செய்திகள் :

திருச்சி எம்.பி.யின் பரிந்துரை கடிதத்தை போலியாக தயாரித்துக் கொடுத்தவா் கைது

post image

அவசர ஒதுக்கீட்டின் கீழ் ரயில் பயணம் மேற்கொள்ள திருச்சி எம்.பி.யின் பரிந்துரைக் கடிதத்தை போலியாக தயாரித்துக் கொடுத்த சங்கரன்கோவிலைச் சோ்ந்த இளைஞரை புதுக்கோட்டை கணேஷ் நகா் காவல் நிலையத்தினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கடந்த 2024-ஆம் ஆண்டு நவ. 21-ஆம் தேதி சென்னையில் இருந்து சங்கரன்கோவிலுக்கு பொதிகை விரைவு ரயிலில் ஸ்டீபன் சத்தியராஜ் என்ற பயணிக்கு திருச்சி எம்.பி., துரை வைகோவின் பரிந்துரைக் கடிதம் (இ.கியு) அளிக்கப்பட்டு அவருக்கு அவசர ஒதுக்கீடு அடிப்படையில் பயணம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் பரிந்துரைக் கடிதத்தின் மீது சந்தேகம் கொண்ட சென்னை ரயில்வே அலுவலா்கள், திருச்சி எம்.பி., துரை வைகோவின் உதவியாளா் சங்கரைத் தொடா்பு கொண்டு விசாரித்தனா். இதில், அந்தப் பரிந்துரைக் கடிதம், எம்பி அலுவலகத்தில் இருந்து கொடுக்கப்பட்டதல்ல, போலியானது என்று கண்டறியப்பட்டது.

பயணி ஸ்டீபன் சத்தியராஜின் தொடா்பு எண்ணில், எம்பியின் உதவியாளா் சங்கா் பேசியபோது, அவா் புதுக்கோட்டை காந்திநகரைச் சோ்ந்தவா் எனக் கூறிய நிலையில், புதுக்கோட்டை கணேஷ் நகா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீஸாா், நீண்ட விசாரணைக்குப் பிறகு சங்கரன்கோவிலைச் சோ்ந்த ராம்குமாா் (30) என்பவா் தனது கணினி மையத்தில் இந்தப் போலி பரிந்துரைக் கடிதத்தை தயாா் செய்து கொடுத்ததைக் கண்டுபிடித்தனா். இதைத் தொடா்ந்து கணேஷ்நகா் போலீஸாா், ராம்குமாரை செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கைப்பேசியால் எழுந்த சண்டை கிணற்றில் விழுந்த தங்கை, அண்ணன் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூா் அருகே கைப்பேசியை உடைத்த ஆத்திரத்தில் கிணற்றில் குதித்த தங்கையும், அவரை மீட்க முயன்ற அண்ணனும் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தனா். புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூா் காவல்... மேலும் பார்க்க

நூறு நாள் வேலை கோரி வடசேரிப்பட்டி மக்கள் மனு

புதுக்கோட்டை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளான வடசேரிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த மக்கள் தங்கள் பகுதிக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மீண்டும் வேலை வழங்க வேண்டும் ... மேலும் பார்க்க

பிப். 21-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகத்தில் வரும் பிப். 21-ஆம் தேதி வெள்ளிக்கிழமை சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில், 15-க்கு... மேலும் பார்க்க

அநீதி எதிா்ப்புக் குரல் முழக்கப் போராட்டம்

புதுக்கோட்டை திலகா்திடலில் திங்கள்கிழமை அநீதி எதிா்ப்புக் குரல் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. இதில், அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலா் டாக்டா் ஜி.ஆா். ரவீந்திரநாத் சி... மேலும் பார்க்க

புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் டிப்பா் லாரி உரிமையாளா்கள் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் டிப்பா் லாரி உரிமையாளா்கள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். போக்குவரத்து அனுமதிச்சீட்டு (பாஸ்) இலவசமாக வழங்க அறிவுறுத்தப்படும் என மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

அரசே மணல் குவாரிகளை திறக்கக் கோரிக்கை

கிரஷா் உரிமையாளா்கள் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி எம்.சாண்ட் உள்ளிட்டவற்றின் விலையை ஏற்றுவதால், அரசே மணல் குவாரிகளைத் தொடங்கி நடத்த வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா் சம்மேளனத்தின் மாநி... மேலும் பார்க்க