செய்திகள் :

’தேசிய கீதம் இரண்டு முறை பாடுவது மரபு மீறல் இல்லை’ - எம்பி., சு.வெங்கடேசன்

post image

திருப்பரங்குன்றம் அடுத்த திருநகர் பகுதியில்  த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் சி.டி.ஆர் நிர்மல் குமார் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக எம்பிக்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் ஆகியோர் பங்கேற்று அலுவலகத்தை திறந்து வைத்து, அமைச்சர் நிர்மல்குமாரை நாற்காலியில் அமர வைத்தனர்.

இதை தொடர்ந்து மதுரை நாடளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “ தேசிய கீதத்தை இரண்டு முறை பாடுவது மரபு மீறல் என்பதெல்லாம் கிடையாது. தேசிய கீதத்தை இருபது முறை கூட பாடலாம். தேசிய கீதத்திற்கு யாரும் எதிரி கிடையாது. அது நம்முடைய தேசிய கீதம், நம்முடைய நாட்டு கீதம்.

 நாடாளுமன்றத்தில் குடியரசு  உரைக்கு முன்னாலும் தேசிய கீதம் பாடப்படும்.குடியரசுத் தலைவர் பேசி முடித்த பிறகும் தேசிய கீதத்தைப் பாடுவார்கள்.

தமிழ்நாட்டில இந்த முக்கியமான பிரச்னை எழக் காரணம் வந்தே மாதரம். வந்தே மாதரத்தைப் பாட வேண்டுமென்று உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்பியதன் அடிப்படையில், கவர்னர் அலுவலகத்தில் நடந்த மூன்று நிகழ்ச்சிகளிலும் வந்தே மாதரத்தை முதல் பாடலாகப் பாடினார்கள். அது ஒரு பிரச்னை. வந்தே மாதரத்தில் நம்முடைய நாட்டை ஒரு குறிப்பிட்ட மதத்தின் கடவுளாக சித்தரித்து பாடுவது போல நான்கு பத்திகள் இருக்கிறது.

மோடி - அமித்ஷா

எனவே அந்த நான்கு பத்திகளையும் பாடக் கூடாது என அரசியல் நிர்ணய சபையில் முடிவு செய்தார்கள். அதை மீறி இப்பொழுது மோடியும் அமித் ஷாவும் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்கள்.

அது இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது. தனிமனித மத சுதந்திரத்திற்கு எதிரானது. தனிமனித உரிமைக்கு எதிரானது. வேறு மதத்தைச் சார்ந்தவர்களையும், வேறொரு மதத்தினுடைய கடவுளை வழிபட்டு பாடச் சொல்வதற்கு அல்லது கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்களையும் இந்தப் பாடலை பாட வேண்டும் என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை.

இன்னும் சொல்லப்போனால், அடுத்தவர் என்ன பாடல் பாட வேண்டும் என்பதனை மோடியும் அமித் ஷாவும் முடிவு செய்ய முடியாது. வந்தே மாதரம் பாடக்கூடாது என்பது ஏற்கனவே இருந்த நிலைப்பாடு. அது இப்போது அமல்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ் தாய் வாழ்த்து முதலிலேயே பாடப்பட்டிருக்கிறது.

சு.வெங்கடேசன் எம்.பி.
சு.வெங்கடேசன் எம்.பி.

அதிலும் மிக முக்கியமான முடிவுகளை அரசு எடுத்தது என்பதும், தேசிய கீதம் இரண்டு முறை பாடுவதில் எந்த பிரச்னையும் யாருக்கும் கிடையாது. அது நம்முடைய பாடல், எத்தனை முறை வேண்டுமானாலும் பாடலாம். தேசிய கீதத்திற்கு எதிரானவர்கள் என்று யாரும் கிடையாது. எனவே அது மரபு மீறல் என்று சொல்வது பொருள் அல்ல, ஏதாவது ஒரு குற்றச்சாட்டை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு சொல்லப்படுவதாகவே நான் கருதுகிறேன். அதில் உண்மையிலேயே குற்றம் ஏதும் இருப்பதாக நான் கருதவில்லை” என்றார்.

"பாகிஸ்தானில் 'இந்த' அச்சுறுத்தல் ஏற்பட்டால் இந்தியா மீது போர் தொடுப்போம்" - பாக்., எச்சரிக்கை

கடந்த ஆண்டு நடந்த பஹல்காம் தாக்குதலையொட்டி, இந்திய அரசு பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. சிந்து நதி நீர் என்பது பாகிஸ்தானுக்கு மிக மிக முக்கியம். இதை வைத்து தான் பாகிஸ்தான் ... மேலும் பார்க்க

இன்று கூடும் தமிழ்நாடு சட்டப்பேரவை: உதயநிதி, பழனிசாமி ஆகியோர் உரை | Live News Updates

இன்று சட்டப்பேரவை!இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை கூடுகிறது. இரண்டாவது நாளாக, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நடைபெற உள்ளது.எதிர்க்க... மேலும் பார்க்க

கர்நாடக முதல்வர் ஒரு செங்கல்லை கூட எடுத்து வைத்து மேகதாது பணியை துவக்க முடியாது -அமைச்சர் விஸ்வநாதன்

மதுரை மாவட்டம், மேலூரில் தமிழக முதல்வர் விஜய் மற்றும் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளையொட்டி ‘போதையில்லாத மேலூர், பெண்கள் பாதுகாப்பு’ என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் ப... மேலும் பார்க்க

மாதப்படி வழக்கு: `மீண்டும் ஆஜராகுங்கள்'-பினராயி விஜயன் மகளுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை!

கேரள மாநிலம், கொச்சியைச் சேர்ந்த சி.எம்.ஆர்.எல் தனியார் நிறுவனம் மற்றும் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனின் எக்சாலோஜிக் சொல்யூசன்ஸ் கம்பெனி இடையேயான பண ப... மேலும் பார்க்க

'இனி இந்தியா உலக நாடுகளுக்கு சந்தை இல்லை' - மோடி | இந்திய கப்பற்படையில் 3 'Made in India' கப்பல்கள்

இந்திய கப்பற்படையில் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட மூன்று கப்பல்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. இந்தக் கப்பல்கள் தற்போது சியாம பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் பிரதமர்... மேலும் பார்க்க