செய்திகள் :

தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவை மரியாதை நிமித்தமாக சந்தித்த வடிவேல் கிராக்கர்ஸ் நிறுவன இயக்குநர்கள்!

post image

கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் சிவகாசி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நன்கு படித்த விருதுநகரைப் பூர்வீகமாக கொண்ட விருதை மகள் தான், மாண்புமிகு அமைச்சர் செல்வி கீர்த்தனா.

தமது அதிரடியான தேர்தல் வியூகத்தினால் இதற்கு முன் சிவகாசி தொகுதியில் எம்.எல்.ஏ-வாக வலம் வந்த அ.தி.மு.க-வைச் சேர்ந்த கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் காங்கிரஸைச் சேர்ந்த அசோகன் ஆகிய இருவரையும் பின்னுக்குத் தள்ளி ஒரு புரட்சி ஏற்படுத்திய 29 வயதே ஆன ஓர் இளம்பெண் வேட்பாளர்த்தான் கீர்த்தனா.

இவரின் அசாத்திய தேர்தல் வியூகத்தையும், தொகுதியின் அடிப்படை பிரச்னைகளைக் கண்டறிந்து வெளிக்கொணர்ந்த ஆக்கபூர்வ சிந்தனைகளையும் உற்று நோக்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை, இவரை தொழில்துறை அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து கூடுதல் முக்கிய பொறுப்புகளையும் இவர் வசம் ஒப்படைத்தது. 

அமைச்சர் கீர்த்தனா - வடிவேல் கிராக்கர்ஸ் நிறுவன இயக்குநர்கள்

பொதுவாகவே `குட்டி ஜப்பான்' என அழைக்கப்படும் சிவகாசி நகரம் பட்டாசு, தீப்பெட்டி மற்றும் அச்சு தொழில்களின் தமிழக மையமாகவே விளங்கிக் கொண்டிருக்கிறது. இந்தத் தொகுதியில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினருக்கு தொழில் துறை வழங்கப்பட்ட பின்னர், அப்பகுதியைச் சேர்ந்த பல தொழில் முனைவோர்களும் அமைச்சர் கீர்த்தனாவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வருகின்றனர். 

அந்த வகையில் கடந்த  ஜூன் 14 - 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவகாசியை மையமாகக் கொண்டு இந்தியா முழுவதும் தனது வியாபாரத்தை விரிவுபடுத்திய... சிவகாசியில் மிகவும் பிரபலமான வடிவேல் பைரோடெக் நிறுவனத்தின் இயக்குநர்களான திரு வசந்த விகாஸ் ஆறுமுகசாமி அவர்களும், திரு அதிபன் ஆறுமுகசாமி அவர்களும் மரியாதை நிமித்தமாக மாண்புமிகு தொழில்துறை அமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். 

இந்தச் சந்திப்பில் சீனாவில் உள்ள பட்டாசு நிறுவனக் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள வடிவேல் நிறுவன இயக்குநர்கள் சிவகாசியின் பட்டாசு தொழில் முன்னெடுப்புகள் சம்பந்தமாகவும் அவற்றுக்கான ஏற்றுமதி சந்தையிடுதல் சம்பந்தமாகவும் தொழிலாளர்களின் நலன்கள் சம்பந்தமாகவும் பலதரப்பட்ட முக்கிய விவரங்களையும் அதை உள்ளடக்கிய பிரச்சனைகளையும் முன்வைத்து அவற்றை களைவதற்கான கோரிக்கைகளையும் அமைச்சரிடம் முன் வைத்தனர். 

அமைச்சர் கீர்த்தனா - வடிவேல் கிராக்கர்ஸ் நிறுவன இயக்குநர்கள்

சில பல நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வடிவேல் நிறுவன இயக்குநர்களின் கோரிக்கைகளை பொறுமையாக கேட்டு அறிந்து, பின்னர் அதற்கான தீர்வுகளை முன்னெடுப்பதற்கான சிக்கல்களையும் கூறி விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

நம்பிக்கையின் பாரம்பரியத்தில் புதிய அத்தியாயம்; 67-வது ஷோரூமை திறந்த ஜிஆர்டி ஜுவல்லர்ஸ்

ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் இராஜபாளையத்தில் தனது 67வது ஷோரூமை திறந்தது. அறுபது வருடங்களுக்கும் மேலாக மக்களின் நம்பிக்கையை வென்று வரும் இந்தியாவின் முன்னணி நகை நிறுவனங்களில் ஒன்றான ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் தனது 67வது... மேலும் பார்க்க

தென்னிந்தியாவின் முன்னணி நகை நிறுவனமான லலிதா ஜூவல்லரி, இப்போது போரூரில்!

தென்னிந்தியாவின் முன்னணி நகை நிறுவனமான லலிதா ஜூவல்லரி, தனது 64-வது கிளையை சென்னை, போரூரில் கடந்த மே 29-ம் தேதி திறந்திருக்கிறது. 42 ஆண்டுகால பாரம்பரியம் மிக்கது லலிதா ஜூவல்லரி. லலிதா ஜூவல்லரியின் தனிச... மேலும் பார்க்க

`தமிழ்நாடு கேரளத்தை இணைக்கும் மெட்டு சாலை; அரசிடம் வலியுறுத்தப்படும்!' - ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ

தேவாரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை வழியாக தமிழகம் கேரளத்தை இணைக்கும் வண்டிப் பாதையை தார் சாலையாக மாற்ற வேண்டும் என்ற திட்டம் தற்போது வரை கனவு திட்டமாகவே உள்ளது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றிட அந்தப் ப... மேலும் பார்க்க

கிராமிற்கு கூடுதலாக சிறப்பு சலுகை ₹150; ‘கோல்டு எக்ஸ்சேஞ்ச் மேளா’ அறிவித்துள்ள ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்!

1964 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், இந்தியாவின் மிகவும் நம்பகமான நகை நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து, சிறப்பான கைவினைத்திறன், காலத்தால் அழியாத வடிவமைப்புகள் மற்றும் வாடிக்கையாளர்களின் நீண்டந... மேலும் பார்க்க

கம்பம்: அரசு மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு; அதிகாரிகளை எச்சரித்த எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா!

தேனி மாவட்டம், கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ., பொதுமக்களிடம் நே... மேலும் பார்க்க