செய்திகள் :

தேனி: சுகாதாரமற்ற கழிவறைகள்; முகம் சுளிக்கும் பயணிகள்... புதிய பேருந்து நிலைய அவலம்!

post image

தேனி புதிய பேருந்து நிலையத்தில் பராமரிப்பு மற்றும் தண்ணீர் வசதியின்றி பொதுக்கழிப்பிடங்கள் காணப்படுகின்றன. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தின் முக்கியமான பேருந்து நிலையமாக தேனி புதிய பேருந்து நிலையம், முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலையம் என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றது. இந்த பேருந்து நிலையமானது மாவட்டத்தின் மையப்பகுதியாக உள்ளது.

சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மட்டுமன்றி, தேனி மாவட்டமானது கேரள மாநில எல்லைப் பகுதியாகவும், இயற்கை எழில்கொஞ்சும் சுற்றுலாத் தலங்கள் நிறைந்த பகுதியாகவும் இருப்பதால் அதிகமான பயணிகள் வருகை புரியும் பேருந்து நிலையமாக இது உள்ளது. ஆயிரக்கணக்கான பயணிகள் நாள்தோறும் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த பேருந்து நிலையத்தில் புறநகர் செல்லும் பேருந்துகள் நிறுத்துமிடத்திலும், நகர் பேருந்துகள் நிறுத்துமிடத்திலும் பயணிகள் பயன்பாட்டிற்காக தனித்தனியே இரண்டு பொதுக் கழிவறைகள் உள்ளன. இந்தப் பொதுக் கழிவறைகளில் முறையான தண்ணீர் வசதியின்றியும் சுகாதாரமின்றியும் காணப்படுவதால், கழிவறைகளைப் பயன்படுத்துவதற்கு பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

கழிப்பறைகள் நீண்ட நாள்களாக முறையாகச் சுத்தம் செய்யப்படாததாலும், கழிவறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் தூய்மையின்றி இருப்பதாலும் ஒரு சில பயணிகள் அருகில் உள்ள திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் பேருந்து நிலையத்தின் பல பகுதிகளிலும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் அருகில் உள்ள கடைக்காரர்கள் உள்ளிட்டோர் அசௌகரியத்தை அனுபவித்து வருகின்றனர்.

குறிப்பாக பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் என அனைவருக்கும் கழிவறை வசதியானது இன்றியமையாத ஒன்றாகும். மேலும் கழிவறை தூய்மை மட்டுமன்றி திறந்தவெளியிலும் இவ்வாறாக தூய்மையின்றி துர்நாற்றத்துடன் காணப்படுவதால், நோய் தொற்றுகள் பரவும் அபாயம் உள்ளது.

தேனி அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம் பயணிகளின் சுகாதார வசதி மற்றும் நோய் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில், இப்பிரச்னையை முதன்மையானதாகக் கருத்தில் கொண்டு முறையான தண்ணீர் வசதி, தூய்மைப் பணிகளை மேற்கொண்டு கழிவறைகளைப் பராமரிக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

"முக்கிய பங்குள்ள பத்திரிகையாளர்களை ஏன் அனுமதிக்கவில்லை?" - முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து TRB ராஜா

இன்று தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டிற்கு செய்தியாளர்கள் அழைக்கப்படாதது பேசுபொருளானது. இதையடுத்து முன்னாள் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவ... மேலும் பார்க்க

காவிரி விவகாரம்: பிசுபிசுத்த கன்னட அமைப்பினரின் போராட்டம் - ஆதரவு கொடுக்காத கர்நாடக மக்கள்!

மேகதாது அணை கட்டவும், காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் கன்னட அமைப்பினர் இன்று அறிவித்த மாநிலம் தழுவிய பந்த்-திற்கு கர்நாடக மக்கள் மத்தியில் ஆதரவு கிடைக்காமல் போயிரு... மேலும் பார்க்க

‘ஹார்முஸ் விவகாரத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய தவறான கணக்கு!’ - ஈரான்

ஈரான் போர் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தினம் தினம், 'போர் தீவிரமடைகிறது...', 'ஈரான் பேச்சுவார்த்தை நடத்த கெஞ்சுகிறார்கள்', 'விரைவில் போர் முடிந்துவிடும்' என்று ஒவ்வொன்றைக... மேலும் பார்க்க

``எடப்பாடியாருக்கு பின்புலமாக இருந்தவர்களே இன்றைக்கு எதிர்க்கிறார்கள்!"- சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி

அ.தி.மு.க-வில் சி.வி.சண்முகம் - எஸ்.பி.வேலுமணி தலைமையில் தனி அணியாக செயல்பட்டுவரும் எம்.எல்.ஏ-க்கள் தினம் தினம் அதிரிபுதிரி கிளப்பிக்கொண்டிருக்க... எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க-வினரும் சி.வி... மேலும் பார்க்க

'தீட்டுப்பட்டுவிட்டது' - கார்கேவிற்கு நடந்த சம்பவம்; சத்தியாகிரகத்தை அறிவித்த மாணிக்கம் தாகூர்!

உத்தரகாண்ட் மாநிலம், ஹல்த்வானி நகரில் தனக்கு நடந்த சம்பவம் குறித்து இன்று மாநிலங்களவையில் பகிர்ந்திருந்தார் மாநிலங்கலவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ப... மேலும் பார்க்க

தனுஷ்: `அனைவருக்கும் உரிமை இருக்கிறது; இன்று எங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்..!'- அமைச்சர் கருத்து

கோவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் 90 சதவிகிதம் முடி... மேலும் பார்க்க