செய்திகள் :

தொடரும் ஈரான் போர் பதற்றம்: முதலீட்டாளர்கள் உடனே 'செய்ய வேண்டிய' ஒன்று; 'செய்யக்கூடாத' ஒன்று!

post image

ஈரான் போர் தொடர்ந்து வருகிறது. இந்திய பங்குச்சந்தைகள் முதல் உலக பங்குச்சந்தைகள் வரை அனைத்தும் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்து வருகிறது.

இந்த நேரத்தில், முதலீட்டாளர்கள் செய்ய வேண்டிய ஒன்றையும், செய்யக்கூடாத ஒன்றையும் குறிப்பிடுகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.
பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்
பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்

"போர் மாதிரியான பதற்றச் சூழல்களில் ரீடெயில் முதலீட்டாளர்கள் பயந்து பங்குகளை விற்று விடக் கூடாது.

போர் தொடங்கியதும் சந்தைத் திணறுகிறது என்றால், அது உடனாடியான தாக்கம்.

எப்படியும் அந்தத் தாக்கத்தில் இருந்து சந்தை பவுன்ஸ்பேக் ஆகி வரும். அதனால், பயம் வேண்டாம்.

போர் குறித்த பல செய்திகளைக் கேட்கும்போது, பயம் வரும். ஆனால், பயத்தில் நல்ல முடிவுகளை எடுக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இதுவரை நடந்த அனைத்து போர்களின் தாக்கத்தில் இருந்தும் சந்தை மீண்டு வந்துள்ளது. இது வரலாறு. அதனால், நிதானம் தேவை.

இது பதற்றத்தில் சந்தையில் செய்யக்கூடாத தவறு.

இப்போது செய்ய வேண்டிய‌ ஒன்று...

பங்குச்சந்தையில் லாபம் தரக்கூடிய ஒரே ஃபார்முலா - 'இறக்கத்தில் பங்குகளை வாங்க வேண்டும்... ஏற்றத்தில் பங்குகளை விற்க வேண்டும்'.

பங்குகளை வாங்க வேண்டும் என்றால், தரமான பங்குகளைத் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும்.

முக்கியமாக, சந்தை இறங்கும் போது, நல்ல பங்குகள் பல குறைந்த விலைக்குக் கிடைக்கும் அவற்றை கவனத்தில் கொள்ளுங்கள்.

சரி... அது தான் சந்தை இறக்கத்தில் இருக்கிறதே என்று மொத்த பணத்தையும் இப்போதே முதலீடு செய்துவிடக் கூடாது.

ஆரம்பத்தில் 15 சதவிகித தொகையை முதலீடு செய்யுங்கள். இன்னும் போர் தொடரும் என்கிற பேச்சுகள் உள்ளன.

அப்போது சந்தை இறக்கத்திற்கு செல்லும் போது, அடுத்த 15 சதவிகிதத்தை முதலீடு செய்யுங்கள்.‌ இது தான் லாபம் பார்ப்பதற்கான சூப்பர் யுக்தி".

Share Market: 'நல்ல காலம் பொறக்குது?' இப்போவே 'இதை' நோட் பண்ணி வையுங்க முதலீட்டாளர்களே!

21 நாள்களாக ஈரான் போர் தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் ஈரான் மீதான தாக்குதலை நடத்திகொண்டே தான் இருக்கிறது. இதற்குப் பதிலடியாக, இஸ்ரேலிலும், வளைகுடா நாடுகளில் உள்ள எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத... மேலும் பார்க்க

HDFC தலைவர் ராஜினாமா: சந்தை கடும் சரிவு; வங்கியின் 'இந்த' செயல் காரணமா? முதலீட்டாளர்கள் இனி?

நேற்று இந்திய பங்குச்சந்தை 'பயங்கர' இறக்கத்தைக் கண்டது. நேற்று NSE 775 புள்ளிகளும், BSE 2,496 புள்ளிகளும் சரிந்திருந்தன. 2024-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு, இந்திய சந்தை ஒரே நாளில் இப்படியொரு பயங்... மேலும் பார்க்க

20 நாள்களாக தொடரும் ஈரான் போர்: கச்சா எண்ணெய் முதல் பங்குச்சந்தை வரை தாக்கம் என்ன? | Full Summary

இன்றோடு ஈரான் போர் தொடங்கி 20 நாள்கள் ஆகிறது. இந்தப் போர் ஈரானைத் தாண்டியும், இந்தியா வரை எப்படி மக்களைப் பாதித்துள்ளதோ, அதே மாதிரி உலக சந்தைகளையும் பாதித்துள்ளது. கடந்த 19 நாள்களாக, ஈரான் போர் இந்திய... மேலும் பார்க்க