Chitti Innovators League: அதிரடி அறிவியல், மேம்பட்ட சிந்தனை; இளம் கண்டுபிடிப்பாள...
தென்னகத்தில் கலக்கும் ராயல் என்பீல்டு! மதுரை மக்கள் விரும்பும் மாடல் எது?
திரைப்பட இயக்குனர்கள், ஹீரோ கெத்தான மாஸான கிளாஸ் ஆனா கேரக்டர் என்றாலே அவர் கையில் ஒரு ராயல் என்ஃபீல்டு பைக்கை கொடுத்து விடுவது வழக்கம்.
அப்படி 'ராணுவ அணிவகுப்பு' முதல் 'நிம்மதி தேடும் காதல் தோல்வியடைந்தோர்' வரை ஏறி அமரும் ஒரு சிம்மாசனமாக இந்த வாகனம் பார்க்கப்படுகிறது.
ரெட்ரோ காலம் முதல் இன்றைய ஜென்Z வரை பல்வேறு பரிணாமங்களை சந்தித்துக் கொண்டு, 2வீலர் ஆட்டோமொபைல் ஃபீல்டில் தவிர்க்க முடியாத ஒரு பிராண்டாக இந்த ராயல் என்ஃபீல்டு வாகனங்கள் இருக்கிறது.

ஆனால் டிவிஎஸ், ஹோண்டா, யமஹா போன்ற மற்ற நிறுவனங்களும் அவர்களுக்கு ஈடுகொடுக்கும் விதமாக சில மாடல்களை சமீபமாக களத்தில் இறக்கி விட்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் மக்கள் மத்தியில் இப்போது ராயல் என்பீல்ட் எவ்வளவு வரவேற்பு பெற்றிருக்கிறது குறிப்பாக தென்னகத்தில் அதன் விற்பனை; எந்த மாடலை மக்கள் அதிகம் ரசிக்கிறார்கள் போன்றவற்றை அறிந்து கொள்ள மதுரையை நோக்கி சென்றோம்.
அங்கு GG Motors எனும் நிறுவனம், 23 ஆண்டுகளாக ராயல் என்பீல்ட் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது, ஒவ்வொரு தாலுகாவிலும் ஒரு ஷோரூம் என்ற அடிப்படையில் மதுரையை சுற்றி திருமங்கலம், வாடிப்பட்டி, உசிலம்பட்டி, மேலூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இவர்களது ஷோரூம் உள்ளது.
இவர்களின் 10 வது ஷோரூம்-ஐ, மதுரை பழங்காநத்தம் திருப்பரங்குன்றம் சாலையில் புதிதாக திறப்பது அறிந்து அங்கு ஒரு விசிட் அடித்தோம். மிக பிரமாண்டமாக அனைத்து வகை ராயல் என்ஃபீல்டு மாடல்களையும் காட்சிப்படுத்தி திறப்பு விழாவை நடத்திக் கொண்டிருந்தார்கள்.
அப்போது அந்நிறுவன பங்குதாரர்கள் KG ஆதி லிங்கம், KG வெங்கடேசன், GA ராஜ்குமார், B ஈஸ்வர ராஜ் எங்களை அன்போடு வரவேற்றார்கள், அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு, அவர்களுள் ஒருவரான ராஜ்குமாரிடம் ராயல் என்ஃபீல்டு பற்றி பேசத் தொடங்கினோம்.
அவர், "மதுரை மாதிரியான ஒரு பாரம்பரியமான நகரத்தில் எந்த வீதிகளில் நுழைந்தாலும் அங்கு ஒரு கோயில் இருக்கும் அது மாதிரி எந்த வீதிகளில் நுழைந்தாலும் ஒரு ராயல் என்பீல்ட் பைக் இருக்க வேண்டும் என்ற விற்பனை நோக்கத்துடன் நாங்கள் பயணம் செய்து கொண்டிருக்கிறோம்.

