கிராமிற்கு கூடுதலாக சிறப்பு சலுகை ₹150; ‘கோல்டு எக்ஸ்சேஞ்ச் மேளா’ அறிவித்துள்ள ஜ...
கிராமிற்கு கூடுதலாக சிறப்பு சலுகை ₹150; ‘கோல்டு எக்ஸ்சேஞ்ச் மேளா’ அறிவித்துள்ள ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்!
1964 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், இந்தியாவின் மிகவும் நம்பகமான நகை நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து, சிறப்பான கைவினைத்திறன், காலத்தால் அழியாத வடிவமைப்புகள் மற்றும் வாடிக்கையாளர்களின் நீண்டநாள் நம்பிக்கைக்காக அறியப்படுகிறது. தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ரத்தின நகைகளின் பிரத்யேக கலெக்ஷன்களுடன், தென்னிந்தியா மற்றும் சிங்கப்பூரில் உள்ள மொத்தம் 65-க்கும் மேற்பட்ட ஷோரூம்கள் மூலம், உண்மைத்தன்மை, புதுமை மற்றும் சமூக முன்னேற்றம் ஆகியவற்றில் உறுதியாக இருந்து, பல தலைமுறைகள் கடந்தும் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவை செய்து வருகிறது.
இந்த உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் மக்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தனது ‘கோல்டு எக்ஸ்சேஞ்ச் மேளா’வை அறிவித்துள்ளது. இந்த முயற்சியின் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய தங்கத்தை மாற்றி, இந்தியாவின் வலுவான எதிர்காலத்தை உருவாக்கும் பெரிய மாற்றத்தின் ஒரு பகுதியாக இணைய அழைக்கப்படுகிறார்கள்.

குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் நடைபெறும் இந்த சிறப்பு சலுகையின் கீழ், பழைய தங்க மாற்றத்திற்கு கிராமிற்கு கூடுதலாக ரூ.150 வழங்கப்படுகிறது. இதனால், திருமண விழாக்கள் மற்றும் சிறப்பு தருணங்களுக்காக தங்களின் பழைய நகைகளை புதிய அழகிய வடிவமைப்புகளாக மாற்றிக்கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது.
ஏற்கனவே இலட்சக்கணக்கான இந்தியர்கள் ஜிஆர்டி ஜூவல்லர்ஸில் தங்களின் பழைய தங்கத்தை மாற்றி வருவதால், இந்த முயற்சி நாட்டின் தங்க இறக்குமதி சார்பை குறைத்து, நிலையான தங்க பொருளாதாரத்தை உருவாக்கும் கூட்டுப்பயணமாகவும் அமைகிறது.
இந்த முயற்சி குறித்து ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். ‘ஆனந்த்’ அனந்தபத்மநாபன் அவர்கள் கூறுகையில்:
“இந்திய குடும்பங்களிலும் பாரம்பரியங்களிலும் தங்கம் எப்போதும் முக்கியமான இடத்தை பெற்றுள்ளது. எங்களின் ‘கோல்டு எக்ஸ்சேஞ்ச் மேளா’வின் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய தங்கத்திற்கு அதிக மதிப்பைப் பெறுவதோடு, வலுவான மற்றும் தன்னிறைவு கொண்ட இந்தியாவை உருவாக்கும் முயற்சியிலும் பங்கேற்கிறார்கள்” என்றார்.

ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் மற்றொரு நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில்:
“ஜிஆர்டி ஜூவல்லர்ஸில் ஒவ்வொரு முயற்சியும் வாடிக்கையாளர்களின் நன்மை மற்றும் நீண்டகால மதிப்பை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்படுகிறது. குறிப்பாக இந்த ‘கோல்டு எக்ஸ்சேஞ்ச் மேளா’வின் மூலம், வாடிக்கையாளர்கள் கூடுதல் பலன்களுடன் புதிய அழகிய நகைகளுக்கு மேம்படுத்திக்கொள்ள முடிவதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு மாற்றமும் இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு பங்களிக்கும் ஒரு அர்த்தமுள்ள செயல்பாட்டிற்கும் ஊக்கமளிக்கிறது” என்றார்.
















