செய்திகள் :

திருத்தணி முருகன் கோவிலிலிருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் சீமான்! - காரணம் என்ன?

post image

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தை மார்ச் 23-ம் தேதி திருத்தணியிலிருந்து தொடங்குகிறார் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.

2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, மாநாடு, வேட்பாளர் அறிவிப்பு, வாக்குறுதிகள் வெளியீடு என அரசியல் களத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது. இச்சூழலில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைபாளர் சீமான் பிரசாரத்தையும் தொடங்குகிறார்.

நம்மிடம் பேசிய அக்கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர்கள் சிலர் "பிப்ரவரி 21-ம் தேதி மாபெரும் மக்கள் மாநாட்டை நடத்தி அந்த மேடையிலேயே 234 வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டோம். கடந்த ஒருமாதமாக வேட்பாளர்கள் வீடு வீடாக பிரசாரம் செய்து வருகிறார்கள்.

சீமான் தேர்தல் பிரசாரம்

இதற்கிடையில், நாம் தமிழர் கட்சிக்கு ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் 5 தலைநகரங்கள் உருவாக்கப்படும், வேளாண்மை, ஆடு, மாடு வளர்த்தல் போன்றவை அரசு வேலையாக அறிவிக்கப்படும். பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை, மாநிலத்தில் தன்னாட்சி, மத்தியில் கூட்டாட்சி, சென்னையில் உச்சநீதிமன்ற கிளை, மணல் கொள்ளையை தடுக்க தனிப்படை, முழுமையான பூரண மதுவிலக்கு, உழவர்களே உணவு பொருட்களுக்கு விலை தீர்மானிக்கும் உரிமை போன்ற பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறோம். இச்சூழலில்தான் பிரசாரத்துக்கு கிளம்புகிறார் அண்ணன் சீமான்" என்றார்.

நம்மிடம் பேசிய அக்கட்சி நிர்வாகிகள் சிலர், "பொதுவாக கன்னியாகுமரியில் திருவள்ளூவருக்கு மரியாதை செலுத்திவிட்டு பிரசாரத்தையோ, மாநில சுற்றுப் பயணத்தையோ அண்ணன் சீமான் தொடங்குவார்.

குமரியில் தொடங்கி சென்னையில் முடிப்பதே வழக்கமான பிரசார ரூட். இம்முறையும் அதற்கான வேலைகள் நடந்தன. ஆனால், 'தமிழ்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளிலிருந்து பிரசாரத்தை தொடங்கிட வேண்டும்' என்பது அண்ணனின் விருப்பமாக இருந்தது.

திருத்தணி முருகன் கோவில்

கடந்த மூன்று ஆண்டுகளாக முப்பாட்டன் முருகனின் தீவிர பக்தராகவே மாறிவிட்டார். மேலும் மார்ச் 23-ம் தேதி தேய்பிறை அஷ்டமி என்பதால் அன்று அறுபடை வீடான திருத்தணியில் பிரசாரத்தை தொடங்க வேண்டும் என முடிவெடுத்தோம்.

மார்ச் 23-ம் தேதி காலை திருத்தணி முருகன் கோவில் வழிபாட்டோடு பிரசாரம் தொடங்கும். திருத்தணியில் தொடங்கி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், சென்னை மாவட்ட பிரசாரங்களை முதற்கட்டமாக முடிக்கிறோம். ஒரு நாளில் இரண்டு முதல் மூன்று இடங்களில் பேசுகிறார். பிறகு மார்ச் 30ம் தேதி அவர் போட்டியிடும் காரைக்குடி தொகுதிக்கு செல்கிறார். வேட்புமனு தாக்கல் பணிகள் நிறைவடைந்த பிறகு இரண்டாம் கட்ட பிரசாரத்தை தொடங்குவார். பிரசாரத்தில் எல்.இ.டி திரைமூலம் நாம் தமிழர் அரசு எப்படி இருக்கும் என காணொளி வாயிலாக விளக்க உள்ளார். பிறகு திராவிடக் கட்சிகள் அட்டாக், பாடல்கள் என கலவையாக இருக்கும்" என்றனர்.

`தனித்துப் போட்டியிட்டு திமுகவுக்குப் பாடம் புகட்டுவோம்!' கூட்டணியிலிருந்து வெளியேறும் வேல்முருகன்?

தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாததால் 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட தமிழக வாழ்வுரிமைக் கட்சிகள் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. த.வா.க-வுக்குள்... மேலும் பார்க்க

மகப்பேறு இறப்பு: தமிழ்நாட்டுக்கு தீர்வைத் தேடி வந்த உத்தரப் பிரதேச திட்டக்குழு!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தாய்மார்களின் மகப்பேறு இறப்பு விகிதம் அதிகமாக உள்ள நிலையில், அதைக் குறைப்பதற்கான சிறந்த தீர்வுகளைக் கண்டறிய அந்த மாநிலத்தின் திட்டக்குழு அதிகாரிகள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்... மேலும் பார்க்க

மத்திய கிழக்கு போர் எதிரொலி: எரிசக்தித் தட்டுப்பாடைச் சமாளிக்க இந்தியாவின் திட்டம் என்ன?

அமெரிக்க - இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கச் சொத்துக்கள் மற்றும் எரிசக்தி நிலையங்களை ஈரான் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஹார்மூஸ... மேலும் பார்க்க

`இந்த ஒரு விஷயம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது' - திமுக கூட்டணி இழுபறிக்கு தேமுதிக காரணமா?

விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட தொடர்ந்து மறுத்து வருவதால், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடிக்க முடியாமல் தவிக்கிறது திராவிட முன்னேற்... மேலும் பார்க்க

"திருப்பரங்குன்ற வழக்கை விசாரிக்கத் தடை இருந்தால் அதை நான் மதிப்பேன்" - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

‘திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றலாம்’ என நீதிமன்றம் உத்தரவிட்டும் அதற்குப் போதிய ஏற்பாடுகள் அதிகாரிகள் தரப்பில் செய்து தரப்படவில்லை என ராம ரவிக்குமார் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்த... மேலும் பார்க்க

Notary Portal: "தமிழ்நாடே இல்லையா?" - மத்திய அரசின் நோட்டரி இணையதளத்தில் நிலவும் பெரும் குளறுபடி

பொதுமக்களுக்குச் சட்டப்பூர்வமான ஆவணச் சான்றொப்பம் மற்றும் உறுதிமொழிப் பத்திரங்களை வழங்கும் நோட்டரி வழக்கறிஞர்களின் பணிகளை எளிதாக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் மத்திய அரசின் சட்ட அமைச்சகம... மேலும் பார்க்க