செய்திகள் :

நடிகர் நானா படேகர் இறப்பு இயற்கையானது இல்லையா? கோவா போலீஸார் வழக்கு பதிவு

post image

பாலிவுட் நடிகர் நானா படேகர் நேற்று காலை கோவாவில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். மாரடைப்பு ஏற்பட்டு வீட்டில் மயங்கி கிடந்த நானா படேகரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று இதய துடிப்பை மீட்டெடுக்க டாக்டர்கள் 40 நிமிடம் போராடினர். ஆனால் அந்த முயற்சி பலனலிக்கவில்லை. இறந்து போன நானா படேகரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு புனேயில் உள்ள அவரது ஊரில் இருக்கும் பண்ணை வீட்டில் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் புதிய திருப்பமாக நடிகர் நானா படேகரின் மரணத்தை கோவா போலீஸார் இயற்கைக்கு மாறான மரணம் என்று கூறி வழக்குப் பதிவு செய்துள்ளது. பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் பிரிவு 194 இன் கீழ் பனாஜி போலீஸாரால் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீஸார் தாக்கல் செய்து அறிக்கையில்,''நானா படேகர் டோனா பவுலாவில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து மணிப்பால் மருத்துவமனையின் விபத்து வார்டுக்கு இறந்த நிலையில் கொண்டு வரப்பட்டார். மணிப்பால் மருத்துவமனை டாக்டர்கள் காலை 8.07 மணிக்கு போலீஸாரை தொடர்பு கொண்டு இது குறித்து தகவல் கொடுத்தனர்.

அதனை தொடர்ந்து மணிப்பால் மருத்துவமனை வார்டில் நானா படேகர் வைக்கப்பட்டு இருந்த வார்டை போலீஸார் பார்வையிட்டார். இது குறித்து மருத்துவ அதிகாரியுடன் விவாதிக்கப்பட்டது. அதன்பிறகு இது குறித்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, பிஎன்எஸ்எஸ் பிரிவு 194ன் கீழ் இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது'' என்று போலீஸார் ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளனர். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருப்பதால் போலீஸ் அதிகாரி நிதின் நாயக் தலைமையில் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இது குறித்த கூடுதல் விவரங்களை போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர். பிரேத பரிசோதனை முடிவு வெளியான பின்னரே வழக்கு பிரிவை போலீசார் மாற்றுவர்கள் என சொல்லப்படுகிறது.

மறைந்த நடிகர் நானா படேகர் உடல் இரவில் அரசு மரியாதையுடன் புனே பண்ணை வீட்டில் தகனம்

பாலிவுட் நடிகர் நானா படேகர் நேற்று காலை கோவாவில் உள்ள தனது இல்லத்தில் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது உடல் மருத்துவ நடைமுறைக்கு பிறகு புனே அருகில் உள்ள அவரது சொந்த கிராமமான டோஞ்சேயில் இருக்கும் அவர... மேலும் பார்க்க

'மும்பையின் நெருக்கடி எனக்கு பிடிக்காது' - புனே மலையடிவார பண்ணை வீட்டில் நானா படேகரின் இறுதிச்சடங்கு

இன்று காலை கோவாவில் மாரடைப்பு ஏற்பட்டு காலமான நடிகர் நானா படேகர் எப்போதும் அமைதியான சூழலில் வாழ வேண்டும் என்று நினைப்பவர். பொதுவாக நானா படேகருக்கு சினிமா படப்பிடிப்புகள் மற்றும் வேலை அதிகமாக மும்பையில... மேலும் பார்க்க

Nana Patekar: "நாளை உயிருடன் இருப்பேனா, இல்லையா? என்பது நிச்சயமில்லை" - வைரலாகும் நானா படேகர் வீடியோ

பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் மாரடைப்பால் இன்று (அக்.8) உயிரிழந்திருக்கிறார். அவருக்கு வயது 75. கோவாவில் உள்ள தனது வீட்டில் சுய நினைவை இழந்து மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட நடிகர் நானா படேகர், ... மேலும் பார்க்க

நானா படேகர் : "ரத்தினத்தை இழந்த இந்திய சினிமா" - 90 படங்கள்; 50 ஆண்டுகளில் 3 தேசிய விருதுகள்

இன்று காலை பழம்பெரும் நடிகர் நானா படேகர் மாரடைப்பால் 75 வயதில் காலமானார் என்ற சோகமான செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. கோவாவில் உள்ள அவரது வீட்டில் மயங்கிய நிலையில் காணப்பட்ட நானாபடே... மேலும் பார்க்க

Nana Patekar: '13 வயதில் ரூ.35 சம்பளம்' - பெயிண்ட்டராக சினிமா பயணத்தைத் தொடங்கிய நானா படேகரின் கதை

பாலிவுட் நடிகர் நானா படேகர்(75) இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். நானா படேகர் தனது இளமைக் காலத்தில் கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தார். இதனால் தனது 13 வயதிலேயே வேலை செய்ய ஆரம்பித்தார். கட... மேலும் பார்க்க

"இதயத் துடிப்பைக் கொண்டு வர 45 நிமிடங்கள் போராடினோம்" - நானா படேகரைக் காப்பாற்ற முயன்ற டாக்டர்கள்

பாலிவுட் நடிகர் நானாபடேகர் இன்று அதிகாலையில் கோவாவில் உள்ள அவரது இல்லத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை டாக்டர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அவரது இதயத் துடிப்பை மீண்டும் கொண்டு வர போராடினர... மேலும் பார்க்க