செய்திகள் :

`தொண்டை சரியில்ல' - ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை எப்போது கிடைக்கும் என்ற கேள்விக்கு அமைச்சரின் பதில்!

post image

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது த.வெ.க சார்பில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,500 உரிமைத்தொகை வழங்கப்படும், ஆண்டுக்கு 6 காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.

உரிமைத்தொகை குறித்து மகளிர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.  இந்த நிலையில், கடந்த 20-ம் தேதி கோவை மாவட்டம், அன்னூரில் த.வெ.கவில் நடந்த மாற்றிகட்சியினர் இணையும் விழாவில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜிடம் மகளிர் உரிமைத்தொகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அமைச்சர் ஜெகதீஸ்வரி

“தற்போது மாநிலத்தின் நிதிநிலைமை சரியில்லை. அதனை படிப்படியாக சீரமைத்த பிறகே இந்தத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த முடியும். இப்போதைக்கு சாத்தியமில்லை” என சூசுகமாகப் பதிலளித்துவிட்டுக் கிளம்பினார். அவரின் இந்தப் பேச்சு இணையதளத்தில் வைரலானது.  

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் நேற்று 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இதில், விருதுநகர் நகராட்சியிலுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி போலியோ சொட்டு மருந்து முகாமினை தொடங்கி வைத்தார்.

நிகழ்வின் நிறைவில், “தேர்தல் வாக்குறுதிகளில் மகளிருக்காக அறிவிக்கப்பட்ட ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை எப்போது கிடைக்கும் மேடம்?” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, “எனக்கு தொண்டை சரியில்ல” எனச் சொல்லிக் கொண்டே வேகமாக நடந்து காரில் ஏறிக் கிளம்பிச் சென்றார்.

அமைச்சர் ஜெகதீஸ்வரி

“சம்மந்தப்பட்ட துறை அமைச்சரே இப்படி பதில் சொல்வதா?” என, குழந்தைகளுக்கு சொட்டுமருந்து போட வந்த தாய்மார்கள் தங்களுக்குள் புலம்பிக் கொண்டனர். அமைச்சர் ஜெகதீஸ்வரியின் மழுப்பல் கலந்த அலட்சியமான இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.!

மீண்டும் பற்றி எரியும் நேபாள் - தேர்ந்தெடுத்த அரசுக்கு எதிராகவே போராடும் Gen Z | என்ன காரணம்?

ஒரு தீப்பொறி ஒரு பெருங்காட்டை எரிப்பதற்கு போதுமானது என்பார்கள். அதுபோல, நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் 25 வயது இளைஞர் ஒருவரின் தற்கொலை, ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கி, மக்கள் போராட்டத் தீயை மூட்டி... மேலும் பார்க்க

`இந்து ராஷ்டிரத்தால் யாருக்கும் ஆபத்தில்லை; நம் மூதாதையர் ஒன்றே'- ராம்தேவ் பேச்சால் கிளம்பிய சர்ச்சை

'இந்து ராஷ்டிரா' என்ற கருத்தைக் கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை என்றும், இந்தியாவில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார். "நம்... மேலும் பார்க்க

துணைவேந்தர் தேடல் : 'மாநில உரிமைகளைத் தமிழக அரசு தாரை வார்க்கக் கூடாது!' - அன்புமணி கண்டனம்

தமிழ்நாட்டில் உள்ள மாநில அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுக்கும் தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பிரதிநிதியைச் சேர்ப்பதற்கான தமிழக அரசின் சட்டத் திருத்த முயற்சியை... மேலும் பார்க்க

`` `கொத்து புரோட்டா' என அநாகரிகமாகப் பேசுகிறார்; இது தொடந்தால்..!" - ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை!

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``முதல்வர் விஜய் கரூர் சம்பவம் குறித்துப் பேசிய பேச்சுகள் அனைத்தும் உண்மைக்கு மாறாகவும், வழக்கைப் பாதிக்கக... மேலும் பார்க்க

ஈரான் Hitlist-ல் இருக்கும் தலைவர்கள்: ட்ரம்ப், நெதன்யாகு, மெலோனி... - ஈரானிய செய்தித்தாளின் லிஸ்ட்!

ஈரான், அமெரிக்கா இடையே மீண்டும் போர் மூண்டுள்ளது. இந்த நேரத்தில், ஈரானில் உள்ள 'ஹம்ஷஹ்ரி' என்னும் செய்தித்தாள் ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயோதுல்லா அலி காமேனியின் மரணத்திற்கு பழி தீர்க்க ஈரான் குற... மேலும் பார்க்க