செய்திகள் :

தூத்துக்குடி: முருங்கைக்காய் கிலோ ரூ.320, கத்தரிக்காய் ரூ.120 - விலை உயர்வுக்கு காரணம் என்ன?

post image

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 2,000 எக்கர் பரப்பளவில் யாழ்ப்பாணம், வலையப்பட்டி, அழகிவிளை, சாகவச்சேரி, குருஷ், கோபால், டேனியல் ஆகிய நாட்டு ரகங்களைப் பரவலாகச் சாகுபடி செய்கிறார்கள்.

தமிழகத்தின் பல பகுதிகளில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டாலும் இப்பகுதி முருங்கைக்கு தனி மவுசு உண்டு. 

முருங்கைக்காய்
முருங்கைக்காய்

 13 ஆண்டுகளாக இயற்கை முறையில் முருங்கை சாகுபடி செய்து வரும் சாத்தன்குளத்தைச் சேர்ந்த விவசாயி அரவிந்தனிடம் பேசினோம்,

“சாத்தான்குளம் சுத்து வட்டாரப் பகுதிகள் எல்லாமே செம்மண் தேரிதான். எல்லா விவசாயிகளும் சொல்லி வச்சமாதிரி முருங்கைதான் சாகுபடி செய்கிறார்கள்.

திருச்செந்தூர்ல இருந்து சாத்தான்குளத்துக்கு பேருந்துல ஏறினா சாலையின் இரண்டு புறமும் முருங்கை தோட்டங்களாகத்தான் தெரியும். செடி முருங்கையை விட, நாட்டு முருங்கை சாகுபடி செய்யுறவங்கதான் அதிகம்.

நாட்டு முருங்கைக்காய்தான் திரட்சியா இருக்கும். சந்தையில இந்த முருங்கைக்கு எப்பவுமே தேவை இருக்கு.  பொதுவாக நாட்டு ரகத்தின் காய்கள், மழைநேரத்திலும் அதே அடர்பச்சை நிறம் மாறமால் இருக்கும். இந்த முருங்கைக் காய்களோட தோல் சற்று கடினமா இருப்பதனால் காய்களை பறித்து  3 நாள் வரைகூட இருப்பு வைக்க முடியும்.

வாடல்தன்மையும் குறைவு என்பதுடன் சதைப்பற்றும் அதிககமா இருக்கும். தற்போது பெய்து வரும் தொடர் கன மழையால் மரங்களில் பிசின் வடிந்து விடுகிறது. பூக்கள், பிஞ்சுகள் காற்றில் உதிர்ந்துவிடுவதால் பெரிய அளவில் விளைச்சல் இல்லை. ஆனால், குறைந்த விளைச்சல் என்றாலும் தற்போது நல்ல விலை கிடைக்கிறது” என்றார்.   

கத்தரிக்காய்
கத்தரிக்காய்

தூத்துக்குடி மாவட்டம், போலையார்புரத்திலுள்ள கனி முருங்கை கமிஷன் மண்டியின் உரிமையாளர் கார்த்திக்கிடம் பேசினோம், “திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை விடவும் அதிக டன் எண்ணிக்கையில் இங்கிருந்துதான் முருங்கைக்காய்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வளையாத காய், அதிக சதைப்பற்று, இருப்பு வைக்கும் தன்மை ஆகியவற்றால்தான் இப்பகுதி காய்கள் வியாபாரிகளால் அதிகம் விரும்பப்படுகிறது.

லண்டன், இங்கிலாந்து, கனடா, துபாய், மலேசியா ஆகிய பல நாடுகளுக்கு இங்கிருந்து விமானம் மூலமாகவும், தூத்துக்குடி மற்றும் கேரளாவின் கொச்சின் துறைமுகத்தில் இருந்தும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

விலை ஏற்றத்திற்கு காய்களின் வரத்து குறைவும் ஒரு காரணம். தற்போது கார்த்திகை மாதம் என்பதால் பெரும்பாலானோர் சைவ உணவுகளையே விரும்பி சாப்பிடுவார்கள்.

முருங்கைக்காய்
முருங்கைக்காய்

சுபமுகூர்த்த நாட்கள், ஐயப்ப பக்தர்களின் விரதம் ஆகியவற்றால் தற்போது நல்ல விலை கிடைக்கிறது. கடந்த ஒரு வாரமாக ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.200 முதல் ரூ.250 வரையிலும் விலை போனது. தற்போது காய்களின் வரத்து வெகுவாகக் குறைந்துவிட்டதால் ஒரு கிலோ ரூ.300 முதல் ரூ.320 வரை விலை போகிறது. அதே போல் கத்தரிக்காயும் ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விலை போகிறது,” என்றார்.   

பசுமை சந்தை

விற்க விரும்புகிறேன்ப.மோகனப் பிரியா,உடுமலைப்பேட்டை,திருப்பூர்.90034 22422பூங்கார் சத்து மாவு, ரத்தசாலி சத்து மாவு, மணிச்சம்பா உப்மா, புட்டு மாவு வகைகள்.கே.எஸ்.கணேசன்,கும்பகோணம்,தஞ்சாவூர்.93443 00656இய... மேலும் பார்க்க

இயற்கை உரம் என்ற பெயரில் ரசாயன உரம் விற்பனை; குடோனுக்கு சீல்; சிக்குகிறார்களா வேளாண் அதிகாரிகள்?

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அடுத்துள்ள இ.ராமநாதபுரம் கிராமத்தில் பொன்னுச்சாமி என்பவருக்குச் சொந்தமான பொன்னுஸ் நேச்சுரல் புரொடக்ட் எனும் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குரசாயனங்களை அதிக வி... மேலும் பார்க்க

Coffee bean: காபி கொட்டைகளை தின்று அழிக்கும் துளைப்பான் வண்டுகள்; 1990-க்கு பிறகு மீண்டும் பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் 7,348 ஹெக்டேர் பரப்பளவில் காபி பயிரிடப்படுகிறது. உள்ளூரைச் சேர்ந்த சில பழங்குடிகள் முதல் தனியார் பெருந்தோட்ட நிறுவனங்கள் வரை, நீலகிரியில் விளைவிக்கும் காஃபி கொட்டைகளை நாட்டின் பல ... மேலும் பார்க்க

டிட்வா புயல்: தொடர் மழையால் வெள்ளக்காடான டெல்டா வயல்கள்; 1 லட்சம் ஏக்கர் நெற் பயிர் மூழ்கிய வேதனை

டெல்டா மாவட்டமான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் டிட்வா புயல் காரணமாக நேற்று பகல் முழுவதும் தொடர் மழை பெய்தது. இரவுக்குப் பிறகு சற்று லேசாகப் பெய்த மழை பரவலாக இருந்தது. நாகப்பட்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: மழை வெள்ளத்தில் மூழ்கிய 50,000 வாழைகள்; படகில் மீட்டு விற்பனைக்கு அனுப்பிய விவசாயிகள்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த கனமழை பெய்து வருகிறது. இதனால், தாமிரபரணி ஆற்றில... மேலும் பார்க்க