செய்திகள் :

தெலங்கானா: நிறைவேறாத காதலால் தற்கொலை; இறந்த மகனுக்கு 23 ஆண்டுகளாக திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்!

post image

தெலங்கானாவில் காதல் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

மகபூபாபாத் மாவட்டத்தில், 2003ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட தங்கள் மகன் ராம் கோட்டிக்கு, லாலுவும் சுக்கம்மாவும் ஆண்டுதோறும் திருமண விழாவை நடத்தி வருகின்றனர்.

காதல் திருமணத்திற்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், ராம் கோடி தற்கொலை செய்து கொண்டார். அவர் இறந்த சில நாட்களுக்குப் பிறகு, அவர் காதலித்த இளம் பெண்ணும் தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டார்.

இதனால் இரு குடும்பங்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இந்தச் சோகம் ராம் கோடியின் பெற்றோரைக் கடுமையாகப் பாதித்தது. தங்கள் மகனின் நினைவை மங்க விடாமல், அவரைத் தங்களுடன் நெருக்கமாக வைத்திருக்க அவருக்கு ஒவ்வொரு ஆண்டும் திருமணம் செய்து வைத்து வருகின்றனர்.

இது குறித்து சுக்கம்மா கூறுகையில், ''எங்கள் மகன் மரணத்திற்குப் பிறகு எங்களது கனவில் தோன்றி கோயில் கட்டி அவர்களது திருமணத்தை நடத்தச் சொன்னார். இதையடுத்து எங்கள் வீட்டிற்குள் சிறிய கோவிலைக் கட்டி இருக்கிறோம்.

எங்கள் மகன் மற்றும் அவர் விரும்பிய பெண்ணின் சிலைகளை நிறுவி இருக்கிறோம்'' என்றார். அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ராம நவமி அன்றும் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து இருவருக்கும் பாரம்பர்ய முறைப்படி திருமணத்தை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சடங்கு உண்மையான திருமணத்தைப் போலவே, பிரார்த்தனைகள், பிரசாதம் மற்றும் பழக்கவழக்கங்களுடன் செய்யப்படுகிறது. தெலுங்கானாவில், ஸ்ரீராம நவமியன்று ராமர் மற்றும் சீதையின் திருமண சடங்குகள் மிகவும் விமரிசையாக கோயில்களில் கொண்டாடப்படுகிறது.

இந்தப் பாரம்பர்யத்தால் ஈர்க்கப்பட்டு, பெற்றோர் சிலைகளை தெய்வீக வடிவங்களாகக் கருதி, அதே முறையில் தங்களது மகனின் திருமண விழாவை நடத்துகிறார்கள். இவ்விழாவில் ஒட்டுமொத்த கிராமத்தினரும் கூடுகின்றனர்.

கும்பமேளா புகழ் மோனலிசா மைனர்; காதல் கணவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு!

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடந்த கும்பமேளாவில் பாசி மாலை விற்று சோசியல் மீடியாவில் புகழ் பெற்றவர் மோனலிசா. இவர் திடீரேன கடந்த சில மாதங்களுக்கு கேரளாவில் திருவனந்தபுரம் அருகே திடீரென கோயில் ஒன்... மேலும் பார்க்க

வீட்டில் மூட்டைகளில் பணம் சிக்கிய விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் யஷ்வந்த் வர்மாவின் டெல்லி வீட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீப்பிடித்தது. இதனால் தீயை அணைத்தபோது வீட்டில் சாக்குமூட்டையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தத... மேலும் பார்க்க

ஸ்பைடர் மேனுக்கே சவால் விடும் 89 வயது பாட்டி! - 27-வது மாடியிலிருந்து அசால்ட்டாக இறங்கி சாகசம்!

சீனாவின் பெய்ஜிங் நகரில் வசிக்கும் 89 வயது மூதாட்டி ஒருவர், தனது அடுக்குமாடி குடியிருப்பின் 27-வது மாடியில் எதிர்பாராத விதமாகப் படுக்கையறைக்குள் சிக்கிக்கொண்டார். கதவு தானாகப் பூட்டிக்கொண்ட நிலையில், ... மேலும் பார்க்க

ஆந்திரா: நீர்வீழ்ச்சியில் செல்ஃபி எடுக்க முயன்றபோது விபரீதம்; நீரில் மூழ்கி உயிரிழந்த 3 மாணவிகள்!

ஆந்திராவில் செல்ஃபி எடுக்க முயன்ற 3 மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திராவின் அனந்தகிரி மண்டலத்தில் உள்ள முலாகும்மி நீர்வீழ்ச்சிக்கு ஜம்புவலசா கிராமத்தைச... மேலும் பார்க்க

தொழிலதிபர் ஆனந்த் அம்பானி பிறந்தநாள் பார்ட்டி - குஜராத்தில் குவிந்த பாலிவுட் நட்சத்திரங்கள்!

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இரண்டாவது மகனான ஆனந்த் அம்பானியின் திருமணத்தை முகேஷ் அம்பானி உலகமே வியந்து பார்க்கும் வண்ணம் நடத்தி வைத்தார். இப்போது ஆனந்த் அம்பானியின் பிறந்த நாளும் வித்தியாசமான முறையி... மேலும் பார்க்க

துரத்திய போலீஸ்; குளத்திற்குள் 5 மணி நேரம் பதுங்கி இருந்த திருடர்; தாமரை தண்டு மூலம் சுவாசித்தாரா?

மத்தியப் பிரதேசத்தில் திருடன் ஒருவன் போலீஸாரிடமிருந்து தப்பிக்கச் செய்த காரியம் போலீஸாரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அங்குள்ள ரயில்களில் அடிக்கடி பெண்களிடம் திருட்டில் ஈடுபட்டு வந்த திருடன் ஒருவ... மேலும் பார்க்க