செய்திகள் :

தூத்துக்குடி: `சரியாக பூட்டப்படாத கைதி அறை; கண்ணயர்ந்த போலீஸார்' - கைதி தப்பியோடிது எப்படி?

post image

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகிலுள்ள பன்னம்பாறையைச் சேர்ந்தவர் தமிழரசன். இவர் மீது அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், சமீபத்தில் நடந்த அடிதடி வழக்கு தொடர்பாக மெஞ்ஞானபுரம் காவல்நிலைய போலீஸார் தமிழரசனை கைது செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டியதிருந்ததால், காவல் நிலையத்திலுள்ள கைதி அறையில் அடைத்து வைத்திருந்தனர். இந்த நிலையில் பாதுகாப்பு பணியில் இருந்த கண்ணயர்ந்து தூங்கவே கைதி அறையில் இருந்த தமிழரசன், கதவை திறந்து தப்பியோடியுள்ளார்.

மெஞ்ஞானபுரம் காவல் நிலையம்

இந்த நிலையில், தமிழரசனை விசாரிப்பதற்காக அழைத்துவரும்படி அதிகாரிகள் கூறியுள்ளனர். அப்போது போலீஸார் கைதி அறைக்குச் சென்று பார்த்தபோது தமிழரசனைக் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த போலீஸார், சி.சி.டி.வி கேமராவை ஆய்வு செய்த போது தமிழரசன் தப்பியோடியது தெரிய வந்தது.  

வழக்கமாக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பழைய, சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், ஜாமீனில் வெளி வந்த குற்றவாளிகளை கண்காணித்து தனிப்பிரிவு போலீஸார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அவ்வப்போது தகவல் அளிக்க வேண்டும் என்பது விதி.

ஆனால், தற்போது விசாரணைக்கைதியாக பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தமிழரசன் குறித்து தனிப்பிரிவு போலீஸார் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.  

இதுகுறித்து சில போலீஸாரிடம் பேசினோம், “ஒவ்வொரு காவல் நிலையத்திலும் விசாரணைக்கைதிகள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டால், கைதிகள் அறையில் அடைத்து பாதுகாக்கப்படுவது வழக்கம். சம்மந்தப்பட்ட குற்ற வழக்கில் முழு விசாரணை நடைமுறைக்கு வந்த பிறகே அதில் தொடர்புடையவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

மெஞ்ஞானபுரம் காவல் நிலையம்

அதுவரை கைதி அறையிலேயே பாதுகாக்கப்படுகின்றனர். இதுதான் தற்போது வரை நடைமுறையில் உள்ளது. ஆனால், விசாரணையில் கைதி அறையை போலீஸார் சரியாக பூட்டவில்லை என்பது தெரிய வந்துள்ளது. முறையாக அறைக் கதவை பூட்டு போட்டு பூட்டப்பட்டிருந்தால் கைதி தமிழரசன் தப்பித்துச் செல்ல வாய்ப்பிருந்திருக்காது. பணியில் இருந்த போலீஸார் மற்றும் தனிப்பிரிவு போலீஸாரிடம்  விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.” என்றனர்.  

சிவகாசி: மகளைக் காதலித்த 2 இளைஞர்களை அடுத்தடுத்து கொலை செய்த தந்தை; சிக்கியது எப்படி?

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகிலுள்ள செவளூரைச் சேர்ந்தவர் பிரபாகரன். லாரி டிரைவரான இவர், அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் 17 வயது மகளைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து தெரிந்... மேலும் பார்க்க

`ஒரே இடத்தில் 364 ரௌடிகள்; இனிமேல் எந்த குற்றத்திலும் ஈடுபடக்கூடாது' - திருச்சி எஸ்.பி வார்னிங்

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 364 பேரை திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையினர் வரவழைத்தனர். அவர்கள் அனைவரையு... மேலும் பார்க்க

கம்போடியாவில் இருந்து மும்பை பெண்ணை டிஜிட்டலில் கைது என்று சொல்லி ரூ.60 லட்சம் பறிப்பு: 4 பேர் கைது

பெண்கள் மற்றும் முதியவர்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. இந்த சம்பவங்களில் ஏராளமானோர் கோடிக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். புதிதாக மும்பையை சேர்... மேலும் பார்க்க

மலேசியா டு திருச்சி: நகைகளை திருப்பி தராமல் ஏமாற்றிய நான்கு பேர்! - போலீஸார் விசாரணை

திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முதர் மைதீன் (63). இவர், என்.எஸ்.பி பகுதியில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவரது சகோதரியின் மகன் சாதிக் பாஷா. இவர், மலேசியாவில் வேலை செய்து வருகிற... மேலும் பார்க்க

சென்னை: வாட்ஸ்அப் காலில் ஆபாச செயல்; ஆதாரத்துடன் புகாரளித்த பெண்ணால் சிக்கிய ஐடி ஊழியர்

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் திருமணமாகி பெண் குழந்தையுடன் சென்னை, எழும்பூரில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். 03.05.2026-ம் தேதி மாலை அந்தப் பெண் வீட்டிலிருந்தபோது, அவர... மேலும் பார்க்க

விருதுநகர்: கண்களில் மிளகாய்பொடி தூவி கொலை செய்யப்பட்ட வி.சி.க முன்னாள் நிர்வாகி - நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள குரண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுரு. இவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் காரியாபட்டி ஒன்றியத்தின் முன்னாள் துணைச் செயலாளராக இருந்தவர். இவர், குரண்டி க... மேலும் பார்க்க