செய்திகள் :

துப்பாக்கிச்சூடு விவகாரம்: ஸ்டிக்கர் கிழிக்காத புது செருப்பு! - ஆதாரங்கள் ஜோடிக்கப்படுகிறதா?

post image

துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 3 தமிழர்களுக்கு எதிராக கர்நாடக வனத்துறையினர் ஆதாரங்களை ஜோடிப்பதாக எழுந்துள்ள விமர்சனம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று தமிழர்கள் மீது துப்பாக்கிச்சூடு

கடந்த 15-ஆம் தேதி கர்நடகா மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் ஷாக்யா வனப்பகுதியில் மான் வேட்டையாடியதாக அப்பகுதியில் குடியிருக்கும் அந்தோணிசாமி, ஜான்ரோஸ் பீட்டர், டேவிட் குமார் ஆகிய மூன்று தமிழர்கள் வனத்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கர்நாடகாவிலும், தமிழ்நாட்டிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களிடமிருந்து தப்பித்த மகிமைதாஸ் தற்போது தலைமறைவாக இருக்கிறார்.

மேய்ச்சலுக்கு சென்ற மாடுகளை காணாமல் தேடிச்சென்றவர்களை வனத்துறையினர் அநியாயமாக சுட்டுக்கொன்றதாக கொல்லப்பட்டவர்களின் உறவினர்களும் கர்நாடக மாநில எதிர்க்கட்சியினரும் குற்றம் சாட்டி வருகிறார்கள். தமிழ்நாடு அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் இச்சம்பவத்தை கண்டித்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

வனத்துறையினரால் காட்டப்பட்ட புதிய ஆதாரங்கள்

மான் வேட்டையை தடுக்க சென்றபோது தங்களை துப்பாக்கியால் சுட வந்ததால் தற்காப்புக்காக சுட்டதாகவும், அவர்களிடமிருந்து 3 நாட்டு துப்பாக்கிகள், 35 கிலோ மான் இறைச்சியை கைப்பற்றியதாகவும் முதலில் தெரிவித்த வனத்துறையினர், பிரச்சனை பெரிதாகி மக்கள் மத்தியில் கொந்தளிப்பு உண்டானது தெரிந்தபின் மேலும் சில பொருட்ளை விசாரணை நடத்தி வரும் சாம்ராஜ் நகர் உதவி கலெக்டர் தினேஷ்குமார் மீனாவிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதில், 4 கத்திகள், 2 திருப்புலிகள், ஒரு கட்டிங பிளேயர், ஒரு டெஸ்டர், ஒரு லேட்டஸ்ட் மாடல் மொபைல் போன், ஒரு சாதாரண மாடல் மொபைல் போன், ஒரு துண்டு, 3 டார்ச் லைட்டுகள், 2 மீன் வலைகள், ஒரு ஜோடி ரப்பர் செருப்பு ஆகியவற்றை கைப்பற்றியதாக காட்டியுள்ளனர். அதில் ரப்பர் செருப்பு புத்தம் புதிதாக ஸ்டிக்கர் கூட கிழிக்காமல் இருப்பதுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள்

"இவை உண்மையில்லை, சண்டை நடந்திருந்தால் செருப்பு அழுக்காகி இருக்கும், ஆனால், புத்தம் புதிதாக உள்ளது. கொல்லப்பட்ட அப்பாவிகளை பெரும் வேட்டைக்காரர்களாக காட்டுவதற்காக வனத்துறையினரால் ஜோடிக்கப்பட்ட ஆதாரங்கள்" என்கிறார்கள் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள்.

இதற்கிடையே தப்பித்துச் சென்று தலைமறைவாக உள்ள மகிமைதாஸ், "குண்டடிபட்டு காயமடைந்த நான் சிகிச்சை பெற்று தற்போது தலைமறைவாக உள்ளேன். வெளியில் வர பயமாக உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க நான் வரவேண்டும் என்று வனத்துறை, காவல்துறை, அரசுத்துறையினர் என் குடும்பத்தினரிடம் கூறி வருகிறார்கள். ஆனால், எனக்கு வெளியில் வர அச்சமாக உள்ளது" என்று பேசி வெளியிட்டுள்ள வீடியோவும் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

வனத்துறையினர் மீது கர்நாடக காவல்துறையினர் இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யாத நிலையில் சாம்ராஜ் நகர் உதவி கலெக்டர் தினேஷ்குமார் மீனா தலைமையிலான அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

இரவு பார்ட்டிக்கு எதிர்ப்பு, கேமரா மூலம் கண்காணிப்பு: ஆத்திரத்தில் மாமனாரை ஆள்வைத்து கொன்ற மருமகள்!

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர் வினீத் மினோச்சா (63). தொழிலதிபரான இவரின் மருமகள் பெயர், ஷாலு. சம்பவத்தன்று வினீத் அவரது வீட்டில் 26 முறை கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டார். இது தொடர்பா... மேலும் பார்க்க

நெல்லை: மது பாட்டிலுக்கு ஆசைப்பட்டு கார் கடத்திய இளைஞர்கள் - போதை தெளிந்ததும் சிறை சென்ற சோகம்!

நெல்லை டவுன், கல்லத்தி முடுக்கு தெருவைச் சேர்ந்தவர், சூர்ய சரவணன். பட்டப் படிப்பை முடித்த இவர், வேலை தேடிவருகிறார். தன் தந்தை குமரகுரு ராமலிங்கத்தின் காரை, சூர்ய சரவணன் பயன்படுத்தி வந்தார்.வீட்டுக்குள... மேலும் பார்க்க

`Will Kill Sugar Daddy Soon' - மனைவியைக் கொன்று தலையை ஃபிரிட்ஜில் வைத்த இளைஞர் `பகீர்' தகவல்!

அஸ்ஸாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டிலிருந்து வந்த துர்நாற்றத்தைத் தொடர்ந்து, பக்கத்து வீட்டுக்காரர்கள் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் வி... மேலும் பார்க்க

குழந்தை திருமணங்களால் மூன்று சிறுமிகள் கர்ப்பம்! – போக்சோ வழக்கில் இளைஞர்களை தேடும் கடலூர் போலீஸ்

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, செவிலியர் கல்லூரியில் படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்குச் சென்... மேலும் பார்க்க

மும்பை விமான நிலையத்தில் பயணிகள் பேக்கில் தொடரும் பணம், நகை திருட்டு! குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை

மும்பை விமான நிலையத்தில் பயணிகளின் பேக்கில் இருந்து அடிக்கடி திருட்டு நடக்கிறது. சமீபத்தில் மும்பையில் இருந்து நியூயார்க் சென்ற மாணவர் ஒருவரின் பேக்கில் இருந்து 5 ஆயிரம் அமெரிக்க டாலர் திருட்டு போனது.... மேலும் பார்க்க

வீட்டிக்கு வெளியில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட மணிப்பூர் பாடகர் - அடித்து கொன்ற ஹோட்டல் ஊழியர்கள்

மணிப்பூரை சேர்ந்த பாடகர் விக்ரம் சிங் என்பவர் டெல்லி அருகில் உள்ள கிலோகரி என்ற கிராமத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். அவரது வீட்டிற்கு அருகில் ஒரு ஹோட்டல் இருக்கிறது. அங்குள்ள விக்ரம் சிங் வீட்டிற்... மேலும் பார்க்க