செய்திகள் :

சித்தப்பாவுடன் தொடர்பு... கணவனைக் கொலைசெய்த மனைவி கைது - கோவையில் `பகீர்!'

post image

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள நல்லட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தேவா என்கிற ரதீஷ் (27). ரதீஷ் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கும் இந்திராணி (26) என்கிற பெண்ணுக்கும் சமூகவலைதளத்தில் பழக்கமாகி, காதல் திருமணம் செய்து கொண்டனர்.

ரதீஷ்

இந்த தம்பதிக்கு 3 வயதில் ஓர் ஆண் குழந்தை உள்ளது. இதனிடையே கடந்த சில வாரங்களாக ரதீஷைக் காணவில்லை என்ற அவரின் தாயார் சுசீலா கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அதனடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். கண்காணிப்பு கேமராவில் ரதீஷின் வீட்டிற்கு ஆம்புலன்ஸ் வந்து சென்றது கண்டறியப்பட்டது. இதனிடையே இந்திராணி காவல்துறையில் சரணடைந்து காவல்துறையிடம் சொன்ன தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வினோத்

``எனக்கும், கரூரில் பணியாற்றி வரும் என் சித்தப்பா வினோத்துக்கும் (35) பழக்கம் ஏற்பட்டது. இதற்கு ரதீஷ் தொந்தரவாக இருந்தார். எங்களுக்குள் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது.

ரதீஷை தீர்த்துகட்ட முடிவு செய்தோம். இதற்காக வினோத் தன் நண்பர்கள் சுரேஷ் மற்றும் பாபு ஆகியோரை அழைத்து வந்தார். எங்கள் வீட்டில் வைத்து ரதீஷை கொலைசெய்து, பாபுவின் ஆம்புலன்ஸ் மூலம் உடலை கரூர் ரயில்வே தண்டவாளம் அருகே போட்டுவிட்டோம்.

ரதீஷ் ரயில் மோதி உயிரிழந்தது போல காட்ட திட்டமிட்டோம். அதற்குள் காவல்துறையினர் கண்டறிந்துவிட்டனர்" என்றார். காவல்துறையினர் இந்திராணி, வினோத், சுரேஷ், பாபு ஆகிய 4 பேரைக் கைதுசெய்தனர்.

சக மாணவிகள், பேராசிரியரின் ராகிங், பாலியல் தொல்லை: கல்லூரி மாணவி உயிரிழப்பு, காட்டிக்கொடுத்த மொபைல்!

இமாச்சல் பிரதேசத்தில் உள்ள தர்மசாலா அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த 29 வயது மாணவி, மன அழுத்தம் காரணமாக லூதியானா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் தற்போது சிகிச்சை பலனலிக்காமல்... மேலும் பார்க்க

பகலில் ஓட்டுநர்.. இரவில் திருடன்.. வீட்டின் பூட்டை உடைக்காமலேயே கொள்ளை - சிக்கிய கோவை திருடன்!

கோவை குனியமுத்தூர் நரசிம்மபுரம் ஐயப்ப நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெபா மார்டின். இவர் கடந்த வாரம் ஊருக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 103 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்... மேலும் பார்க்க

நீதிமன்றத்தையே ஏமாற்றிய கும்பல்: கொலை, கொள்ளை, பாலியல் குற்றவாளிகளுக்கு ஜாமீன் - தரகர்கள் கைது!

உத்தரப்பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில், தொழில்முறை `ஜாமீன் தரகர்களாக'ச் செயல்பட்ட ஒரு கும்பலை காவல்துறை கடந்த புதன்கிழமை கைதுசெய்திருக்கிறது. கொலை, பாலியல் வன்கொடுமை, கொள்ளை போன்ற கொடூரமான குற்றங்கள... மேலும் பார்க்க

சபரிமலை தங்கக் கொள்ளை வழக்கு: "உன்னிகிருஷ்ணன் போற்றிக்கு உதவினேனா?" - CPM முன்னாள் அமைச்சர் விளக்கம்

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவாரபாலவர்கள் சிற்பம், திருநடை ஆகியவற்றில் பொதிந்த தங்கத்தகடுகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கை கேரளா கோர்ட் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.இந்த வழ... மேலும் பார்க்க

ராமேஸ்வரம்: காணிக்கை பணத்தில் கைவைத்த கோயில் ஊழியர் - சிக்கவைத்த சிசிடிவி!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதிலும் இருந்து வந்து செல்கின்றனர். இவர்கள் கோயிலில் உள்ள பல்வேறு சன்னிதிகள் முன் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் காணிக்கைய... மேலும் பார்க்க

லிஃப்ட் கொடுப்பதாக காருக்குள் அழைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை; இளம்பெண்ணை சாலையில் வீசிய கும்பல்!

ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத்தில் இரவு நேரத்தில் 28 வயது பெண் ஒருவர் சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த கார் அப்பெண் அருகில் வந்து நின்றது. காரில் இருந்தவர்கள் அப்பெண்ணிடம் எங்கு செல்ல வே... மேலும் பார்க்க