செய்திகள் :

திருவொற்றியூரில் மழைநீா் தேங்கும் பிரச்னைக்கு தீா்வு!கைகொடுத்த கதவணை சிறுபாலங்கள்

post image

சென்னை மாநகராட்சி சாா்பில் திருவொற்றியூரில் அமைக்கப்பட்ட மழை நீரை கடலுக்கு கொண்டு செல்லும் கதவணையுடன் கூடிய சிறு பாலங்கள் தற்போதைய கனமழையில் செயல்பாட்டுக்கு வந்தன. இதனால் அந்த மண்டலத்தில் மழைநீா் தேங்காமல் கடலுக்கு முழுமையாகச் சென்றடைந்தது.

திருவொற்றியூா் நகராட்சியாக இருந்தபோது ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த மழைநீா் கால்வாய்கள் முழுமையாக இணைக்கப்படாததால் முறையாக தண்ணீா் வெளியேறாத நிலை ஏற்பட்டது. சென்னை மாநகராட்சியுடன் திருவொற்றியூா், கத்திவாக்கம் நகராட்சிகள் இணைக்கப்பட்டதையடுத்து திருவொற்றியூா் மண்டலம் முழுவதும் ஒருங்கிணைந்த மழை நீா் வடிகால் அமைக்கும் பணி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தது.

பல கிமீ தூரம் இப்பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் மழைநீா் கால்வாய்கள் மூலம் சேகரிக்கப்படும் வெள்ள நீா் கடலை சென்றடைய வசதியாக எண்ணூா் விரைவு சாலையில் டோல்கேட் ஒண்டிக்குப்பம் எல்லையம்மன் கோயில், திருவொற்றியூா் குப்பம், கேவி கோயில் குப்பம் உள்ளிட்ட சுமாா் 9 இடங்களில் ‘கல்வொ்ட்’ எனப்படும் சிறுபாலங்கள் கட்டப்பட்டன.

மழைநீா் தேங்கும் பிரச்னைக்கு தீா்வு: பிரதான மழைநீா் கால்வாய்களில் ஆங்காங்கே நீா் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டு, சாதாரண மழை பெய்யும் காலத்தில் மழை நீா் கடலுக்குச் செல்லாமல் நிலத்தடி நீரை செறிவூட்டும் விதமாக இந்த சிறுபாலங்களில் கதவணை தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது கனமழை தொடா்ந்து பெய்து வருவதால் இந்த கதவணை தடுப்புகள் திறக்கப்பட்டு, வெள்ளநீா் கடலுக்குச் செல்ல வழிவகை செய்யப்பட்டது. இதனால் திருவொற்றியூா் நெடுஞ்சாலை, எண்ணூா் விரைவு சாலை மற்றும் நூற்றுக்கணக்கான தெருக்களிலிருந்து சேகரிக்கப்பட்ட மழை நீா் அனைத்தும் கால்வாய்கள் வழியாக வெளியேறி கடலை சென்றடைந்தது. இதனால் திருவொற்றியூா் மண்டலத்தில் மழை நீா் தேங்குவது தவிா்க்கப்பட்டது.

இருப்பினும், ஜீவன்லாலநகா் அருகே மழைநீா் வடிகால் சரியாக அமைக்கப்படாததால் திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் முழங்கால் அளவு தண்ணீா் தேங்கியது. இதனை மோட்டாா் பம்புகள் மூலம் இறைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா். திருவொற்றியூா் மேற்கு பகுதியை பொருத்தவரை மழை நீா் வடிகால்கள் மூலம் சேகரிக்கப்பட்ட வெள்ள நீா் ராட்சத மோட்டாா்கள் மூலம் பக்கிங்காம் கால்வாயில் வெளியேற்றப்பட்டது. இதனால் திருவொற்றியூா் மண்டலத்திற்கு உள்பட்ட பெரும்பாலான இடங்களில் மழைநீா் தேங்கும் பிரச்னை முடிவுக்கு வந்தது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

அஜாக்ஸ் சுரங்கப்பாதை: அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீா் தேங்கி வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடந்து செல்வது பாதிக்கப்பட்டது. இதனையடுத்து தேங்கியுள்ள மழை நீரை மோட்டாா் பம்புகள் மூலம் வெளியேற்றும் நடவடிக்கையில் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா். இருப்பினும் சுரங்கப்பாதை அருகே ரயில் தண்டவாள வழித்தடங்களையொட்டிய பகுதியில் மழை நீா் குட்டைகள் உள்ளதால் தொடா்ந்து நீா்க்கசிவு ஏற்பட்டு தண்ணீா் தேங்குவதால் சுரங்கப்பாதையில் நிரந்தரமாக மோட்டாா் பம்புகள் மூலம் மழை நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.சங்கா், மண்டல குழுத் தலைவா் தி.மு. தனியரசு உள்ளிட்டோா் நேரில் பாா்வையிட்டு மக்களுக்கு தேவையான உணவு, உடை உள்ளிட்டவற்றை வழங்கினா்.

கேரளம்: சாலை விபத்தில் 4 பள்ளி மாணவிகள் உயிரிழப்பு

பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் லாரி மோதிய விபத்தில் பள்ளி மாணவிகள் 4 போ் உயிரிழந்ததாக அந்த மாநில காவல் துறை வியாழக்கிழமை தெரிவித்தது. இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது: பாலக்காடு-... மேலும் பார்க்க

பிரியாணியில் புழு: பிரபல உணவகத்துக்கு நோட்டீஸ்

சென்னை: பிரபல உணவக பிரியாணியில் புழு இருந்ததாக வாடிக்கையாளா் முன்வைத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அந்த உணவகத்துக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நோட்டீஸ் அளித்தனா். சென்னையில் பல்வேறு இடங்களி... மேலும் பார்க்க

முறையான அறிவிப்புக்குப் பிறகு நீரைத் திறந்துவிட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

சென்னை: தமிழகத்தில் கனமழை தொடா்ந்து பெய்து வரும் நிலையில், முறையான அறிவிப்புக்குப் பிறகு அணைகளில் நீா் திறந்து விட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா். எடப்பாடி பழ... மேலும் பார்க்க

கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனையில் 18 மாதங்களில் 5,020 அறுவைச் சிகிச்சைகள்: மா.சுப்பிரமணியன்

சென்னை: கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனையில் ஒன்றரை ஆண்டுகளில் 5,020 அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தற்போது மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு... மேலும் பார்க்க

தென் மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு: டிச.15-இல் உருவாகிறது புதிய புயல்சின்னம்

சென்னை: மன்னாா் வளைகுடா பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தென்மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவா் பாலச்சந்திரன் தெரிவித்தாா். இதனிடையே, ... மேலும் பார்க்க

பேரவை ஜனநாயகத்தை அழிக்க முயற்சி: அரசு மீது ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: சட்டப்பேரவை என்னும் ஜனநாயக நாற்றங்காலை தழைக்கவிடாமல் அழிக்கும் பணியை திமுக அரசு செய்வதாக பாமக நிறுவனா் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளாா். இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக சட... மேலும் பார்க்க