செய்திகள் :

HDFC தலைவர் ராஜினாமா: சந்தை கடும் சரிவு; வங்கியின் 'இந்த' செயல் காரணமா? முதலீட்டாளர்கள் இனி?

post image

நேற்று இந்திய பங்குச்சந்தை 'பயங்கர' இறக்கத்தைக் கண்டது.

நேற்று NSE 775 புள்ளிகளும், BSE 2,496 புள்ளிகளும் சரிந்திருந்தன.

2024-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு, இந்திய சந்தை ஒரே நாளில் இப்படியொரு பயங்கர வீழ்ச்சியை சந்தை சந்திப்பது இதுவே முதல்முறை.

இந்தச் சரிவிற்கு ஈரான் போர்... கச்சா எண்ணெய் ஒரு காரணம் தான். ஆனால், அதைவிட, நேற்று HDFC வங்கியின் பகுதி நேரத் தலைவரும், சுதந்திர இயக்குநருமான அதானு சக்ரவர்த்தி தனது பதவியை ராஜினாமா செய்தது மிக முக்கிய காரணம்.

பங்குச்சந்தை சரிவு
பங்குச்சந்தை சரிவு

"கடந்த இரண்டு ஆண்டுகளாக, HDFC வங்கியில் நடக்கும் சில விஷயங்கள் மற்றும் நடைமுறைகள் என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடு மற்றும் கொள்கைகளுக்கு எதிராக உள்ளது" - இப்படி தனது ராஜினாமாவிற்கு அவர் கூறிய காரணம் சந்தையில் இன்னும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்திய பங்குச்சந்தை சரிவு, HDFC தலைவர் ராஜினாமா குறித்து பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே.பிரபாகரிடம் பேசினோம்.

"பொதுவாகவே, ஒரு பிரபல நிறுவனம் அல்லது வங்கியின் முக்கிய பொறுப்பில் இருப்பவர் தனது ராஜினாமா செய்யும்போது சந்தை ஜெர்க்கை காணும் தான்.

அதுவும் அதானு சக்ரவர்த்தி கூறியுள்ள காரணத்தைப் பார்த்தப் பின், சந்தை எப்படி எதிர்வினையாற்றாமல் இருக்கும்?

மேலும், அவர் ராஜினாமா காரணத்தில், 'கடந்த இரண்டு ஆண்டுகளாக...' என்று குறிப்பிட்டுள்ளார். அப்படி HDFC வங்கியில் இரண்டு ஆண்டுகளில் என்ன நடந்துள்ளது என்று பார்த்தால், HDFC லிமிடெட் மற்றும் HDFC வங்கியின் மிகப்பெரிய மெர்ஜர் நடந்துள்ளது.

அதானு சக்ரவர்த்தி
அதானு சக்ரவர்த்தி

இந்த மெர்ஜர் குறித்து தனது ராஜினாமா கடிதத்தில் அதானு சக்ரவர்த்தியும் தெரிவித்துள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ளதாவது... "மெர்ஜர் நடவடிக்கை HDFC வங்கி இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய வங்கியாக மாற்றியது. ஆனால், இந்த மெர்ஜருக்கான முழு பலனும் இன்னும் கிடைக்கவில்லை" என்று கூறியுள்ளார்.

இதனால், மெர்ஜர் பிரச்னை அதானு சக்ரவர்த்தி ராஜினாமாவிற்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தை யூகிக்கிறது.

இன்னொரு பக்கம், இந்த ராஜினாமாவிற்கு தனிப்பட்ட காரணங்கள் எதுவும் இல்லை என்று முக்கியமாக கூறியுள்ளார் அவர்.

'காரணமாக இருக்கலாம்' என்று சொல்லிவிட்டு, ஏன் மெர்ஜர் விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்த வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஆதித்யா பூரி முன்னால் இருந்தார்.

1994-ம் ஆண்டு இந்த வங்கி தொடங்கியதில் இருந்து 2020-ம் ஆண்டு அக்டோபர் வரை, அந்தப் பணியில் அவர் தொடர்ந்திருக்கிறார்.

ஆதித்யா பூரி தனது பதவி காலத்தில் இந்த மெர்ஜரை கடுமையாக எதிர்த்தார். அவரது பணிகாலத்திற்குப் பிறகு தான், மெர்ஜர் நடந்துள்ளது என்பதையும் இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டும்.

ஆதித்யா பூரி
ஆதித்யா பூரி

ஏன் மெர்ஜரை எதிர்த்தார்?

HDFC லிமிடெட் மற்றும் HDFC வங்கியை இணைத்தால், டெபாசிட் அதிகம் எடுக்க வேண்டும். பண இருப்பு விகிதம் (CRR), சட்டப்பூர்வ இருப்புத் தேவை (SLR) என அனைத்துமே மாறும்.

இதனால், வங்கியின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று மெர்ஜரை ஆதித்யா பூரி எதிர்த்தார்.

சமீப காலமாகவே அதாவது மெர்ஜருக்குப் பின், HDFC வங்கியின் வளர்ச்சி பெரிதும் இல்லை. அதை கட்டாயம் நாம் கவனிக்க வேண்டும்.

