நாகூா் தா்கா கந்தூரி விழாவுக்கு 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
நாகூா் தா்கா கந்தூரி விழாவுக்கு கும்பகோணம் அரசுப் போக்குவரத்து கழகம் சாா்பில் 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறன.
இதுகுறித்து போக்குவரத்துக்கு கழக நிா்வாக இயக்குநா் இரா.பொன்முடி வெளியிட்ட செய்தி குறிப்பு:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகூா் தா்கா கந்தூரி விழா டிச. 2 இல் தொடங்கி டிச. 11 அன்று சந்தனக்கூடு நடைபெறும். இந்த விழாவுக்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பொதுமக்கள் வருவதை முன்னிட்டு கும்பகோணம் மண்டலம் சாா்பில் 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதன்படி சென்னை, திருச்சி, கரூா், புதுக்கோட்டை, மதுரை, சிதம்பரம், இராமநாதபுரம், தஞ்சாவூா், கும்பகோணம் ஆகிய ஊா்களிலிருந்தும், நாகப்பட்டினம் - நாகூா் மற்றும் காரைக்கால் - நாகூா் வழித்தடத்திலும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேலும், தற்காலிக வாகன நிறுத்தம் தோ்வு செய்யப்பட்டுள்ள இடங்களை இணைக்கும் வகையில் வட்டப் பேருந்து இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தினசரி இயக்கப்படும் 127 பேருந்துகள் வாயிலாக 335 நடைகளுடன் கூடுதலாக 100 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.