செய்திகள் :

'ஏர் ஏசியாவில் வேலை!' - சென்னைஸ் அமிர்த்த நடத்திய வேலைவாய்ப்பு முகாம்!

post image

சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேஷன் கல்லூரியில், ஏர் ஏசியா வளாக வேலைவாய்ப்பு (CAMPUS INTERVIEW) முகாம் சிறப்பு விருந்தினர் சரவணன் ராஜ் முனுசாமி, கௌரவ விருந்தினர் டத்தோ ஸெரி டாக்டர் எஸ்.கே. தேவமணி மற்றும் சென்னைஸ் அமிர்தா கல்விக்குழும நிறுவனர் பூமிநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

சென்னையில் விமானத் துறையில் கல்வி–தொழில் இணைப்பை வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாக, சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேஷன் கல்லூரி வளாகத்தில் ஏர் ஏசியா நிறுவனம் முதன்முறையாக வளாக வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது.

சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட்
சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட்

இந்த வேலைவாய்ப்பு முகாமை வெற்றிகரமாக நடத்திய சென்னைஸ் அமிர்தா, தனது மாணவர்களுக்கு ஆசியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான ஏர்ஏசியாவில் நேரடி வேலைவாய்ப்பு வாய்ப்புகளை வழங்கியது.

குறைந்த செலவில் விமானப் பயணத்தை மக்களுக்கு எளிதாகக் கொண்டு வந்த ஏர்ஏசியா, தனது விரிந்த சர்வதேச வலையமைப்பு, வலுவான பிராண்ட் நிலை மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சி மூலம் உலக விமானத் துறையில் முன்னணி அளவுகோல்களை உருவாக்கி வருகிறது.

இதனால், விமானத் துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞர்களுக்கு இது மிகவும் மனம் கவர்ந்த நிறுவனமாகத் திகழ்கிறது.

விமான தொழில்நுட்பக் கல்வி மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வித் துறையில் சிறப்பான அனுபவம் கொண்ட சென்னைஸ் அமிர்தா, இதுவரை 31,650-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தந்துள்ளது.

இதன் மூலம், உலகத் தரத்திற்கேற்ற தொழில்நுட்பத் திறன்கள் கொண்ட நிபுணர்களை உருவாக்கும் தனது அர்ப்பணிப்பை சென்னைஸ் அமிர்தா உறுதிப்படுத்தியுள்ளது.

நிகழ்ச்சியின்போது, ஏர்ஏசியா ரெட்க்யூ (RedQ), கோலாலம்பூரில் AOC லைன் பராமரிப்புப் பிரிவுத் தலைவரான திரு. சரவணன் ராஜ் முனிசாமி அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, விமானத் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள், செயல்திறன் மேம்பாடு மற்றும் சர்வதேச வாய்ப்புகள் குறித்து பயனுள்ள கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

இந்த வளாக வேலைவாய்ப்பு முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், ஏர்ஏசியாவில் 6 மாத கால பயிற்சி (Internship) பெறுவார்கள். அவர்களின் செயல்திறனைப் பொறுத்து உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.

மேலும், இந்தத் திட்டம் மூலம் சர்வதேச விமான செயல்பாடுகள் குறித்து அனுபவம் பெறும் வாய்ப்பும், வெளிநாட்டு பணியிட முன்னேற்றத்திற்கான பாதையும் உருவாகிறது.

சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் நிறுவனர் பூமிநாதன்
சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் நிறுவனர் பூமிநாதன்

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, மலேசியாவின் முன்னாள் துணை அமைச்சரும், பெராக் மாநில சட்டமன்றத்தின் முன்னாள் தலைவருமான மாண்புமிகு டத்தோ’ ஸெரி டாக்டர் எஸ். கே. தேவமணி அவர்கள் புதிய அரங்கத்தைத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வு, சென்னைஸ் அமிர்தா கல்விக் குழுமத்தின் தலைவர் திரு. பூமி நாதன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த முயற்சி, கல்வி பயிற்சியையும் தொழில்துறை தேவைகளையும் இணைக்கும் பாலமாக இருந்து, மாணவர்கள் உலகளாவிய விமானத் துறையில் தங்கள் தொழில்முனைவை முன்னெடுக்க உதவுகிறது.

