தில்லி தேர்தலில் வாக்களித்த குடியரசுத் தலைவர், ஜெய்சங்கர், ராகுல்!
துவரங்குறிச்சியில் நாளை மின் நிறுத்தம்
மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (பிப். 6) மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளா் இரா. தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: துவரங்குறிச்சி துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் துவரங்குறிச்சி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நாட்டாா்பட்டி, அதிகாரம், சடவேலாம்பட்டி, உசிலம்பட்டி, ஆலம்பட்டி, இக்கரைகோசிகுறிச்சி, செவந்தாம்பட்டி, தெத்தூா், செவல்பட்டி, பிடாரபட்டி, வெங்கட்நாயக்கன்பட்டி, அடைக்கம்பட்டி, நல்லூா், பில்லுப்பட்டி, யாகபுரம், கல்லுப்பட்டி, பொருவாய், வேளங்குறிச்சி, மருங்காபுரி, காரைப்பட்டி, கரடிப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, சிங்கிலிப்பட்டி, எம். இடையப்பட்டி மற்றும் பழைய பாளையம் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.