தமிழ்நாடு அரசின் திரைப்பட & சின்னத்திரை விருதுகள்; அசுரன், ஜெய் பீம் `டு' மாநகரம...
'தேர்தல் நேரத்தில் போராடுவது பேஷன் ஆகிவிட்டது!' - அமைச்சர் மா.சு சர்ச்சைப் பேச்சு!
சென்னை திருவான்மியூரில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுக்கும் நிகழ்வு நடந்திருந்தது. இதில் கலந்துகொண்டு பத்திரிகையாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'பணி நிரந்தரம் கேட்டு போராடுவது பேஷன் ஆகிவிட்டது' எனப் பேசியிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது.

கடந்த சில நாட்களாக பல்நோக்கு மருத்துவமனைகளை சேர்ந்த பணியாளர்கள் பணி நிரந்தரம் உட்பட சில கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர்.
இதுசம்பந்தமான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'அவர்கள் 6,7 சங்கங்களாக இருக்கிறார்கள். நாங்கள் அழைத்துப் பேசியிருக்கிறோம். அவர்கள் 2013 இல் அதிமுக ஆட்சியில் ஒப்பந்த ஊழியர்களாக பணியமர்த்தப்பட்டார்கள். தேர்தல் நேரத்தில் பணி நிரந்தரம் கேட்டு போராடுவது இப்போது பேஷனாகிவிட்டது' என்றார்.

மேற்கொண்டு பேசியவர், 'தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராகவே இருக்கிறது. எடப்பாடியின் ஆட்சியில் ஒரு நாளைக்கு 100 சம்பவங்கள் நடக்கும். தரமணி சம்பவத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர். 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படுகிறது. லேப்டாப்கள் வரவர ஒவ்வொரு கல்லூரிகளாக கொடுத்துக் கொண்டிருக்கிறோம்' என்றார்.













