செய்திகள் :

தூத்துக்குடி சிறுமி பாலியல் வழக்கு; 'ஆயுள் தண்டனை கைதிக்கு ஜாமீன் கிடைத்தது எப்படி?'- அண்ணாமலை

post image

சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளத்தில் 17 வயது சிறுமி இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இடத்தில், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, சடலமாக மீட்கப்பட்ட செய்தி, அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

குற்றவாளியைக் கைதுசெய்ய வலியுறுத்தி, பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபரைக் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

தர்ம முனீஸ்வரன் 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்தவர் என விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

பாலியல் கொடுமை - கொலை

தற்போது இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தில், பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் தாக்குதல் நடத்தி, கொடூரமாகக் கொலை செய்து, பத்து நாட்கள் கடந்தும், காவல்துறை குற்றவாளியைக் கைது செய்யவில்லை.

குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்களின் கடுமையான போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபரைக் கைது செய்திருப்பதாக, திமுக அரசின் காவல்துறை அறிவித்திருக்கிறது. ஆனால், இதில் பல கேள்விகள் எழுகின்றன.

கடந்த 2020 ஆம் ஆண்டு, தூத்துக்குடி எட்டயபுரம் அருகே, 65 வயது முதிர்ந்த பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்குள்ளாக்கி கொலை செய்த வழக்கில், கடந்த 2022 ஆம் ஆண்டு, சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபர் கைது செய்யப்பட்டார்.

வழக்கு முடிவில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த நிலையில், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில், அந்த வழக்கு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாகவும், தற்போது செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

தர்ம முனீஸ்வரன்
தர்ம முனீஸ்வரன்

ஒரு வயதான பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கிக் கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிக்கு, உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கும் அளவுக்கு, திமுக அரசு அந்த வழக்கை மெத்தனமாகக் கையாண்டிருக்கிறது. மறுபக்கம், பல வழக்குகள் கொண்ட ஒரு சரித்திரப் பதிவேடு குற்றவாளி, ஜாமீனில் வெளிவரும்போது, அவனைத் தொடர்ந்து கண்காணிக்காமல் தமிழகக் காவல்துறை இருந்திருக்கிறது.

மேலும், சிசிடிவி காட்சிகள் மூலம் இந்தக் குற்றவாளியைப் பிடித்ததாகக் கூறும் காவல்துறை, சிசிடிவியை ஆராய பத்து நாட்கள் எடுத்துக் கொண்டது என்பதும் கேள்விக்குரியதே.

பொதுமக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் திரு. ஸ்டாலின் இதற்கு பொதுமக்களிடம் விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.

சீனா நோக்கிச் சென்ற 7 ரஷ்ய கப்பல்கள்; திடீரென இந்தியாவுக்கு வருவது ஏன்?!

சீனாவுக்குச் செல்லவிருந்த ஏழு ரஷ்ய கச்சா எண்ணெய் கப்பல்கள், திடீரென திசைமாற்றப்பட்டு இந்தியா நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. மத்​திய கிழக்கு பிராந்​தி​யத்​தில் நில​வும் போர்ப் பதற்​றம் காரணமாக, ஹார்​மு... மேலும் பார்க்க

தேமுதிக-வுக்கு எவ்வளவு ஓட்டு? விஜய்யின் தாக்கம் என்ன? - நேர்காணலில் ஸ்டாலின் கேட்ட முக்கிய கேள்வி!

சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கடந்த மூன்று நாட்களாக நேர்காணல் நடத்தி வருகிறார். இந்நிலையில், கொங்கு மண்டலத்துக்கு நடந்த இன்றைய நேர்காணலில்... மேலும் பார்க்க

`வெய்ட்டா கவனிக்கணும்' - அள்ளி இறைக்கத் திட்டமிடும் அதிமுக? - அதிரும் ஆற்காடு தொகுதி!

ராணிப்பேட்டை மாவட்டத்தில், மொத்தம் 4 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இதில், மாவட்டத் தலைநகரை உள்ளடக்கிய ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ-வாக தி.மு.க மாவட்டச் செயலாளரும், கைத்தறித்து... மேலும் பார்க்க

`பா.ஜ.க-வை டென்சனாக்கிய இருவர் அணி' - கடைசி நேரத்தில் `நோ' சொன்ன விஜய்!

“நாங்கள் எப்போதும் மதசார்பற்ற கொள்கை என்பதிலோ, மதசார்பற்ற சமூக நீதி என்ற நிலைப்பாட்டிலோ சமரசம் வைத்துக் கொள்ள மாட்டோம். நமது தலைமையில்தான் ஆட்சி என்பதில் உறுதியாக இருக்கிறோம்.” என்று இஃப்தார் நிகழ்ச்... மேலும் பார்க்க

'ரூ1.25 லட்சத்துக்கு குடும்பத்துக்கே விருப்ப மனு வாங்குனேன்!' - அறிவாலயத்தை வியக்க வைத்த உடன்பிறப்பு

அறிவாலயத்தில் வேட்பாளர் நேர்காணலை பரபரப்பாக நடத்திக் கொண்டிருக்கிறது திமுக. இன்று நடந்த நேர்காணலில் முதல்வர் ஸ்டாலினை பார்க்க வேண்டும் என்பதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விருப்ப மனு கொடுத்து ... மேலும் பார்க்க