செய்திகள் :

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கிய நீதிமன்றம்

post image

தூத்துக்குடியில் இயங்கி வந்த வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22.05.2018 அன்று நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியதை அடுத்து, போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்கள் தொடர்பாக 20 பேர் தொடர்ந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு, நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

துப்பாக்கிச்சூடு
துப்பாக்கிச்சூடு

"ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டதா?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அரசு வழக்கறிஞர், "அறிக்கையின் ஒரு பகுதி ஏற்றுக்கொள்ளப்பட்டு அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டுள்ளது. அதில் பரிந்துரைக்கப்பட்ட அதிகாரிகள் மீதான துறை ரீதியான நடவடிக்கைகள் பரிசீலனையில் உள்ளன" எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து, "பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 30 லட்சம் இழப்பீடு மட்டுமே வழங்கப்பட்டதா?" என நீதிபதிகள் கேட்டனர். அதற்கு அரசு சார்பில், நிவாரணத் தொகை, அரசு வேலை வழங்கப்பட்ட விவரங்கள் மற்றும் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விளக்கமான பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய ஒரு வார கால அவகாசம் கோரப்பட்டது.

துப்பாக்கிச்சூடு
துப்பாக்கிச்சூடு

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 8 ஆண்டுகளாக நீதிக்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்தனர். அதற்கு "பொறுமை கடலினும் பெரிது" எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய கால அவகாசம் அளித்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

ஆபரேஷன் தண்டர்: ஓணத்துக்கு டிரஸ் எடுக்க போனோம்! - தாயும் உடந்தை; குடும்பத்துடன் போதைபொருள் கடத்தல்!

கேரளாவில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க 'ஆபரேஷன் தண்டர்' என்ற பெயரில் கலால் அமலாக்கம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு சிறப்புப் படையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், பெங்களூருவிலிருந... மேலும் பார்க்க

ஊட்டி: கன்னத்தில் மாறி மாறி அறைந்து கொண்ட போலீஸ் - ஹெட்மாஸ்டர்! நடந்தது என்ன?

நீலகிரி மாவட்டம் ஊட்டி மணிக்கூண்டு பகுதியில் நேற்று மாலை வந்த ஒரு காரை காவல்துறையினர் தடுத்தி நிறுத்தி சோதனை செய்துள்ளனர். வாகனத்தை ஓட்டி வந்த கடநாடு அரசுப்பள்ளி தலைமையாசிரியர் சீனிவாசன் என்பவர் மது ப... மேலும் பார்க்க

``20% கமிஷன் வேணும்… இல்லைன்னா பில் போடமாட்டேன்” - ரூ.1 லட்சம் லஞ்சம்; சிக்கிய வனச்சரக அலுவலர்!

தென்காசி மாவட்டம், புளியங்குடி சின்னமலை மற்றும் சிவகிரி வனப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் யானைகள் ஊருக்குள் புகுவதைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் யானை தடுப்பு அகழி பணியில், ஒப்பந்ததாரரிடம் பில்... மேலும் பார்க்க

சென்னை: `முதலில் தங்கை... அடுத்து மனைவி' - எலக்டரீசியனைக் கொலைசெய்த வியாபாரி; பகீர் பின்னணி!

சென்னை செங்குன்றம், பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினவேல் பாண்டியன் (40). இவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு புழல், காவாங்கரையைச் சேர்ந்த சரவணன் என்பவரின் தங... மேலும் பார்க்க

`இங்கதான் இருப்பா' - சிறுமியை பாலியல் கொடுமை செய்து கொன்றுவிட்டு உறவினர்களுடன் சேர்ந்து தேடிய இளைஞர்

மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் 9 வயது சிறுமி நான்காம் வகுப்பு படித்து வந்தாள். அவளது பெற்றோர் விவசாய வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், உடல் நிலை சரியில்லாமல் சிறுமி பள்ளிக... மேலும் பார்க்க

தூத்துக்குடி: திருமணம் மீறிய உறவு; பெண்ணை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்றவர் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சால்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மனைவி குருவலட்சுமி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். அதே பகுதி... மேலும் பார்க்க