செய்திகள் :

தேவையான எண்ணிக்கையில் நீதிபதிகள் இல்லை; வினாத்தாள் கசிவு விசாரிக்க விரைவு நீதிமன்றம்? - சிதம்பரம்

post image

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளதாக இந்திய பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

இது குறித்து காங்கிரஸ் சீனியர் தலைவர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்...

"போட்டித் தேர்வுகளில் நடக்கும் 'வினாத்தாள் கசிவு' போன்ற தீவிரமான பிரச்னைக்கும், அதனால் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் ஆபத்தில் சிக்குவதற்கும், விரைவு சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது மட்டுமே முழுமையான தீர்வாகிவிடாது.

நீட் தேர்வு
நீட் தேர்வு

பல்வேறு குற்றங்களை விசாரிப்பதற்காக இந்தியாவில் 775 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன.

சட்ட அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்த விரைவு சிறப்பு நீதிமன்றங்களில் 2,45,000-க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

விரைவு சிறப்பு நீதிமன்றம் என்பது வெறும் ஒரு நீதிமன்றக் கட்டிடம் மட்டும் அல்ல. அதற்கு நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள், அரசு வழக்கறிஞர்கள், நடைமுறை விதிகளைப் பின்பற்றுதல், புலனாய்வாளர்கள், கட்டளை ஆமையாளர்கள், சாட்சிகள் மற்றும் கூடுதல் நிதி ஆதாரங்கள் ஆகியவை தேவைப்படுகின்றன.

இதில் மிகப்பெரிய சவால் என்னவென்றால், தேவையான எண்ணிக்கையில் நீதிபதிகள் இல்லாததே ஆகும்; நீதிபதிகளின் பல பணியிடங்கள் காலியாகவே உள்ளன.

மற்ற அனைத்து அத்தியாவசியத் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே, ஒரு விரைவு சிறப்பு நீதிமன்றத்தால் பயன் அளிக்க முடியும்."

மாணவர்கள் போராட்டம் குறித்த சுற்றறிக்கை: "பாசிச அரசியலைத் தொடங்க ஆழம் பார்த்ததா தவெக அரசு?"- கனிமொழி

காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் இடதுசாரி போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து சில நிமிடங்களிலேயே இந்த ... மேலும் பார்க்க

`ஆளுங்கட்சி ஆகிவிட்டோம்' தவெக கூட்டணியை உறுதி செய்த திருமா; பாமக-வுக்கு வைத்த செக்! - பின்னணி என்ன?

தவெக அமைச்சரவையில் அமைச்சர் வன்னி அரசு இடம்பெற்றிருந்தாலும் எந்தக் கூட்டணியில் விசிக இருக்கிறது என்பதை தெளிவாக கூறாமல் திருமாவளவன் குழப்பி வந்தார். 'திமுகவுடன் எங்களது நட்பு தொடர்கிறது' என்று திமுகவிற... மேலும் பார்க்க

மேகமலை: `துணை ராணுவப் படையை அனுப்ப நேரிடும்; முழுமையாக இடித்து அகற்றுங்கள்'- உச்ச நீதிமன்றம் அதிரடி

மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் மாஞ்சோலையைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், இலவம் பஞ்சு தோட்டங்களையும் முழுமையாக அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான உத்... மேலும் பார்க்க

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?'- திமுக கேள்வி

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?' என திமுக கேள்வி எழுப்பியிருக்கிறது.இது தொடர்பாக வெளியாகியிருக்கும் அறிக்கையில், `நேற்றைய தினம் அதிகார ஆணவத்திமிரோடு, “திண்டுக்கல் மாவட்டம்... மேலும் பார்க்க

`மூன்று தமிழர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, ஆணவத்தோடு டி.கே.சிவக்குமார் பேசுவதா?' - சீமான் கண்டனம்

`கர்நாடக வனப்பகுதியில் மூன்று அப்பாவித்தமிழர்களை ஈவிரக்கமற்றுச் சுட்டுக்கொன்றுவிட்டு, எங்கள் மாநிலத்தின் விவகாரத்தில் தலையிடாது, உங்கள் வேலையைப் பாருங்கள் எனத் துளியும் குற்றவுணர்ச்சியோ, பொறுப்புணர்ச்... மேலும் பார்க்க

"அந்தத் தண்ணீரைக் குடிக்கிறாங்க, கோயிலுக்கு அபிஷேகம் பண்றாங்க" - கூவம் நதி குறித்து சௌமியா அன்புமணி

தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை, நீர்வளம், ஊரக வளர்ச்சி, சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டமன்ற விவாதத்தின்போதுபேசிய பாமக எம்எல்ஏ சௌமியா அன்ப... மேலும் பார்க்க