'தோழர்’ என்று அழைத்தாலும், எப்போதுமே திருமா எனக்குத் தலைவராக தெரிகிறார் - 'பெருந...
`தேர்தல் களம் சூடா இருக்கு; இந்த முறை மாற்றத்தை பார்ப்பீங்க!' - நம்பிக்கை விருதுகள் விழாவில் சீமான்
`ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025' விழா மேடையில் கலகலப்பாகப் பேசிய சீமானிடம், சின்னச் சின்னதாக சில கேள்விகளை முன்வைத்தோம்.
`புதிய புதிய கூட்டணிகள் உருவாகியிருக்கும் இந்த நேரத்தில், தேர்தல் களம் எப்படி இருக்கப் போகுதுண்ணே?’ என்று கேட்டபோது, ``நான் வேட்பாளர்களைத் தேர்வு செய்யலை. ராணுவ வீரர்களைத் தேர்வு செஞ்சு வெச்சிருக்கேன்.

களம் சூடாத்தான் இருக்கும். நிச்சயமா ஒரு மாற்றத்தை இந்தத் தேர்தல்ல நீங்க பார்ப்பீங்க’’ என்றார்.
`அரசியல் பரபரப்புகளுக்கிடையே சினிமா பார்க்க எப்படி நேரம் கிடைக்கிறது?’ என்று கேட்டபோது... "நமக்குன்னு இருக்குற ஒரு நேரம், உறங்குற நேரம். அந்த நேரத்தைப் பறிச்சுத்தான்... அந்த நேரத்துல படிக்கிறது, மற்ற விஷயங்களைச் செய்யிறது... நேரு நாடாளுமன்றத்துல பேச வர்றாருன்னா, எல்லா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் காத்திருப்பாங்களாம். ஏன்னா அவ்வளவு சிறப்பா அவர் உரை இருக்கும்.
அவர் எப்படித் தயாராகிறார்னு உங்களுக்குத் தெரியும்... அவர் சிறையில இருக்கும்போது, `இன்னும் எத்தனை ஆண்டுகள் வேணாலும் என்னைச் சிறையில வை, புத்தகங்களை மட்டும் அனுப்பிவை’ன்னு சொன்னார். அந்த அளவுக்கு அவர் படிக்கிறார். அந்த அளவுக்குத் தயாராகி வந்து நாடாளுமன்றத்துல பேசுவார்.
`இதுக்கான நேரத்தை எப்படி ஒதுக்குறீங்க?’ன்னு கேட்டதுக்கு, `என்னுடைய வேலையாட்கள், பணியாட்கள்... அவன் நேரத்தை நான் எடுத்துக்குவேன். அவன் நேரத்தை நீங்க எப்படி எடுப்பீங்க..’ என்னைச் சரியா 10 மணிக்குத் தூங்க அனுப்பிடுவான். 10 மணிக்கு நான் தூங்கிடணும். ஆனா நான் 12 மணிக்குத்தான் தூங்குவேன். அவனுடைய நேரம் 10-லிருந்து 12-ஐ நான் இழுத்து, அந்த ரெண்டு மணி நேரம் படிச்சுக்குவேன்" அப்படிம்பார்.

அந்த நேரத்தை ஒதுக்கித்தான் நான் இந்தச் சினிமாக்களை, படங்களைப் பார்த்துக்கிறேன்’’ என்றவரிடம், `சினிமாவை மிஸ் பண்றீங்களா?’ என்று கேட்டபோது, ``தவறவிடாம எப்படி இருக்க முடியும் சொல்லுங்க... அதுல இருந்துதானே வந்தோம்... அதுதான் உயிர்மூச்சு’’ என்றார்.
``அப்போ படம் எடுப்பீங்களா?’’ என்று கேட்டதற்கு, ``இப்ப படம் எடுக்க நிறைய ஆளுங்க இருக்காங்க. இந்த நாட்டு மக்களுக்காகப் படையெடுக்கத்தான் ஆள் இல்லை. அதுக்காகத்தான் நான் நிக்கிறேன்’’ என்று கலகலப்பாக அரங்கை ரசிக்கவைத்தார்.
















