்த வரியை அமெரிக்காவின் 'சர்வதேச அவசர பொருள... மேலும் பார்க்க