செய்திகள் :

"தீய சக்தி திமுக-வை தாய் கழகம் என்று நினைத்து கொண்டு.!"- ஓ.பி.எஸ் குறித்து சசிகலா

post image

அதிமுகவில் மூன்று முறை முதலமைச்சராகவும், 5 முறை எம்.எல்.ஏ வாகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று (பிப். 27) திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்திருக்கிறார்.

ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது குறித்து சசிகலா தனது எக்ஸ் பக்கத்தில் அதிருப்தியை பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ``தமிழக முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடியும், சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது.

திமுகவில் இணைந்த ஒபிஎஸ்
திமுகவில் இணைந்த ஒபிஎஸ்

தமிழகத்திலிருந்து அகற்றப்படவேண்டிய ஒரு தீய சக்தியாக திமுக விளங்கும் நிலையில் தாய் கழகம் என்று நினைத்து கொண்டு திமுகவில் தங்களை இணைத்துக்கொள்வது ஒரு தவறான முடிவாகத்தான் அமைந்துள்ளது.

ஆனால் இந்த நிலைமைகளுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான். அவர் வேறு யாருமில்லை.

தான் மட்டும்தான் அதிமுக என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு தனக்கு தானே தலைவராக அறிவித்துக் கொண்டவர்கள், தன்னை சுற்றியுள்ளவர்களையும் ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள், திமுகவினரின் முழு கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள அனைவரையும் வெளியேற்றி விட்டு புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கொள்கைகளுக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டுவரும் துரோகிகளின் அழிவுகாலம் நெருங்கிவிட்டது.

திமுகவில் இணைந்த ஒபிஎஸ்
திமுகவில் இணைந்த ஒபிஎஸ்

இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் எனது தலைமையில் புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிவந்த சிங்கங்களும் எதிரிகளையும் துரோகிகளையும் வீழ்த்துவது உறுதி" என்று பதிவிட்டிருக்கிறார்.

'அறிவாலயத்துல கால் வச்ச உடனே பொள பொளன்னு கண்ணீர்..!' - தவிக்கும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்!

அறிவாலயம் பக்கமாக வண்டியை திருப்பி `தர்மயுத்தத்தை' முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார் ஓ.பி.எஸ். 'இனிமே என்னோட உழைப்பு மொத்தமும் உதயசூரியனுக்குதான்!' என ஓ.பி.எஸ் கூறினாலும் அவருடன் வந்த ஆதரவாளர்கள் கொஞ்... மேலும் பார்க்க

ஸ்டாலின் காய் நகர்த்தல்: திமுக-வில் ஓ.பன்னீர்செல்வம்... தென் மாவட்ட கணக்கு கைகொடுக்குமா?

அ.தி.மு.க-வின் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க-வின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை முறைப்படி தி.மு.க-வில... மேலும் பார்க்க

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே பேர் பதற்றம்: காபூல், கந்தகாரில் பாகிஸ்தான் குண்டுமழை

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே எல்லையில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் ஆதரவு கொடுப்பதாக பாகிஸ்தான் கூறி வருகிறது. அதோடு பாகிஸ்தான் எல்லையில் உள்ள ... மேலும் பார்க்க

ஜெயலலிதாவின் தலைமைத் தோற்றம்; கருணாநிதியின் சாமர்த்தியம் - அரசியலை மாற்றியமைத்த தொலைக்காட்சிகள் | 07

தமிழக அரசியலை மாற்றியமைத்த தொலைக்காட்சிகள்! நினைவுச் சுவடுகள் 07இந்திய அரசியலில், ஊடகமும் அரசியலும் மிக நெருக்கமாக இணைந்துள்ள மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. சமூக ஊடகங்கள் வருவதற்கு முன்னரே, அரசியல் தலை... மேலும் பார்க்க

`ஓ.பன்னீர்செல்வம் செய்தது துரோகத்தின் உச்சக்கட்டம்!' - திமுகவில் இணைந்தவரை விளாசும் அதிமுக

அ.தி.மு.க-வில் நீண்டகாலம் முக்கிய பொறுப்புகளை வகித்த ஓ.பி.எஸ்., 2017-ல் ஜெயலலிதா மறைவுக்குப் பின் முதலமைச்சராகப் பதவியேற்றார். அதற்குப்பின் நிலவிய அதிகாரப் போட்டியில் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோ... மேலும் பார்க்க

`இனி எனது உழைப்பு முழுவதும் உதயசூரியன் சின்னத்துக்கே.!' - திமுக-வில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம்

தமிழக அரசியலில் நிலவி வந்த பல மாத கால யூகங்களுக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க-வின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், இன்று சென்னை அண்ணா அறிவ... மேலும் பார்க்க