செய்திகள் :

திருவண்ணாமலை: வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்து நொறுக்கிய ஏஜென்ட்; காவல்துறை விசாரணை!

post image

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று (ஏப்ரல்.23) நடைபெற்று வருகிறது.

அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என எல்லோரும் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தை சுயேச்சை வேட்பாளரின் ஏஜென்ட் ஒருவர் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு
வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு

கலசபாக்கம் கீழ்பாலூர் வாக்குச்சாவடியில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரம் உடைக்கப்பட்டிருக்கிறது.

திரும்ப பயன்படுத்த முடியாத அளவிற்கு வாக்குப்பதிவு இயந்திரம் உடைக்கப்பட்டதால் மாற்று இயந்திரம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளரும், மாவட்ட ஆட்சியரும், சம்பவ இடத்திற்கு சென்றிருக்கின்றனர். வாக்குப்பதிவு இயந்திரம் உடைக்கப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று தமிழ்நாடு 80% வாக்கு சதவிகிதத்தை தொடுமா? - Tough போட்டி கொடுக்கும் 2021-ம் ஆண்டு தேர்தல்!

இன்னும் சில மணி நேரத்தில் 2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவடைய உள்ளது. சிறப்புத் தீவிர திருத்தத்திற்குப் பிறகு, இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. சிறப்புத் தீவிர திருத்தத்திற்குப் பிறகு, தமி... மேலும் பார்க்க

"இது வாக்குச்சாவடி, சினிமா படப்பிடிப்பு தளம் அல்ல..!" - வாக்களித்த சிம்ரன் பதிவு

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடக்கிறது. மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருக்கிறார்கள். 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: "பாஜகவிற்குச் சாதகமாக போலீஸ்" - "TMC-க்குச் சாதகமாக அடியாட்கள்?" - TMC vs BJP புகார்

இன்று மேற்கு வங்கத்தில் முதல்கட்ட சட்டமன்றத் தேர்தல் நடந்து வருகிறது.2011-ம் ஆண்டு முதல் மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக இருந்து வரும் திரிணாமுல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி, நான்காவது முறையாக ஆட்சியைத் ... மேலும் பார்க்க

"முன்பு வாரம் ஒருவரை அடித்து தூக்கிலிட்டுவிட்டு தற்கொலை என்பார்கள்" - மேற்கு வங்கத்தில் மோடி பேச்சு

மேற்கு வங்கத்தில் உள்ள கிருஷ்ணா நகரில் இரண்டாம் கட்ட தேர்தலுக்காகப் பரப்புரை செய்து வருகிறார் பிரதமர் மோடி. மேற்கு வங்கத்தில் இன்று நடந்து வரும் முதல் கட்ட தேர்தல் குறித்து மோடி பிரசாரத்தில் பேசியதாவத... மேலும் பார்க்க

'நீதி கிடைக்கவில்லை' - தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் இறங்கிய வேங்கைவயல் மக்கள்!

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பகுதி பட்டியலின சமூக மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் எனும் கிராமத்தில் வசிக்கும் பட்டியல் இன மக்கள... மேலும் பார்க்க