இதுவரை நம்ம GG மோட்டார்ஸ் மதுரையில் 50000 வாகனங்கள் வரை விற்பனை செய்துள்ளோம், ராயல் என்பீல்ட் சராசரியாக மாதம் 450 பைக்குகள் விற்பனையாகும். லாஸ்ட்டா கடந்த ஜனவரியில் அதிகபட்சமாக நாங்கள் 1041 வாகனங்கள் விற்பனை செய்துள்ளோம் இது இந்தியாவிலேயே அதிகம்.
இங்கு ராயல் என்பீல்ட் வைத்திருப்போர் அனைவரும் சேர்ந்து 'ராயல் பாண்டியாஸ்' என்று ஒரு ரைடிங் கிளப் வைத்திருக்கிறோம், 2010 இல் தொடங்கினோம் இப்போது 2000 பதிவு செய்யப்பட்ட ரைடர்கள் இந்த கிளப்பில் உள்ளனர்.
மாதம் 4 ரைட் நடத்துகிறோம் அதுபோக பே ரைடும் நடத்துகிறோம். கடைசியாக 570 ரைடர்களுடன் ஒரு ரெய்டு மதுரைக்குள் நடத்தினோம். இப்படி பல ஈவண்டுகள் மதுரையில் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது அந்த வகையில் இங்கு ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது" என்றார்.
புதிதாக வந்துள்ள மாடல்களுக்கு மதுரையில் எந்தளவு வரவேற்பு உள்ளது என கேட்டோம், "கிளாசிக், புல்லட், ஹண்டர் இவைதான் மதுரைக்குள் அதிக விற்பனை. கிராமப்புற மக்கள் பெரும்பாலும் புல்லட்டை தான் விரும்புகிறார்கள். மொத்தம் ராயல் என்ஃபீல்டில் 14 மாடல்கள் உள்ளது.
அனைத்தின் டெஸ்ட்டெட் வாகனங்களும் நம்ம ஷோரூம்ல இருக்கு. ஒவ்வொரு புது மாடல் வரும் பொழுதும் நாங்கள் ஈவண்ட் நடத்தி மக்கள் மத்தியில் அதனை கொண்டு சேர்த்து விடுவோம், அதுபோக மக்களும் இந்த மாடல்கள் பற்றி அப்டேட் ஆகத்தான் இருக்கிறார்கள்.
மதுரை மக்கள் கரில்லா, பியர், ஹண்டர் என புது மாடல்களில் புது கலர்ஸ் தேடியும் வருகிறார்கள்" என்றவரிடம் ராயல் என்ஃபீல்டில் மின்வாகனம் பற்றி கேட்டோம், "ஃபிளையிங் ஃப்ளீ (Flying Flea) இந்த மாதம் தான் நான் அறிமுகப்படுத்தியுள்ளனர் இது உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட மாடலின் அட்வான்ஸ் டெக்னாலஜியுடன் கூடிய எலக்ட்ரிக் இன்ஸ்பிரேஷன்.

இது இந்தியாவிலேயே பெங்களூரு ஷோரூம் இல் வந்துள்ளது. அதன் விற்பனையை பொறுத்து மற்ற நகரங்களிலும் வந்துவிடும். அடுத்ததாக ஹிமாலயன் மாடலிலும் EV வர இருக்கிறது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் எப்போதும் அந்தந்த தலைமுறையை பொறுத்தே வாகனங்களை தயாரிப்பார்கள் அந்த வகையில் இன்னும் நிறைய எலக்ட்ரிக் வாகனங்கள் வரும். அவை மக்களுக்கு பிடித்ததாகவும் ஏற்றதாகவும், பெட்ரோல் ராயல் என்ஃபீல்டின் அனைத்து சிறப்பம்சங்களுக்கும் ஈடு கொடுக்கும் விதத்தில் நிச்சயம் இருக்கும்" என்றார்.
