செய்திகள் :

தேனி மாவட்டத்தில் 5 வாக்காளர்கள் மட்டுமே உள்ள வாக்குச்சாவடி! - காரணம் என்ன?

post image

தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அடுத்துள்ள வருசநாடு அருகே உள்ள வெள்ளிமலையில், 5 வாக்காளர்களுக்காக மட்டுமே வாக்குசாவடி அமைக்கபோவதாக அறிவித்திருப்பது வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.

ஆண்டிப்பட்டி தொகுதியில் உள்ள வருசாநாடு பகுதியில் உள்ளது வெள்ளிமலை எஸ்டேட். வெள்ளிமலை பகுதி அடர்ந்த வனம் என்பதால் சென்று வருவதற்கு போதுமான சாலை வசதி கிடையாது. இங்கு சென்று வர மூன்று மணி நேரமாகும். இதனால் இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவானது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட சிறப்பு வாக்காளர் திருத்த இறுதி வாக்காளர் பட்டியலில் வெள்ளிமலை பகுதியில் செந்தில், ஜெயராணி, பவுல், சுதா, ரோகித். ஆகிய ஐந்து வாக்களர்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

Gyanesh Kumar - தலைமை தேர்தல் ஆணையர்
Gyanesh Kumar - தலைமை தேர்தல் ஆணையர்

ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு வாக்கும் முக்கியம், ஒரு ஓட்டு கூட வீணாக கூடாது என்ற எண்ணத்தில் வெள்ளிமலையில் உள்ள 5 வாக்காளர்களுக்காக மட்டுமே தேர்தல் ஆணையத்தால் ஒரு வாக்குச்சாவடி அமைக்கபடவுள்ளது. இந்த வாக்கு சாவடியானது அங்குள்ள துரைச்சாமி மரகதம் தொடக்கப்பள்ளி கட்டிடடத்தில் அமையவுள்ளது.  

இது குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பேசும் போது, 'தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதி, வருசநாடு அருகே உள்ள வெள்ளிமலை பகுதியில் 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. இது ஜனநாயக திருவிழாவின் ஒரு மகுடம்” என தெரிவித்தார்.

கோவை: பள்ளி மாணவர்களுக்காகத் தயாராகும் வண்ணமயமான சாலைகள்! | Photo Album

வண்ணமயமான கோவை சாலைவண்ணமயமான கோவை சாலைவண்ணமயமான கோவை சாலைவண்ணமயமான கோவை சாலைவண்ணமயமான கோவை சாலைவண்ணமயமான கோவை சாலைவண்ணமயமான கோவை சாலைவண்ணமயமான கோவை சாலைவண்ணமயமான கோவை சாலைவண்ணமயமான கோவை சாலைகோவை தெற்க... மேலும் பார்க்க

50,000 ரூபாய்க்கு மேல் எடுத்துச் செல்லக் கூடாது! - அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள்

தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தின் சட்டசபை பதவிக்காலம் வருகிற மே, ஜூன் மாதங்களில் முடிவுக்கு வருகின்றன. இந்நிலையில், தேர்தல் ஆணையம் ... மேலும் பார்க்க

Assembly Elections: தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்!- முழு விவரம்

தேர்தல் நெருங்குவதால் அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. அரசியல் கட்சிகளும் கூட்டணிகளை கிட்டதட்ட உறுதி செய்துவிட்டது. இந்நிலையில், தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கேரளா என நான்கு மாநிலங்கள், புதுச்... மேலும் பார்க்க

“உளவுத் துறையைக் கையாளப் போகும் முதல் பெண் டி.ஜி.பி”- அதிரடி மாற்றங்களைக் கையில் எடுத்த அரசு!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நடந்துவந்த குற்றசெயல்களும், அதை தொடர்ந்து எழுந்த புகார்களும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. சட்டம் ஒழுங்கு தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என்கிற கேள்வி... மேலும் பார்க்க

எரியும் மேற்கு ஆசியா; தத்தளிக்கும் MSME-கள்: 'Tax Holiday நிச்சயம் தேவை'- எம்.எல்.ஏ எழிலன் கோரிக்கை!

மேற்கு ஆசியப் போர்ச் சூழலால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, இந்தியாவின் MSME (குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்) துறை உற்பத்தி மற்றும் போக்குவரத்துச் செலவு அதிகரிப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க