செய்திகள் :

திருவானைக்காவல்: `டாஸ்மாக் கடையை மூடக் கூடாது' - போராட்டத்தில் குதித்த வியாபாரிகள்; என்ன நடந்தது?

post image

திருச்சி, திருவானைக்காவல் அடுத்த அழகிரிபுரம் பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. பார் வசதியோடு செயல்பட்டு வரும் அந்தக் கடைகளால் அப்பகுதி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும், குறிப்பாக பெண்கள், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும் கூறி... கடந்த வாரம் அழகிரிபுரம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், அந்தக் கடை மூடப்பட்டுள்ளது.

protest

பேச்சுவார்த்தைக்குப் பின்பு அந்தக் கடையை திறப்பதா அல்லது முழுமையாக மூடுவதா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனால், கடந்த ஒரு வார காலமாக அந்தக் கடை மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்தப் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையால் எந்த பாதிப்பும் இல்லை. அந்தக் கடையை நம்பி அதன் அருகில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தரைக் கடைகள், தள்ளுவண்டிக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

டாஸ்மாக் கடைக்கு வரும் மதுப்பிரியர்கள், இந்தக் கடைகளில் தங்களுக்குத் தேவையான சைட் டிஷ் உள்ளிட்டவற்றை வாங்கிச் செல்வார்கள். கடை மூடப்பட்டிருப்பதால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் முழுமையாக கடையை மூடினால் அதை நம்பி வியாபாரம் செய்யும் தங்களுக்கு வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என அங்கு கடை வைத்திருக்கக்கூடிய வியாபாரிகள், ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

protest

அந்தக் கடையினை மூடாமல் தொடர்ச்சியாக இயங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அந்தக் கடையால் எந்தவித பாதிப்பும் பொது மக்களுக்கு ஏற்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். கடந்த வாரம், 'டாஸ்மாக் கடையை மூட வேண்டும்' என்று அந்தப் பகுதி பெண்கள் போராட்டம் நடத்திய நிலையில், தற்போது வியாபாரிகள், 'அந்தக் கடையை மூடக் கூடாது' என்று போராட்டம் நடத்தியுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

'விஜய் பிறந்தநாள் விழாவுக்காக 300 பேருந்துகளை காத்திருக்க வைப்பதா?'- அன்புமணி கண்டனம்

"விஜய் அவர்களின் 52-ஆம் பிறந்தநாளையொட்டி, புதிய பேருந்துகள் இயக்கத் தொடக்க விழாவுக்காக 300 பேருந்துகளை சென்னைக்கு வரவழைத்து காத்திருக்க வைப்பதா? மனிதவளம், எரிபொருளை வீணடித்தவர்கள் மீது நடவடிக்கை தேவை"... மேலும் பார்க்க

பாமக: மனதை மாற்றிய தேர்தல் தோல்வி! - கண்கலங்கிய ராமதாஸின் காலில் விழுந்த அன்புமணி - பின்னணி என்ன?

பாட்டாளி மக்கள் கட்சியில் மருத்துவர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான மோதல் ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், ராமதாஸ் அணி - அன்புமணி அணி என இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது கட்சி.... மேலும் பார்க்க

`தளபதி விஜய்...'- பேசிய காங்கிரஸ் கவுன்சிலர்; கூச்சலிட்டு அவையை முடக்கிய திமுகவினர்! - என்ன நடந்தது?

சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் இன்று ரிப்பன் பில்டிங்கில் நடந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டிருந்தது.திமுக -காங். மோதல்அவையில் நேரம... மேலும் பார்க்க

ஈரானுக்கு கிடைக்கும் $12 பில்லியன்: 'உணவுக்கும், மருந்துக்கும் தான்' ட்ரம்ப் தகவல்; ஈரான் மறுப்பு!

போர் நிறுத்தத்தில் ஈரானுக்கு இருக்கும் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று - ஈரானின் முடக்கப்பட்ட சொத்துகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பது ஆகும். இது ஸ்விட்சர்லாந்தில் நடந்து வரும் ஈரான், அமெரிக்கா பேச்சுவார்த... மேலும் பார்க்க

"காவல்துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால்.!" - உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை

"காவல் துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால், கழகம் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது" என்று தவெக அரசை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வ... மேலும் பார்க்க

விமர்சித்த அதிமுக கவுன்சிலர்; அடிக்க பாய்ந்த திமுக கவுன்சிலர்கள்! - மாநகராட்சி கூட்டத்தில் கடமுடா!

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் ரிப்பன் பில்டிங்கில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தின் போது அதிமுகவின் கவுன்சிலர் கே.பி.கே.சதீஷ் திமுகவினரை விமர்சனம் வைக்க, வாக்குவாதம் முற்றி திமுகவினர் சதீஷை ... மேலும் பார்க்க