செய்திகள் :

பகலில் ஓட்டுநர்.. இரவில் திருடன்.. வீட்டின் பூட்டை உடைக்காமலேயே கொள்ளை - சிக்கிய கோவை திருடன்!

post image

கோவை குனியமுத்தூர் நரசிம்மபுரம் ஐயப்ப நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெபா மார்டின். இவர் கடந்த வாரம் ஊருக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 103 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. ஆனால் வீட்டின் பூட்டு உடைக்கப்படவில்லை.

திருடப்பட்ட நகை

இதுகுறித்து குனியமுத்தூர்  காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. விசாரணையில் கண்ணப்ப நகர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (48)  என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 80 பவுன் நகை, கொத்து சாவிகள், ரம்பம், குரடு, ராடு போன்ற பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “வீட்டின் பூட்டு உடைக்கப்படாததால் முதலில் வீட்டில் உள்ளவர்கள், உறவினர்களிடம் விசாரணை நடத்தினோம். அதில் அவர்கள் ஈடுபடவில்லை என்று தெரியவந்தது. இதே பாணியில் குனியமுத்தூரில் கடந்த 2024-ம் ஆண்டு இரண்டு வழக்குகள் பதிவாகி கண்டறிய முடியவில்லை.

கிருஷ்ணமூர்த்தி

பழைய வழக்குகள், மற்றும் இந்த வழக்கின் சிசிடிவி அடிப்படையில் தான் கிருஷ்ணமுர்த்தியை கைது செய்தோம். அவர் ஆக்டிங் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அவ்வப்போது திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவர் கடந்த 1993-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம், மும்பை சென்று கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர். கடந்த 2023-ம் ஆண்டு கோவை சரவணம்பட்டி பகுதியில் நகை கொள்ளையடித்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பொருள்கள்

இவர் கையில் கொத்தாக பல்வேறு சாவிகளை வைத்துக் கொண்டு இரவு நேரங்களில் பூட்டி இருக்கும் வீடுகளில் ஒவ்வொரு சாவியாக திறந்து பார்த்து, ஆயுதங்களை வைத்து உடைக்காமல் திறந்துள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றனர்.  

சித்தப்பாவுடன் தொடர்பு... கணவனைக் கொலைசெய்த மனைவி கைது - கோவையில் `பகீர்!'

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள நல்லட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தேவா என்கிற ரதீஷ் (27). ரதீஷ் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கும் இந்திராணி (26) என்கிற பெண்ணுக்கும் சமூகவலைதளத்... மேலும் பார்க்க

நீதிமன்றத்தையே ஏமாற்றிய கும்பல்: கொலை, கொள்ளை, பாலியல் குற்றவாளிகளுக்கு ஜாமீன் - தரகர்கள் கைது!

உத்தரப்பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில், தொழில்முறை `ஜாமீன் தரகர்களாக'ச் செயல்பட்ட ஒரு கும்பலை காவல்துறை கடந்த புதன்கிழமை கைதுசெய்திருக்கிறது. கொலை, பாலியல் வன்கொடுமை, கொள்ளை போன்ற கொடூரமான குற்றங்கள... மேலும் பார்க்க

சபரிமலை தங்கக் கொள்ளை வழக்கு: "உன்னிகிருஷ்ணன் போற்றிக்கு உதவினேனா?" - CPM முன்னாள் அமைச்சர் விளக்கம்

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவாரபாலவர்கள் சிற்பம், திருநடை ஆகியவற்றில் பொதிந்த தங்கத்தகடுகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கை கேரளா கோர்ட் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.இந்த வழ... மேலும் பார்க்க

ராமேஸ்வரம்: காணிக்கை பணத்தில் கைவைத்த கோயில் ஊழியர் - சிக்கவைத்த சிசிடிவி!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதிலும் இருந்து வந்து செல்கின்றனர். இவர்கள் கோயிலில் உள்ள பல்வேறு சன்னிதிகள் முன் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் காணிக்கைய... மேலும் பார்க்க

லிஃப்ட் கொடுப்பதாக காருக்குள் அழைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை; இளம்பெண்ணை சாலையில் வீசிய கும்பல்!

ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத்தில் இரவு நேரத்தில் 28 வயது பெண் ஒருவர் சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த கார் அப்பெண் அருகில் வந்து நின்றது. காரில் இருந்தவர்கள் அப்பெண்ணிடம் எங்கு செல்ல வே... மேலும் பார்க்க

ஒடிசா இளைஞர் மீதான தாக்குதல்; `இந்தச் சம்பவத்திற்கு தற்போதைய சினிமாவும் காரணம்தான்'- பேரரசு

திருத்தணி ரயில் நிலையம் அருகே கடந்த சனிக்கிழமை (டிச. 27) 4 சிறுவர்கள் ஒடிசா இளைஞரை வழிமறித்து கத்தியால் தாக்கி, துன்புறுத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.அந்த 4 இளைஞர்களை போலீஸார் கைது செய... மேலும் பார்க்க