செய்திகள் :

திருப்பரங்குன்றம்: "உடனே தீபம் ஏற்ற இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது!" – உச்ச நீதிமன்றம்!

post image

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக் கோரிய வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவை உடனடியாகச் செயல்படுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் அதிரடியாக மறுத்துவிட்டது.

நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி அடங்கிய அமர்வு முன் நடைபெற்ற இந்த விசாரணையில், மனுதாரர் தரப்பு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் முன்வைக்கப்பட்ட காரசார வாதங்களைத் தொடர்ந்து வழக்கு 8 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதங்கள் நடைபெற்றது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

முக்கிய அம்சங்கள் & உச்ச நீதிமன்ற வாதங்கள்:

"முன்னர் நடைமுறையில் இல்லாத ஒரு புதிய விஷயத்தை உயர் நீதிமன்ற உத்தரவு மூலம் புகுத்தப் பார்க்கிறார்கள்" என அறநிலையத்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

ஜனவரி மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இத்தனை நாட்கள் மேல்முறையீடு செய்யாமல் தமிழ்நாடு அரசு என்ன செய்து கொண்டிருந்தது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ஆவணங்களை மொழிபெயர்ப்பு செய்ய வேண்டியிருந்ததால் காலதாமதம் ஏற்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

"வழக்கை முழுமையாக விசாரித்த பிறகே உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்; தற்போதைய நிலையில் எந்தவொரு தடை அல்லது இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது" என நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

எதிர்மனுதாரர் ராம ரவிக்குமார், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை காவல் ஆணையர் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து வழக்கு 8 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் இரு நீதிபதிகள் அமர்வை அணுகத் தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மதுரை: `எந்த layout வந்தாலும் என்னிடம் அப்ரூவல் வாங்கிய பிறகே அனுமதி'- எம்எல்ஏ கார்த்திகேயன்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 88 மணி நேர தாக்குதலின் ரகசியங்களை முதன்முறையாக உடைத்த அஜித் தோவல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் முதன்முறையாக விரிவாக பேசியிருக்கிறார். ... மேலும் பார்க்க

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்: ``தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" - சிபிஎம் சண்முகம்

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது. நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``பெற்றோரின் புகாரைப் பெற மறுத்த குற்றச்சாட்டில் உண்மையில்லை" - அமைச்சர் சம்பத் குமார்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``இதற்கு பிறகும் வாயைத் திறக்காமல் மயக்கத்தில் இருக்குறீர்களே CM sir?"- அப்பாவு காட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க