செய்திகள் :

திரைத்துறையில் இடையூறு செய்பவர்கள் யார்?- நடிகர் சிவகார்த்திகேயன் அளித்த பதில்.!

post image

சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.

இப்படம் இன்று (பிப்.27) வெளியாகி இருக்கிறது.

தாய் கிழவி
தாய் கிழவி

திரையரங்கில் படத்தைப் பார்த்த பிறகு ‘தாய் கிழவி’ படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கின்றனர்.

அப்போது பேசிய சிவகார்த்திகேயனிடம், 'திரைத்துறையில் சிலர் இடையூறு செய்கிறார்கள் என்று சொல்கிறீர்கள், அவர்கள் யார்?' என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், " அது யாருன்னு எல்லோரும் கேட்குறீங்க. ஆனால் நான் அது யாருன்னு சொன்னா யூடியூப் சேனலுக்கு இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா வியூஸ் வரும். இன்னொருத்தரை குறை சொல்லனும்'னு நான் அதை சொல்றது இல்ல.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

இந்த மாதிரியான விஷயங்களைத் தாண்டி தான் வரோம் என்கிறதை தான் சொல்றோம். ராதிகா மேம் கிட்டத்தட்ட 48 வருஷமாகத் திரைத்துறையில இருக்காங்க. அவுங்களும் இதை அனுபவிச்சு இருப்பாங்க. கம்பிளைன் பண்றதுக்காக அதையெல்லாம் நான் சொல்ல-ல. இந்த மாதிரியான சூழல்களைக் கடந்துதான் படங்களைப் பண்றோம்'னு சொல்றேன் அவ்வளவுதான்" என்று கூறியிருக்கிறார்.

ஆழி விமர்சனம்: ஒற்றைப் படகில் நடக்கும் உயிர்ப் போராட்டம் - சாகசமாக ஈர்க்கிறதா?

கப்பல் மற்றும் படகுகளைச் சீர் செய்யும் மெக்கானிக்காக இருக்கும் மூர்த்தி (சரத்குமார்) தனது மனைவி, மகளுடன் (முகில்) வாழ்ந்து வருகிறார்.படகுகளைச் சீர் செய்வதோடு போதைப் பொருட்களைக் கடத்தும் க்ரைம் வேலைகளை... மேலும் பார்க்க

`மின்னணு ஓட்டுப்பதிவு கண்டுபிடிப்பும், கடைசி வரை சொல்லாத மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கும்! | சுஜாதா 25

சுஜாதா என்றால் சுவாரஸ்யம். அழகியலையும் அறிவியலையும் குழைத்த பேனா. கன்னி மொழி, கணினி மொழி இரண்டுக்கும் அடையாளமான சுஜாதாவின் பெர்சனல் பக்கங்கள்...1. ஸ்ரீரங்கத்தைப் பூர்வீகமாகக்கொண்ட ரங்கராஜன் (சுஜாதா) ப... மேலும் பார்க்க

AK - SK: அஜித் படத்தை தயாரிப்பீர்களா?- சிவகார்த்திகேயன் அளித்த பதில்!

சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்... மேலும் பார்க்க

தாய் கிழவி விமர்சனம்: ரகளையான காமெடிகளைச் சுருக்குப் பையில் கட்டி, அலப்பறையைக் கூட்டும் பவுனுத்தாயி!

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி பவுனுத்தாயி (ராதிகா). கணவனைப் பிரிந்துவந்த தன் மகளோடு (ரேச்சல் ரெபேக்கா) வாழ்ந்து வரும் அவர், ஊர்க்காரர்களுக்கு வட்டிக்குக் கடன் கொடுப்பதும், அதை ... மேலும் பார்க்க

தாய் கிழவி : "சினிமாவை ஒரு படி முன்னே எடுத்துச் சென்றிருக்கும் படைப்பு"- ஜோதிகா பாராட்டு

சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்... மேலும் பார்க்க

ராஜூமுருகன் தயாரிப்பில் இயக்குநர் மணிரத்னம் பாராட்டிய குறும்படம் இது! - `லிட்டில் விங்ஸ்' சுவாரஸ்யம்

இயக்குநர்கள் மணிரத்னம், ராஜூமுருகன் ஆகியோரின் உதவியாளரான நவீன் இயக்கியிருக்கும் 'லிட்டில் விங்ஸ்' என்ற குறும்படத்தை ட்ரீம் வாரியர் சார்பில் எஸ்.ஆர்.பிரபு வெளியிடுகிறார். பல்வேறு சர்வதேச விழாக்களில் இந... மேலும் பார்க்க