செய்திகள் :

`தேமுதிக-வை திமுக-விடம் 5 வருட குத்தகைக்கு கொடுத்திருக்கிறார் பிரேமலதா' - நாஞ்சில் சம்பத் பேட்டி

post image

“2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் மாற்றங்களில் உங்களை ஆச்சரியம் அல்லது அதிர்ச்சியடைய வைத்த சம்பவம்?”

“த.வெ.க-வின் வெற்றி தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தையுமே பாதித்திருக்கிறது. குறிப்பாக தி.மு.க-வை வெகுவாக பாதித்திருக்கிறது.

அ.தி.மு.க அதலபாளத்திற்கு தள்ளியிருக்கிறது. 200-க்கும் மேற்பட்ட சாதிக் குழுக்களின் அரசியல் சமாதிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

vijay

பாதாளம்வரை பாயும் பணத்திற்கு பைந்தமிழ் நாட்டில் இனி வேலையில்லை என்ற நிலைமை உருவாகியிருக்கிறது. விஜய் பெற்றிருக்கிற இந்த வெற்றி, மிகப்பெரிய தேசியத் தலைவராக அவர் வருவதற்கான வாய்ப்பின் வாசலைத் திறந்துவைத்திருக்கிறது இந்தத் தேர்தல் முடிவு!”

“ஆனால், தொகுதிவாரியாக சாதி பார்த்துதானே த.வெ.க வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருந்தார்கள்?”

“தமிழ்நாட்டில் கவுடர் சமுதாயத்தினருக்கு என்று இருந்த ஒரே தொகுதியான கம்பத்தில், இன்றைக்கு கவுடர் சமுதாயத்தைச் சாராத த.வெ.க வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார்.

கோவையில் வெற்றி பெற்றிருக்கிற அமைச்சர் சம்பத்குமார், 24 மனை செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர். அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் வெற்றிபெறவே முடியாது. அதிலும் கோவையில் அவர் வெற்றி பெற்றது ஆச்சரியமானது.

தியாகராய நகரில் வெற்றி பெற்ற அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், ஆசாரி வகுப்பைச் சேர்ந்தவர் என்று தகவல். இப்படி தமிழ்நாடு முழுக்க த.வெ.க-வின் வெற்றி என்பது சாதியைத் துவம்சம் செய்து பெற்ற வெற்றி!”

“சாதி, மதத்துக்கு எதிராக மக்கள் விழிப்புணர்வுடன் த.வெ.க-வை தேர்ந்தெடுக்கவில்லை. திரைக்கவர்ச்சியில் மயங்கித்தான் வாக்களித்துள்ளனர் என்கிறார்களே?”

“திரைக்கவர்ச்சியின் பின்னால்தான் இளைஞர்கள் போனார்கள் என்றே வைத்துக்கொள்வோம். அப்படியானால், வயதானவர்கள், தாய்மார்கள் எந்த அடிப்படையில் த.வெ.க-வுக்கு வாக்களித்தார்கள்?அரசியல் மாற்றத்தை எதிர்நோக்கித்தானே மக்கள் வாக்களித்துள்ளார்கள்!

1994-லேயே இப்படியொரு மாற்றத்தை எதிர்நோக்கித்தான் ம.தி.மு.க தொடங்கப்பட்டது. தமிழக அரசியலில், அந்தக் கடமையைச் செய்வதற்குத்தான் கருப்பையா மூப்பனாரும் த.மா.கா கட்சியைத் தொடங்கினார்.

அந்தக் கட்சியும் இன்றைக்கு முடிந்துபோய்விட்டது. அந்தக் கடமையைச் செய்வதற்குத்தான் தே.மு.தி.க-வை கேப்டன் விஜயகாந்த் தொடங்கினார். அந்தக் கட்சியை இன்றைக்கு 5 வருட குத்தகைக்கு தி.மு.க-விடம் கொடுத்திருக்கிறார் பிரேமலதா.

premalatha

அந்தக் கடமையைச் செய்வதற்குத்தான் நடிகர் கமல்ஹாசனும் ம.நீ.ம கட்சியைத் தொடங்கி, டார்ச்லைட்டை எடுத்துக்கொண்டு வந்து தொலைக்காட்சிப் பெட்டியை எல்லாம் உடைத்தார். ஆனால், இன்றைக்கு அந்தக் கட்சி உயிரோடு இல்லை. எனவே, இவர்கள் எல்லோரும் செய்யத்தவறிய மாற்றத்தை விஜய் கொண்டுவருவார் என்ற நம்பிக்கையுடன் மக்கள் அவருக்கு வாக்களித்து இந்த பெரும் வெற்றியைக் கொடுத்திருக்கிறார்கள்.”

