"வெளிநாட்டுப் பாணியில் காதலைச் சொல்கிறேன்" - காதலனைக் கட்டிவைத்து எரித்து கொன்ற ...
தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவாகப் பேரணி; பாஜக அமைச்சரை நடுரோட்டில் வறுத்தெடுத்த இளம் பெண்
சமீபத்தில் மக்களவையில் கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்தது. இதையடுத்து எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பா.ஜ.கவினர் மும்பையில் போராட்டம் நடத்தினர்.
மும்பையில் பா.ஜ.க அமைச்சர் கிரீஷ் மகாஜன் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவாக ஒர்லி பகுதியில் பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு செய்து இருந்தார். பேரணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
ஏராளமான பெண்கள் இதில் கலந்துகொண்டனர். இதனால் ஒர்லி பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் சாலையில் காத்து நின்றன.
அமைச்சர் கிரீஷ் மகாஜன் தனது கட்சி நிர்வாகிகளுடன் சாலையில் நின்று கொண்டிருந்தார். அந்நேரம் பள்ளிக்குச் சென்று இருந்த தனது மகளை அழைப்பதற்காக ஒரு பெண் இரு சக்கர வாகனத்தில் வந்தார்.
போக்குவரத்து நெருக்கடியால் நீண்ட நேரம் அப்பெண் நிற்க வேண்டியநிலை ஏற்பட்டது. இதனால் அப்பெண் கோபத்துடன் நேரடியாக அமைச்சர் கிரீஷ் மகாஜனிடம் வந்தார்.

அவர் அமைச்சரிடம், ஏன் இவ்வளவு பிஸியான ரோட்டில் பேரணி நடத்துகிறீர்கள். போராட்டம் நடத்துவதாக இருந்தால் மைதானம் அல்லது காலி இடத்தில் நடத்தவேண்டியதுதானே என்று கேட்டு வாக்குவாதம் செய்தார்.
அதோடு போக்குவரத்து நெருக்கடியால் அதிகமான மக்கள் காத்து நிற்கின்றனர். எனவே உடனே ரோட்டைக் காலி செய்யுங்கள். அருகில் காலி மைதானம் ஒன்று இருக்கிறது. அங்கு செல்லுங்கள் என்று தெரிவித்தார்.
மேலும், ''வெற்று மைதானத்திற்குச் சென்று சொல்ல விரும்புவதைச் சொல்லுங்கள், இங்கிருந்து வெளியேறுங்கள், போக்குவரத்தை நிறுத்தாதீர்கள். நூற்றுக்கணக்கான மக்கள் காத்திருக்கிறார்கள்'' என்று அமைச்சரிடம் அப்பெண் தெரிவித்தார்.
அவரிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் அமைச்சர் கிரீஷ் மகாஜன் திணறினார். அப்பெண்ணை போலீஸார் தனியாக அழைத்துச் சென்று அவரது குறையைக் கேட்டனர். அமைச்சருடன் இளம்பெண் வாக்குவாதம் செய்த வீடியோ சமூக வலைத்தளப் பக்கத்தில் வைரலாக பரவியது.
பொது இடம் என்பதால் பா.ஜ.கவினரால் அமைச்சருடன் வாக்குவாதம் செய்த பெண்ணை எதுவும் செய்ய முடியவில்லை. இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


















