செய்திகள் :

தீபாவளி - சிறுகதை

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

தன் போனை எடுத்து தங்கையை அழைத்தான் குமார்."ஹலோ,பிரியா எப்படி மா இருக்க??..வீட்டுக்கார், பசங்க எல்லாம் எப்படி இருக்காங்க?"

"அண்ணா நல்ல இருக்கேன் ணா.. எல்லாரும் நல்லா இருக்காங்க.. அங்க எல்லாரும் எப்படி இருக்காங்க??" என்று கேட்டாள் ப்ரியா.

"இருக்கோம் மா..அப்பா இறந்தது அப்புறம் இங்க ஒன்னும் சரி இல்ல மா.. வீடே வெறிச்சோடி இருக்குது.."என்றான் கண்ணீருடன்.

"அழாத னே.. நாங்கலாம் இருக்கோம்ல விற்றுவோமா என்ன"? என்று ஆறுதல் கூறினாள் ப்ரியா.

"சரி மா.. எப்போதும் போல இந்த தீபாவளிக்கும் எல்லாரும் வந்துருங்க..அதுக்கு தான் போன் பண்ணேன்.. இந்நேரம் அப்பா இருந்திருந்தால் ஒரு மாசம் முன்னாடியே போன் போட்டு சொல்லிருப்பார் . என்ன பண்றது.. எல்லாம் இப்டி ஆகிருச்சு.."

"பரவால்ல அண்ணா, நாங்கள் எல்லாரும் வந்துறோம்.. அம்மா எப்படி இருங்காங்க? அம்மாவே நல்ல பாத்துக்கோ" பேசிவிட்டு போனை வைத்தாள்.

குமாரின் அப்பா லிங்கம். அவர்க்கு நாலு பிள்ளைகள். குமார் மூத்தவன்.. பின் பிரியா,கீதா, மற்றும் வாசு. லிங்கம் இறந்து 6 மாதங்கள் தான் ஆகிறது. லிங்கம் கடுமையான உழைப்பாளி. மளிகை கடையில் வேலை பார்த்தே தன் பிள்ளைகளை ஆள் ஆக்கியவர். தன் வாழ்வின் கடைசி வரை உழைக்க தயங்காதவர். குடும்ப சந்தோஷத்தை பெரிதாக மதித்தவர். இரண்டு பெண் குழந்தைகளையும் தன் பார்வையில் இருக்க வேண்டும் என எண்ணி பக்கத்துக்கு ஊரிலேயே மணம் செய்து கொடுத்திருந்தார்.

மகன்கள் இருவருக்கும் மணம் முடித்து ஒரே வீட்டில் ஒற்றுமையாய் வாழ கற்று கொடுத்திருந்தார். நல்லது கெட்டது என எதுவானாலும் அவரே முன்நின்று நடத்துவார். சமுதாயத்திலும் குடும்பத்திலும் பெரிய மரியாதையை பெற்றுருந்தார் . இன்று அவரின் இழப்பு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி இருந்தது அவரின் குடும்பத்தில்.

தீபாவளி முன் தினம் குமாரின் தங்கைகள் இருவரும் குடும்பத்துடன் வந்திருந்தார்கள். வீடு சிறிது கல கல வென இருந்தது. கீதா வாசுவிடம் "இந்த முறை நமக்கு தீபாவளி இல்லையே.. பின் அண்ணன் ஏன் எல்லாரையும் தீபாவளி கொண்டாட வர சொன்னார்?" என்று கேட்டு கொண்டிருந்தாள்.

"இல்லை கீதா.. அப்பா எப்பவும் நாம் அனைவரும் ஒற்றுமையாக சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றே விரும்பினார். அதற்கு வாய்ப்பு வரும்போது நாம் தவற விட கூடாது என் அடிக்கடி கூறுவார். அதனால் தான் இந்த ஏற்பாடு" என்றான் அங்கு வந்த குமார்.

பொழுது விடிந்தது. தீபாவளியும் வந்தது. ஊர் முழுக்க புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடியது. வீட்டின் வெளியே சத்தம் உள்ளே அமைதி என முரண் பாடாக இருந்தது. குமார் வீட்டில் அனைவரும் குளித்து முடித்து பழைய ஆடையே உடுத்தினர். வழக்கமாக லிங்கம் கடன் வாங்கியேனும் வருடா வருடம் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கடைக்கு கூட்டி சென்று புத்தாடை எடுத்துக் கொடுத்து விடுவார். இந்த முறை புத்தாடையும் இல்லை, அவரும் இல்லாதது அனைவர்க்கும் வருத்தத்தை ஏற்படுத்தியது. அவரின் நினைவாக அனைவரும் அவர் போட்டோ வை வைத்து வழிபட்டனர்.

அப்போது போட்டோவில் இருந்த பூ ஒன்று மெதுவாக கீழே விழுந்தது. அனைவரும் அதை கவனித்து லிங்கத்தின் ஆசியாக அதை கருதி மனம் மகிழ்ந்தனர். பிறகு அனைவரும் காலை உணவு உண்ண ஒன்றாக அமர்ந்தனர். அப்போது லிங்கத்தின் பேரன் அவரை மாதிரி வேட்டி சட்டை அணிந்து வந்து அனைவருக்கும் உணவு பரிமாறினான்.யாரும் பேசவில்லை. அவர்களுக்கு அது போதுமானதாக இருந்தது. லிங்கம் இல்லாமல் அவரின் நினைவுகளுடன் வீட்டில் தீபாவளியும் புது சந்தோஷமும் தொடங்கியது..

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

நாராயணின் நிலம்! - சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

கால நதியில் ஒரு பயணம்: பொன்னியின் செல்வன் சுவடுகளில் 'பழையாறை' வரை!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சடுகுடு பாட்டும்... ஜில் நினைவுகளும்: பாரதிபுரத்தை அதிரவைத்த பனிமலர் கபடிக்குழு!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

அணுவைப்பிளந்த அறிவுச்சுடர்: பாகுபாடுகளை வென்ற லீஸ் மெயிட்னரின் சாதனைப் பயணம்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

விண்மீன்களின் துடிப்பைக் கண்டறிந்த சாதனைப் பெண்! - அங்கீகாரம் மறுக்கப்பட்ட கதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

ஒரு நட்பு பகிர்ந்த அந்தப் பாடல்! - ஜில் நினைவுகள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்வாழ்க்கையின் ஓட்டத்தில் நாம் ரச... மேலும் பார்க்க