கடலூர்: GRT ஜுவெல்லர்ஸின் புதிய பிரம்மாண்ட ஷோரூம்: வாடிக்கையாளர்களுக்கு சிறப்புச் சலுகைகள்!

1964-ம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் காலத்தால் அழியாத கைவினைத்திறன் ஆகியவற்றுடன் அடையாளமாக விளங்கும் ஜி.ஆர்.டி ஜுவெல்லர்ஸ், கடலூர் இம்பீரியல் சாலையில் இன்னும் பெரிதான, ... மேலும் பார்க்க

Chitti Innovators League: அதிரடி அறிவியல், மேம்பட்ட சிந்தனை; இளம் கண்டுபிடிப்பாளர்கள் களம் கண்ட மேடை

சாதாரணமாகத் தோன்றும் குழந்தைகளின் எண்ணங்கள்… சரியான வழிகாட்டுதல் கிடைத்தால், அவை எதிர்கால தயாரிப்புகளாக மாறும். அந்த மாற்றத்தை நேரில் காட்டிய நிகழ்ச்சிதான் `சிட்டி இனோவேட்டர்ஸ் லீக் 2026 ( Chitti Inno... மேலும் பார்க்க

UNAVU EXPO 2026: 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்; 500க்கும் மேற்பட்ட பிராண்டுகள் - வெளியான அறிவிப்பு!

84 ஆண்டுகளைக் கடந்த பாரம்பரியமிக்க தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் (TNHA), 1,00,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களையும், 5,00,000-க்கும் அதிகமான வணிக நிறுவனங்களையும் (5 நட்சத்திரம் முதல் பட்ஜெட் ஓட்டல்கள் வர... மேலும் பார்க்க

சென்னை: பிரமாண்டமாய் நடைபெற்ற சலானி ஜுவல்லரி மார்ட்-ன் 13வது ஆண்டு விழா; ஊழியர்களுக்கு சிறப்பு பரிசு

மக்களின் நன்மதிப்பையும் பேராதரவையும் பெற்ற தி.நகர் சலானி ஜுவல்லரி மார்ட்-ன் 13வது ஆண்டு விழா, நேற்று பிரமாண்டமாய் ஹோட்டல் கிராண்ட் செர்டன்-ல் நடைபெற்றது.​மதுரை மற்றும் பாண்டிச்சேரி கிளைகளில் இருந்து 5... மேலும் பார்க்க

அதிநவீன ரோபோடிக் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை! - வெற்றிகரமாகச் சாத்தியப்படுத்திய சென்னை அபோல்லோ

அபோல்லோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் மற்றும் அபோல்லோ ஸ்பைன் கிளினிக், தேனாம்பேட்டை, கடுமையான இளம்வயது காரணமறியாத ஸ்கோலியோசிஸால் பாதிக்கப்பட்ட 15 வயது சர்வதேச நோயாளிக்கு சிக்கலான ரோபோட்டிக் உதவியுடன் மு... மேலும் பார்க்க

சென்னை: `நகை உலகம் இதுவரை கண்டிராத பிரமாண்டம்'- புதிதாக திறக்கப்பட்டுள்ள லலிதா ஜுவல்லரி 63 வது கிளை!

லலிதா ஜுவல்லரி நிறுவனத்தின் 63 வது கிளை சென்னை தியாகராய நகரில் உள்ள உஸ்மான் சாலையில் இன்று திறக்கப்பட்டது. நகை உலகம் இதுவரை கண்டிராத வகையில் மிக மிகப் பிரத்தியேகமான நகை ரகங்களை இந்த புதிய கிளையில் அறி... மேலும் பார்க்க