அது மாதிரி, முன்பு, HDFC வங்கியில் தான் குறைந்த அளவு டெபாசிட் தொகை இருந்தது. இப்போது அது மாறியிருக்கிறது.

அதுபோல, இப்போது இந்த வங்கி அதிக டெபாசிட் ரேட்டையும் வழங்குகிறது. இதை வங்கி அதன் வளர்ச்சிக்காக தான் செய்கிறது.

HDFC லிமிடெட் மற்றும் HDFC வங்கியை இணைத்தால் தான், பெரியளவில் வளர்ச்சி காணப்படுகிறது. தனியாக HDFC வங்கியை மட்டும் எடுத்து பார்த்தால், அவ்வளவாக வளர்ச்சி இல்லை.

அடுத்ததாக, மெர்ஜருக்குப் பிறகு, அசட்டின் தரமும் சிறப்பாக இல்லை.

இடைக்கால தலைவர்...

இப்போது இடைக்கால பகுதி நேரத் தலைவராக கேக்கி மிஸ்திரியை நியமித்துள்ளது HDFC வங்கி. இந்த நியமனம் இன்னும் மூன்று மாத காலத்திற்கு செல்லும்.

அடுத்தது, யார் இந்தப் பதவியில் நியமிக்கப்படப் போகிறார் என்பதைப் பொறுத்து, அந்த வங்கியின் பங்குகளில் மாற்றங்கள் நிச்சயம் இருக்கும்.

கேக்கி மிஸ்திரி
கேக்கி மிஸ்திரி

சரி... HDFC வங்கியில் முதலீடு செய்திருப்பவர்கள் என்ன செய்யலாம்?

முதலீடு என்று வரும்போது, முதலீட்டாளர்கள் ஒரு தலைவரின் ராஜினாமாவை வைத்து மட்டும் முடிவெடுக்கக் கூடாது. ஏனெனில் இது தற்காலிக நிகழ்வே. விரைவில் இன்னொரு தலைவர் அமர்த்தப்படுவார் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அதனால், முதலீட்டாளர்கள் வங்கியின் வளர்ச்சி மற்றும் எதிர்காலம் பொறுத்து தான் முதலீடு குறித்த முடிவுகளை எடுக்க வேண்டும்.

இந்த வங்கியின் கடந்த ஐந்து ஆண்டுகள் வளர்ச்சியை எடுத்துப்பார்த்தால் அவ்வளவாக இல்லை.

இன்னொரு பக்கம், இந்தியாவில் HDFC, ICICI, ஆக்சிஸ், கோட்டக் ஆகிய நான்கு வங்கிகளுக்கு மிக நல்ல வருமானம் இருந்து வருகிறது.

இதற்கு அவர்களின் 'கட்டண வருமானம் (Fee Income)'-ஏ மிக முக்கிய காரணம். கட்டண வருமானத்தில் பரிவர்த்தனைக்கு, கணக்கு மெயின்டெனன்ஸிற்கு வாங்கும் கட்டணம், கடனைத் தவிர்த்து பிற நிதி பொருள்களை விற்று பெறும் கட்டணங்கள் போன்றவை பொருந்தும்.

இந்த வங்கிகளின் நான்கில் ஒரு பங்கு வருமானம் இதில் இருந்து தான் வருகின்றன.

இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி

ஆனால், இந்த கட்டண வருமானத்திற்கு இப்போது செக் உருவாகி உள்ளது. அதாவது, இனி வங்கிகள் மூன்றாம் நபரின் பொருள்களை விற்க பல நெறிமுறைகள், கட்டுப்பாடுகளை விதித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.

இதனால், HDFC வங்கிக்கு அடி விழலாம். முதலீட்டாளர்கள் இதை கவனிக்க வேண்டும்.

ஆக, இந்த விஷயங்களை ஆராய்ந்து தான் முதலீட்டாளர்கள் முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டும்".

Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters

Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed.

INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.

One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration)

20 நாள்களாக தொடரும் ஈரான் போர்: கச்சா எண்ணெய் முதல் பங்குச்சந்தை வரை தாக்கம் என்ன? | Full Summary

இன்றோடு ஈரான் போர் தொடங்கி 20 நாள்கள் ஆகிறது. இந்தப் போர் ஈரானைத் தாண்டியும், இந்தியா வரை எப்படி மக்களைப் பாதித்துள்ளதோ, அதே மாதிரி உலக சந்தைகளையும் பாதித்துள்ளது. கடந்த 19 நாள்களாக, ஈரான் போர் இந்திய... மேலும் பார்க்க

தங்கம், வெள்ளி, செம்புடன் சேர்த்து 'இந்த' உலோகத்தையும் கவனிங்க; அடுத்த ஹீரோ இதுதானா?

தங்கம் விலை நிலையாக இருந்து வருகிறது. வெள்ளி, செம்பு ஆகியவற்றின் விலை போருக்குப் பின் தேவை கருதி உயரும் என்று பொருளாதார நிபுணர்கள் திரும்பத் திரும்ப கூறிக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் சைலண்டாக இன... மேலும் பார்க்க