செய்திகள் :

திருப்பூர்: விளை நிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் பாரத் பெட்ரோலியம்; வீதியில் இறங்கிய விவசாயிகள்!

post image

பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் கோவையில் இருந்து தேவனஹொந்தி வரை 340 கி.மீ தொலைவுக்கு எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டம் நடைபெற்று வருகிறது. முத்தூரில் இருந்து தேவனஹொந்தி வரையிலான பகுதிகள் நெடுஞ்சாலை வழியாகப் பதிக்கப்படும் நிலையில், இருகூரில் இருந்து முத்தூர் வரையிலான 70 கி.மீ தொலைவிற்கு மட்டும் விவசாய நிலங்கள் வழியே எண்ணெய் குழாய்கள் பதிக்கப்பட இருக்கிறது. விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய்களை பதிப்பதால் விபத்து அபாயம் மட்டுமின்றி பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக விளைநிலங்கள் வழியாகப் பெட்ரோலியக் குழாய் அமைப்பதால் நிலத்தின் மதிப்பு 75 சதவிகிதம் வரை குறைவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

விவசாயிகள் போராட்டம்

நிலத்தில் குழாய் இருப்பதால் வங்கிகளில் விவசாய கடன் பெற முடியாத சூழல் ஏற்படுவதாவும் குற்றம் சாட்டி வருகின்றனர். மற்ற பகுதிகளைப் போலவே சாலையோரமாகவோ அல்லது தேசிய நெடுஞ்சாலை ஓரத்திலேயோ இத்திட்டத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லடத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விவசாயிகளின் கடுமையான எதிர்ப்புகளையும்‌ மீறி காவல்துறை பாதுகாப்புடன் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் வேலம்பாடி டோல்கேட் பகுதியில் இன்று காலை ஒன்று திரண்ட விவசாயிகள் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். தீவிர போராட்டங்களில் ஈடுபடுவார்கள் என விவசாய சங்க நிர்வாகிகள் பலரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்திருக்கிறது காவல்துறை.

ஏற்காடு: பட்டுப்புழு வளர்ப்பு முதல் பட்டுநூல் நெசவு வரை... ‘சில்க் வேர்ல்டு’ விசிட்!

‘பட்டு’ என்றதும் நம் கண்முன்னே விரியும் காட்சி... பளபளக்கும் பட்டுப்புடவை! அதன் மென்மையும், நுணுக்கமான வேலைப்பாடும் நம்மை ஈர்க்கும். ஆனால், அந்தப் பட்டுப்புடவையின் பின்னால் ஒரு சிறிய உயிரினத்தின் வாழ்... மேலும் பார்க்க

பசுமை சந்தை..!

விவசாய விளைபொருள்கள், கால்நடைகள், மீன்கள், பண்ணை உபகரணங்கள் போன்றவற்றை இங்கே நீங்கள் சந்தைப்படுத்தலாம். இயற்கை இடுபொருள்களான உரம், பூச்சிவிரட்டி தொடர்பான தகவல்கள் மற்றும் நிலம் விற்பது, வாங்குவது தொடர... மேலும் பார்க்க

பசுமை ஒலி..!

விவசாயிகளின் கவனத்துக்கு!பசுமை விகடன் இதழில் வெளியாகும் மகசூல், வீட்டுத்தோட்ட கட்டுரைகளில் ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா, அமுதக் கரைசல், மூலிகைப் பூச்சிவிரட்டி... உள்ளிட்ட இயற்கை இடுபொருள்களை பயன்படுத்தி வெற... மேலும் பார்க்க

விவசாய சங்கத்தினருடன் அமைச்சர்கள் ஆலோசனை ! - எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன?

காவிரி மற்றும் குறுவை சாகுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள முன்னிலையில் விவசாய சங்கங்க நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்ட... மேலும் பார்க்க

திருச்சி: `சந்தைப்படுத்துதல் மிகவும் முக்கியம்' - எஃப்.பி.ஓ கலந்துரையாடலில் விவசாயிகள்

திருச்சிராப்பள்ளியில் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் தமிழ்நாட்டின் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் செயல்திறன், நிலைத்தன்மை, சவால்கள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப... மேலும் பார்க்க