“திராவிட இயக்கத்தின் வழியில் பயணித்துவந்த நீங்களே, ‘த.வெ.க-வின் வெற்றி, திராவிட இயக்கங்களுக்கான மாற்று’ என்று ஏற்றுக்கொள்கிறீர்களா?”

“அப்படியில்லை... த.வெ.க-வின் வெற்றி என்பது ஒருவகையில், திராவிட இயக்கங்களின் நீட்சி! திராவிட இயக்கத்தினுடைய நடவடிக்கைகளுக்கு மாற்றான நடவடிக்கை த.வெ.க-வின் நடவடிக்கை. ஏனெனில் எங்களின் கொள்கைத் தலைவர் பெரியார்!”

“கொள்கை எதிரியான பா.ஜ.க-வுக்கு எதிராக த.வெ.க எந்தவொரு உறுதியான நிலைப்பாட்டையும் இதுவரை எடுக்கவில்லையே... ஏன்?”

“கொள்கை எதிரியுடன் நாங்கள் எந்த ஒட்டும் உறவும் வைத்துக்கொள்ளவில்லை. அண்மையில் முதல்வர் டெல்லிக்குச் சென்றபோதுகூட, பா.ஜ.க தலைவர்களை மட்டுமல்லாது ராகுல் காந்தி, சோனியாகாந்தி, மல்லிகார்ஜூன கார்கேவையும் சந்தித்தார். ஆக, கொள்கையில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என்பதற்கான அடையாளம் இது.

narendra modi

எந்த காங்கிரஸ் கட்சியின் பெயரைச் சொன்னால், மோடிக்கு வியர்த்துக் கொட்டுகிறதோ... அதே காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்த்துக்கொண்டு இருவருக்கு அமைச்சர் பதவி கொடுத்திருக்கிறோம். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தியை மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்திருக்கிறோம். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறார். ஆக இவையெல்லாம் எங்களின் கொள்கை எதிரியான பா.ஜ.க-வின் கன்னத்தில் அறைகிற நடவடிக்கைகள்!”

“2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க அடைந்துள்ள தோல்வி பற்றிய உங்கள் கருத்து என்ன?”

“த.வெ.க-வை ஆட்சி அமைக்கவிடக் கூடாது என்ற வன்மம் ஏன் அவர்களுக்கு வந்தது? தேர்தல் முடிகிற வரையில், பிரசாரத்தின் ஓர் இடத்தில்கூட த.வெ.க-வின் பெயரையும் விஜய் பெயரையும் உச்சரிக்கவே இல்லை. உதயநிதியும்கூட அட்டைக் கத்தி, புதிய அடிமைகள் என்றுதான் சொன்னாரே தவிர... எங்களின் பெயரையே சொல்லவில்லை.

udhayanidhi stalin

தீக்குளித்து தீர்ந்துபோவதற்கும் தயாராக இருக்கக்கூடியவன் தி.மு.க தொண்டன். ஆனால், அவன் இன்றைக்கு வெந்நீரில் குளிப்பதற்குக்கூடத் தயாராக இல்லை. அந்தக் கட்சியில் அவன் ஈடுபாட்டுடன் இருக்க முடியவில்லை.

