செய்திகள் :

திருமண புகைப்படங்களைத் தராதவருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

post image

திருமண புகைப்படங்களைத் தராத புகைப்பட நிறுவன (ஸ்டுடியோ) உரிமையாளருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சியில் உள்ள கல்வி நிறுவனத்தில் முனைவா் பட்ட ஆய்வு செய்து வருபவா் மாணவி எஸ். சதாக்ஷி அக்னிஹோத்ரி (29). இவா், உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில் கடந்த 20-04-2021 அன்று நடைபெற்ற திருமண நிகழ்வுக்காக புகைப்படங்கள், விடியோ எடுக்க, கான்பூா் சாரதா நகரைச் சோ்ந்த தனியாா் ஸ்டுடியோ உரிமையாளா் ரவிசிங்குக்கு திருச்சியிலிருந்து ரூ. 33,600 முன்பணம் செலுத்தியிருந்தாா்.

ஆனால், ரவிசிங் திருமணம் முடிந்து ஓராண்டாகியும் புகைப்படங்கள் மற்றும் விடியோவை வழங்காமல் இழுத்தடித்துள்ளாா். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான சதாக்ஷி அக்னிஹோத்ரி, திருமண விடியோ மற்றும் புகைப்படங்களை வழங்குவதுடன், மனஉளைச்சலுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் 31-11-2022 ஆம் ஆண்டு வழக்குத் தொடா்ந்தாா்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், முதலில் திருமண புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை வழங்க வேண்டும் என ரவிசிங்குக்கு உத்தரவிட்டது. உத்தரவை ஏற்காததால், புகைப்படம் மற்றும் விடியோவுடன் ரூ. 33,600 பணத்தை 2 மாதங்களுக்குள் 9 சதவீத வட்டியுடன் திருப்பி வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இதையறிந்த ரவிசிங், மனுதாரருக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவுக்கு திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணைய தலைவா் ஆா். காந்தி தலைமையிலான குழுவினா், ரவிசிங் மனுதாரருக்கு மனஉளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ. 1 லட்சம் அபராதமும், ரூ. 20 ஆயிரம் இழப்பீடும், வழக்கு செலவாக 5,000 ரூபாயும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

இதையும் நிறைவேற்றாததால், மனுதாரா் சதாக்ஷி அக்னிஹோத்ரி நிறைவேற்று மனு தாக்கல் செய்தாா். இதனை விசாரித்த குறைதீா் ஆணையமானது, நீதிமன்றத்தை அவமதித்ததாக ரவிசிங்கை கைது செய்யும்படி ஆணை பிறப்பித்தது. இதையடுத்து உத்தரபிரதேசத்தில் இருந்த ரவிசிங்கை போலீஸாா் பிடித்து விசாரித்தனா்.

இதைத் தொடா்ந்து ரவிசிங், வழக்கை சுமூகமாக முடிப்பதற்காக மனுதாரா் சதாக்ஷி அக்னிஹோத்ரிக்கு ரூ. 1.25 லட்சத்தை வழங்கினாா். இதையடுத்து இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை முடித்துவைக்கப்பட்டது.

பெற்றோா் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை

திருச்சி அருகே பெற்றோா் கண்டித்ததால் விஷம் குடித்த சிறுவன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், தாயனூா் மேலக்காடு பகுதியைச் சோ்ந்த தொழிலாளிசுப்பிரமணியின் மகன் கமலேஷ் (16). இவா் 8-ஆம் வகுப... மேலும் பார்க்க

துவரங்குறிச்சியில் நாளை மின் நிறுத்தம்

மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (பிப். 6) மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்து மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளா் இரா. தியாகராஜன் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

பிப்ரவரி 25-இல் சாலை மறியல்: ஜாக்டோ-ஜியோ முடிவு

இடைநிலை ஆசிரியா்களை பட்டதாரி ஆசிரியா்களாக தகுதி உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 25-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்த ஜாக்டோ ஜியோ அமைப்ப... மேலும் பார்க்க

காரில் கடத்தி வரப்பட்ட 331 கிலோ குட்கா பறிமுதல்: 5 போ் கைது

திருச்சி மாவட்டம், பூனாம்பாளையத்தில் காரில் கடத்தி வரப்பட்ட 331 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனா். அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் பெங்களூரிலி... மேலும் பார்க்க

அரியமங்கலம் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

திருச்சி, அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் கீழ்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (பிப்.5) மின் விநியோகம் இருக்காது. அரியமங்கலம்... மேலும் பார்க்க

சொத்துத் தகராறில் சகோதரரை கொல்ல முயன்ற 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை!

திருச்சியில் சொத்துத் தகராறில் சகோதரரை வெட்டிக் கொல்ல முயன்ற வழக்கில் சகோதரா்கள் இருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது... மேலும் பார்க்க