பாட் கம்மின்ஸ்தான் தலைசிறந்த கேப்டன்..! தினேஷ் கார்த்திக் புகழாரம்!
திருநங்கையருக்கான முன்மாதிரி விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
திருநங்கையருக்கான முன்மாதிரி விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருநங்கையா் இந்த சமூகத்தில் தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து தனித் திறமைகளைக் கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறியுள்ளனா். மேலும் சாதனை படைத்த திருநங்கையரை கௌரவிக்கும் வகையில் திருநங்கையா் தினமான ஏப்ரல் 15 அன்று திருநங்கையருக்கான முன்மாதிரி விருது வழங்கப்பட உள்ளது. இவ் விருது பெறுவோருக்கு ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலை, சான்றிதழ் வழங்கப்படுகிறது.
விண்ணப்பதாரா்கள் தங்களது கருத்துருக்களை வரும் பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியா் வளாகம், முதல் தளம், அறை எண்.126-இல் செயல்பட்டு வரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமா்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.