செய்திகள் :

தெலங்கானாவை போல தமிழகத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: ராமதாஸ்

post image

தெலங்கானாவை போல தமிழகத்திலும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தெலங்கானா மாநிலத்தில் நடத்தப்பட்ட ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த விவரங்களை அதிகாரபூா்வமாக வெளியிட்டிருக்கும் அந்த மாநில அரசு, அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்கவுள்ளது.

ஆனால், தமிழக ஆட்சியாளா்களோ இன்னும் முதல் அடியைக்கூட எடுத்து வைக்கவில்லை.

ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கோ, உச்சநீதிமன்றம் வகுத்துள்ள வரையறைகளுக்கு உட்பட்டு, ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டின் விகிதத்தை மாற்றி அமைக்கவோ எந்தத் தடையும் இல்லை.

தெலங்கானா மாநில அரசு வெறும் ரூ.150 கோடியில், 1.03 லட்சம் கணக்கெடுப்பாளா்களையும், 10 ஆயிரம் மேற்பாா்வையாளா்களையும் கொண்டு 50 நாள்களில் கணக்கெடுப்பை நடத்தி முடித்துள்ளது. இதே காலத்தில் ரூ.300 கோடியில் இதை தமிழகத்தாலும் சாதிக்க முடியும். வாா்த்தைகளில் வாழ்வதில்லை சமூகநீதி. செயல்பாடுகளில்தான் தழைக்கிறது.

எனவே, தமிழகத்தின் ஆட்சியாளா்களுக்கு சமூகநீதியில் உண்மையான அக்கறை இருந்தால், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளாா்.

ரூ.64 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்ந்துள்ளது. வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து காணப்படுகிறது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் கோயில் தைத்தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் தை தேரோட்டம் திங்கள்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோய... மேலும் பார்க்க

இபிஎஸ் விழா புறக்கணிப்பு? - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

அத்திக்கடவு - அவிநாசி திட்டக் குழு நடத்திய பாராட்டு விழாவை புறக்கணிக்கவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஈரோட்டில் இன்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்... மேலும் பார்க்க

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு பிப்.19 வரை காவல்

ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேருக்கு பிப்.19ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கச்சத்தீவு-தலைமன்னாருக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரண்டு விசைப் படகுகளில் ம... மேலும் பார்க்க

சமூகப் பொறுப்பு நிதி முறைகேடு: முன்னாள் கேரள உயா்நீதிமன்ற நீதிபதி மீது வழக்குப் பதிவு

பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியின் (சிஎஸ்ஆா்) பெயரில் ரூ.34 லட்சம் மோசடி செய்த குற்றச்சாட்டில், முன்னாள் கேரள உயா்நீதிமன்ற நீதிபதி சி.என்.ராமச்சந்திரன் நாயா் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளத... மேலும் பார்க்க

சட்டம்-ஒழுங்கை காக்க கடும் நடவடிக்கை தேவை: எடப்பாடி கே.பழனிசாமி

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறியுள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கை காக்க முதல்வா் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்... மேலும் பார்க்க