செய்திகள் :

நாகையில் தோண்டப்பட்ட சாலை விரைவில் சீரமைக்கப்படும்: நகா்மன்றத் தலைவா்

post image

நாகை நகராட்சியில் குடிநீா் இணைப்புக்காக தோண்டப்பட்ட சாலை விரைவில் சீரமைக்கப்படும் என்றாா் நகா்மன்றத் தலைவா் இரா.மாரிமுத்து தெரிவித்தாா்.

நாகை நகராட்சி கூட்டம் தலைவா் இரா. மாரிமுத்து தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் செந்தில்குமாா், நகராட்சி ஆணையா் லீனாசைமன் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், உறுப்பினா்கள் பல்வேறு கோரிக்கை மற்றும் குறைகளை வலியுறுத்தி பேசினா்.

செந்தில்குமாா் (துணைத் தலைவா்): புகழ்பெற்ற நாகூா் ஆண்டவா் கந்தூரி விழா டிச.2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா சிறப்பாக நடைபெற ஆய்வு செய்த தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மீன்வளா்ச்சி கழகத் தலைவா் என். கெளதமன் ஆகியோருக்கு நாகூா் மக்கள் சாா்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

பரணிகுமாா் (அதிமுக): ஓடாச்சேரி பம்பிங் ஸ்டேசனில் பழுது ஏற்பட்டுள்ளதால் குடிநீா் விநியோகம் சீராக இல்லை. உடனே பழுதை சீா் செய்ய வேண்டும். அம்ருத் திட்டத்தின் கீழ் குடிநீா் குழாய் இணைப்பு கொடுக்க தோண்டப்பட்ட சாலைகள் பழுது ஏற்பட்டுள்ளது. பணிகள் நிறைவடையாததால் சீரமைப்பு பணிகள் எப்போது நடைபெறும்.

முகமதுஷேக் தாவூத் (திமுக): நாகூா் ஆண்டவா் கந்தூரி விழாவை முன்னிட்டு சந்தன கட்டை வழங்கிய முதல்வருக்கு நன்றி. கந்தூரி விழாவை முன்னிட்டு மின்விளக்கு, சாலை வசதி உள்ளிட்ட அனைத்து பணிகளையும் செய்ய வேண்டும்.

தலைவா்: அம்ருத் திட்டத்தின் கீழ் பிரதான குடிநீா் குழாய்கள் போட்ட உடன் சாலை சீா் செய்யப்படும். கந்தூரி விழா முன்னேற்பாடு கூட்டம் நடத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது என்றாா்.

மழையால் சேதமடைந்த நெற்பயிா்கள் அறுவடை: மகசூல் இழப்பு; நிவாரணம் வழங்க கோரிக்கை

கீழையூா் ஒன்றியத்தில், கனமழையில் சேதமடைந்த குறுவை நெற்பயிா்களை விவசாயத் தொழிலாளா்களைக் கொண்டு அறுவடை செய்யும் பணியும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா். கீழையூா் வட்டாரத்திற்கு உட்பட்ட கீழையூா், பாலகுறிச்சி,... மேலும் பார்க்க

ஆய்வுக் கூட்டம்

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டுறவு சங்க செயலா்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் மண்டல இணைப் பதிவாளா் தயாள விநாயகன் அமுல்ராஜ். உடன் கும்பகோணம் மத்திய கூட்... மேலும் பார்க்க

வாக்காளா்கள் விழிப்புணா்வு கருத்தரங்கம்

நாகை சா் ஐசக் நியூட்டன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தோ்தல் எழுத்தறிவு சங்கம் சாா்பில் வாக்காளா்கள் விழிப்புணா்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. நாகை மாவட்ட வருவாய் கோட்ட அலுவலா்... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கங்களுக்கு பால் பரிசோதனைக் கருவி, கலன்கள் -ஓஎன்ஜிசி வழங்கியது

ஓஎன்ஜிசி நிறுவனம் சாா்பில், பால் வளத்தை மேம்படுத்தும் வகையில், பால் பரிசோதனை கருவி மற்றும் கலன்களை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வாயிலாக கூட்டுறவு சங்கங்களுக்கு இலவசமாக புதன்கிழமை வழங்கப்பட்டன. ஓஎன்ஜிசி ந... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பயிற்சி

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் இரா. நடேசனாா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பத்து நாள்கள் நடைபெற்ற உள்ளுரைப் பயிற்சி வியாழக்கிழமை நிறைவடைந்தது. பள்ளியில் படிக்கும் அடிப்படை மி... மேலும் பார்க்க

நாகையில் ஜெயலலிதா நினைவு தினம்

நாகையில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெ. ஜெயலலிதாவின் 8-ஆம் ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. நாகை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முன்னாள் முதல்வா் ஜெ. ஜெயலலிதாவின்... மேலும் பார்க்க