செய்திகள் :

நாகர்கோவில் யூடியூப்பர் வீட்டில் கொள்ளை; "வீடியோ பார்த்து ஸ்கெட்ச் போட்டனர்" - போலீஸ் சொல்வது என்ன?

post image

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வி.ஐ.பி கார்டனில் வசித்துவரும் யூடியூப்பர் மதுமிதா வீட்டில் கடந்த 24-ம் தேதி இரவு வீட்டின் பின் கதவை கட்டர் மெஷின் மூலம் உடைத்து சுமார் 118 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 98 சவரன் நகைகள் மீட்பக்கட்டுள்ளன. இது சம்பந்தமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்ஷுல் நாகர் உத்தரவின்பேரில் கன்னியாகுமரி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையில் ராஜாக்கமங்கலம் காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி மேற்பார்வையில் உதவி ஆய்வாளர்கள் நேசமணிகண்டன், அனுஜன், வினீஷ்பாபு, தனிஷ் லியோன், பிரிய ராஜ்குமார் ஆகியோர் அடங்கிய 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.​

தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சம்பவ இடத்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் மொத்தமாக சம்பவ இடத்திலிருந்து ஸ்ரீவைகுண்டம் வரை 160 சிசிடிவி கேமராக்கள் மற்றும் 35 செல்போன் டவர் லொக்கேசன்கள் ஆய்வு செய்யப்பட்டு, ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை என்பவரின் மகன் இசக்கி பாண்டி (30), மற்றும் முக்கூடலைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவரின் மகன் முருகன் (28) ஆகியோரை அடையாளம் கண்டனர்.

கைதுசெய்யப்பட்ட இசக்கிப்பாண்டி, முருகன், முருகேசன், தங்கபாண்டி
கைதுசெய்யப்பட்ட இசக்கிப்பாண்டி, முருகன், முருகேசன், தங்கபாண்டி

அவர்கள் இருவரும் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. இந்நிலையில் அவர்களைப் பின்தொடர்ந்து எறும்புகாட்டில் வைத்து வாகன சோதனை மேற்கொண்டு இருவரையும் கைதுசெய்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தி, பெற்ற வாக்குமூலம் மூலம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த முப்பிடாதி என்பவரின் மகன் முருகேசன் (30) மற்றும் திம்மராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பரமசிவன் என்பவரின் மகன் தங்கப்பாண்டி (39) ஆகியோரைக் கைது செய்து அவர்களிடமிருந்து 98 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

​மேலும் கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதுடன், இக்குற்றச்சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

எஸ்.பி அன்ஷுல் நாகர் பேட்டி
எஸ்.பி அன்ஷுல் நாகர் பேட்டி

இதுகுறித்து ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் குமரி மாவட்ட எஸ்.பி.அன்ஷுல் நாகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ராஜாக்கமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 24.09.2026 ஆம் தேதி தம்பத்துகோணம் வி.ஐ.பி கார்டனில் வசித்து வரும் செல்வராஜ் என்பவரின் மகன் வினோத் குமார் மற்றும் அவரது மனைவி இருவரும் மாலை 6 மணி அளவில் திருநெல்வேலிக்குச் சென்று இரவு 12 மணி அளவில் வீடு திரும்பியவர்கள் வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு மாடியில் உள்ள அறையில் சென்று பார்த்த பொழுது வீட்டில் இருந்த நகைகள் திருடு போனது தெரியவந்துள்ளது. ​

உடனே இது சம்பந்தமாக ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். புகாரைப் பெற்றுக் கொண்டு ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஏழு தனிப்படையினர் அமைக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுமிதா வெளியிட்ட வீடியோக்களை கடந்த ஆறு மாதங்களாக பார்த்து இந்தக் கொள்ளை திட்டம்போட்டுள்ளனர். கார் இல்லாமல் இருந்தால் வீட்டில் ஆள் இல்லை என்பதை உறுதிசெய்து கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர்" என்றார்.

சென்னை: தாயின் கண்முன் மகன் கொலை - நடந்தது என்ன?

சென்னை: ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் சரசு. இவரின் மகன் அஜித் (28). இவர் வீட்டின் வாசலில் அமர்ந்து அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அஜித்தை சுற்றி வளைத்த ஒரு கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது.... மேலும் பார்க்க

நெல்லையில் `இரட்டைக் கொலை' - கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் சகோதரர்கள் கொல்லப்பட்ட சோகம்

வணிக முக்கத்துவம் வாய்ந்த நெல்லை டவுன் பகுதியில் இன்று இரட்டைக் கொலை நடந்ததால், அந்தப் பகுதியே பரபரப்புக்கு உள்ளாகியது. உடனடியாக அந்தப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். அத்துடன், நெல்லை மாநகர காவல... மேலும் பார்க்க

காரின் மேல் தொங்கியபடி சென்று குட்கா கும்பலைப் பிடித்த போலீஸ்; முதல்வர் நேரில் அழைத்து பாராட்டு

கடந்த 27ம் தேதியன்று கோவை மாவட்டம் கோவில்பாளையம் காவல் துறையினர், வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த சொகுசு கார் ஒன்றைச் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி ச... மேலும் பார்க்க

பரமக்குடி: ஆட்டோ டிரைவர்கள் மோதலைத் தடுத்த பெண் போலீஸ்; தள்ளிவிடப்பட்டதால் பலியான சோகம்

பரமக்குடி சரக போலீஸ் உட்கோட்டத்தில் உள்ள பார்த்திபனூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றுபவர் கண்ணகி (35). இவருக்கு ஓர் ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளன. நேற்று, பரமக்குடி மாவட்ட தலைமை அரசு மருத்... மேலும் பார்க்க

மதுராந்தகம்: மாற்றுத்திறனாளி மாணவிக்குப் பாலியல் தொல்லை; கும்பலைத் தேடும் போலீஸ்!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த விவசாயி, தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரின் மகள், அந்தப் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் இவரா... மேலும் பார்க்க

கணவரின் 2வது திருமணத்துக்கு எதிர்ப்பு; ஒன்றரை ஆண்டுக்குப்பின் எலும்புகள் மீட்பு - சிக்கியது எப்படி?

நெல்லை மாவட்டம், கொண்டாநகரம் பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜன். இவரும், கடலூர் மாவட்டம் புதுப்பேட்டையைச் சேர்ந்த அமராவதி என்பவரும் கடந்த 2008-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மக... மேலும் பார்க்க