மற்ற நிறுவனங்களும் லாங் ரைட், க்ரூசர் என ராயல் என்பீல்டுக்கு ஈடு கொடுக்கும் விதமாக மாடல்களை தயாரிக்கின்றனர், இதனால் இதன் விற்பனையில் மாற்றம் உள்ளதா? "ராயல் என்பீல்டில் அட்வென்சர், சிட்டி ரெய்டு, ஃபேமிலி பிரெண்ட்லி, லாங் க்ரூசிங், மட் டெர்ரைன் ஆஃப் ரோட், என ஒவ்வொரு கான்செப்ட்டிற்க்கும் ஏற்றார் போல என்ன தேவை என்பதை புரிந்து, இதர உபகரணங்களுடன் (Accessories) சேர்த்து டெஸ்ட் செய்யப்பட்ட விதவிதமான வாகனங்கள் உள்ளது.
இந்தியா முழுக்க ஒவ்வொரு 30-45 கிமீ ஒரு சர்வீஸ் சென்டர் உள்ளது. மற்ற நிறுவனங்களை ஒப்பிடும் அளவில் வாகனங்கள் தயாரித்தாலும், ராயல் என்ஃபீல்டு அளவிற்கு ஒரு ரைடரை கன்வின்ஸ் செய்ய முடியாது. எனவே மற்ற நிறுவன மாடல்களின் வருகையால் RE க்கு எந்த பாதிப்பும் இல்லை".
பெண்கள் மத்தியில் ராயல் என்ஃபீல்டு விற்பனை பற்றி கேட்டோம்,"முன்னதாக குறைவான அளவில் இருந்தார்கள், ஹண்டர் வருகைக்கு பிறகு இப்போது பெண் ரைடர்கள் அதிகரித்துள்ளனர். மதுரையில் மாத சராசரி விற்பனையில் 2-3 வாகனங்கள் பெண்கள் சொந்தமாக வாங்குவதாக அமைகிறது.
இதை ஊக்குவிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நாங்களே மகளிர் கல்லூரிகளில் ஈவன்ட் நடத்துகிறோம். சமீபத்தில் லேடி டோக் கல்லூரியில் சுமார் 20 மாணவிகளை வைத்து ஒரு ரைட் ஈவன்ட் நடத்தினோம்.
இப்போது பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள், சென்னை பெங்களூர் மாதிரி தெற்கு பக்கமும் பெண் ரைடர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்" என்றவர் அடுத்ததாக ராயல் என்ஃபீல்டு அன்பளிப்புக்காக நடக்கும் விற்பனை பற்றி கூறினார், "முகூர்த்த காலங்களில் அதனை ஒரு தனி சீசனாகவே நாங்கள் பார்ப்போம் சீருக்காக வாங்குவார்கள்.

அதுபோக பிறந்தநாள் சர்ப்ரைஸ் டெலிவரி அவர்கள் சொல்லும் இடத்திற்கு நாங்களே செய்கிறோம் , திருமணத்திற்காக பெற்றோர்கள், நண்பர்கள் வாங்கி கொடுப்பார்கள். இவை மட்டுமே மாத சராசரி விற்பனையில் 20க்கும் மேற்பட்ட வாகனங்களாக இருக்கும்" என்றார்.
நிறைவாக அவரிடம் ராயல் என்ஃபீல்டு மாடல்கள் குறித்து அவரது பார்வையில் ஒரு வரி பதிலை எதிர்பார்த்து கேள்விகளை முன் வைத்தோம், "ஆபீஸ் செல்வோருக்கு? கிளாசிக் 350; மைலேஜ் எதிர்பார்ப்போருக்கு? புல்லட் 350 கிளாசிக் 350; லாங் ரைடு? மீட்டியார் 650, 350; பெண்களுக்கு?
ஹண்டர் 350; குள்ளமானவர்களுக்கு? ஹண்டர் 350; ஹெயிட் ஆனவர்களுக்கு? ஹிமாலயன், பியர் 650; இளைஞர்களுக்கு? கான்டினென்டல் GT, ஸ்கிராம் 440; முதியவர்களுக்கு? புல்லட் 350; வின்டேஜ் லவ்வர்களுக்கு? புல்லட் 350; விலை குறைவாக? ஹண்டர், புல்லட் 350" என்றார்.





