ஏனெனில், தி.மு.க இன்றைக்கு வந்தேறிகளின் கைகளிலும், வியாபாரிகளின் கைகளிலும் சிக்கிக் கிடக்கிறது. அந்தக் கட்சியின் நிர்வாகிகள், அமைச்சர்களில் பெரும்பாலானோர் அ.தி.மு.க-வில் இருந்து வந்தவர்கள். ஒரு குடும்பத்தின் மேலாதிக்கத்தின் கீழ் அந்தக் கட்சி சிக்கிக்கொண்டதன் விளைவு... மக்களிடமிருந்து மட்டுமல்ல... தி.மு.க தொண்டனிடமிருந்து அந்நியப்பட்டுவிட்டது அந்தக் கட்சி.

arivalayam

ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, சக்கரபாணி போன்ற மூத்தவர்கள் பலர் அந்தக் கட்சியில் இருக்கிறார்கள். மூன்று முறை முதல்வராக இருந்த ஓ.பி.எஸ் இன்றைக்கு தி.மு.க-வில் போய் அடைக்கலமாகியிருக்கிறார். இவர்களில் ஒருவரைத்தான் எதிர்க்கட்சித் தலைவராக்கியிருக்க வேண்டும்.

ஆனால், தப்பித்தோம் பிழைத்தோம் ததிங்கினத்தோம் என்று வெற்றிபெற்ற உதயநிதி ஸ்டாலினை, வாரிசு என்பதற்காகவே எதிர்க்கட்சித் தலைவராக ஆக்கியிருக்கிறார்கள். ஆக, தி.மு.க தங்கள் கட்சித் தொண்டர்களின் மன உணர்வுகளையும் புரிந்துகொள்ளவில்லை; தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் புரிந்துகொள்ளவில்லை!”

“ஆனால், ‘வாரிசு அரசியல் அல்ல... வரலாற்று அரசியல்’ என்றெல்லாம் கடந்த காலத்தில் புகழ்ந்து பேசியிருக்கிறீர்களே?”

“கடந்த காலங்களில் நான் உதயநிதியை ஆதரித்துப் பேசியது உண்மை; அது என் தொழில் வாழ்க்கை!”

கரூர் மதியழகனுக்கு வாரியத் தலைவர் பதவி? - விருப்பப்பட்டு வழங்கும் முதல்வர் விஜய்?

தவெகவின் கரூர் மத்திய மாவட்டச் செயலாளரான மதியழகனுக்கு முக்கியமான வாரியம் ஒன்றின் தலைவர் பதவி கொடுக்கப்படவிருக்கிறதாம். முதல்வர் விஜய்யே தனிப்பட்ட முறையில் விருப்பப்பட்டு மதியழகனின் பெயரை டிக் அடித்திர... மேலும் பார்க்க

பழனி முருகன் கோயில் நில மோசடி; பத்திரப்பதிவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் செயல் அலுவலர் மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், `பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமானதாகக் கூறப்படும் இடத்தின் ஆவ... மேலும் பார்க்க

ஓசூரிலேயே நிறுத்தப்படும் பெங்களூரு பேருந்துகள்; மேகதாது பிரச்னை எதிரொலி: இரு மாநில எல்லையில் பதற்றம்

மேகதாது பகுதியில் காவிரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட, கர்நாடக அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. ஏற்கெனவே காவிரியில் தமிழகத்திற்கான உரிய தண்ணீரை திறந்து விடாமல் பிரச்னை நீடித்து வரும் நிலையில், க... மேலும் பார்க்க

காமராசரின் 124-வது பிறந்தநாள் விழா: முட்புதர் மண்டிக்கிடக்கும் மணிமுத்தாறு அணை நினைவுத்தூண்

மழைநீர், வீணாகக் கடலில் கலப்பதைத் தடுத்து விவசாயத்திற்கு பயன்படும் வகையில் பல அணைகள் கட்டப்பட்டது, தமிழகத்தை ஆட்சி செய்த மறைந்த முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராசர் ஆட்சி காலத்தில்தான். அவர் ஆட்சி செய... மேலும் பார்க்க

தமிழக தலைமைச் செயலாளர் சாய்குமாருக்கு 6 மாதங்கள் பணி நீட்டிப்பு: மத்திய அரசு ஒப்புதல்!

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக உள்ள சாய்குமார் ஐஏஎஸ்-க்கு மேலும் 6 மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.தமிழ்நாடு அரசின் பரிந்துரையைத் தொடர்ந்து, அகில இந்திய சேவைகள் தொட... மேலும் பார்க்க