செய்திகள் :

"நாங்கள்தான் தப்பியோடியவர்கள்; உங்கள் வயிறு எரியட்டும்" - லலித் மோடி வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

post image

தொழிலதிபர் விஜய் மல்லையாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

ஐ.பி.எல் முன்னாள் தலைவர் லலித் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், இந்திய அரசாங்கத்தையும் சட்டத்தையும் அவர்கள் இருவரும் பகிரங்கமாகக் கேலி செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

லண்டனில் இருந்து லலித் மோடி வெளியிட்ட அந்த வீடியோவில், "நாங்கள் இருவரும் தப்பியோடியவர்கள், இந்தியாவைச் சேர்ந்த மிகப்பெரிய தப்பியோடியவர்கள்" என்று தன்னை மல்லையாவோடு சேர்த்து கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.

லலித் மோடி - விஜய் மல்லையா
லலித் மோடி - விஜய் மல்லையா

மேலும், "மீண்டும் இணையத்தையே ஒரு உலுக்கு உலுக்கப் போகிறேன் (அதிர வைக்கப் போகிறேன்). இதோ உங்களுக்காக ஒன்று. இதைப் பார்த்து பொறாமையிலேயே வயிறு எரியுங்கள்!" எனத் தலைப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ வெளியானது முதல் இந்தியர்களிடையே கடும் எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

பதிவர் ஒருவர், ``இந்திய அரசாங்கத்தையும் அதன் சட்ட அமைப்பையும் இவர்கள் எவ்வளவு கேலி செய்கிறார்கள்!" எனப் பதிவிட்டுள்ளார்.

மற்றொருவர், ``இவர்கள் இந்திய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையைப் பார்த்து பகிரங்கமாகச் சிரிக்கிறார்கள். இது இந்தியச் சட்டத்திற்கு நேர்ந்த அவமானம்" எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.

விஜய் மல்லையா வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கித் திருப்பிச் செலுத்தாமல் 2016-ல் இந்தியாவை விட்டு வெளியேறினார். 2019-ல் அவர் 'தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி'யாக அறிவிக்கப்பட்டார்.

லலித் மோடி ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம் வழங்கியதில் ரூ.125 கோடிக்கும் மேல் கையூட்டு பெற்றது மற்றும் பணமோசடி புகார்களுக்கு மத்தியில், 2010-ம் ஆண்டு இந்தியாவை விட்டு தப்பியோடினார்.

தற்போது இவர்கள் இருவரும் லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதும், அதை வீடியோவாக வெளியிட்டு இந்தியாவைச் சீண்டுவதும் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.

துப்பாக்கிச் சூடு: தனி ஒருவனாக போராடி பலரை காப்பாற்றிய பழக்கடைகாரர் - யார் அந்த ஹீரோ?

ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகரான சிட்னியில் அமைந்துள்ளது பான்டி (Bondi) கடற்கரை. யூதர்களின் விழாவான ஹனுக்காவை (Hanukkah) கொண்டாட பான்டி கடற்கரையில் சுமார் 1,000 முதல் 2,000 பேர் ... மேலும் பார்க்க

Lionel Messi: ராகுல் காந்திக்கு மெஸ்ஸி கொடுத்த கிஃப்ட் - வைரலாகும் வீடியோ!

உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, 'G.O.A.T. Tour' (Greatest Of All Time Tour) என்ற பெயரில் இந்தியாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் கொல்கத்தா, அகமதா... மேலும் பார்க்க

Indigo: `தொடரும் விமான ரத்து, தாமதம்' - பயணிகள் ஆர்ப்பாட்டம்; இண்டிகோ நிறுவனத்துக்கு என்ன பிரச்னை?

இந்தியாவின் முக்கிய விமானப் போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனம் சமீப காலமாக விமான தாமதம், விமானப் பயணம் ரத்து உள்ளிட்ட தீவிர பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. நவம்பர் மாதத்தில் மட்டும் ... மேலும் பார்க்க

சிங்கக் கூண்டுக்குள் தானே நுழைந்த இளைஞர் - பிரேசிலில் அதிர்ச்சி சம்பவம் | வீடியோ

பிரேசில் நாட்டில் இருக்கும் உயிரியல் பூங்கா ஒன்றில் 19 வயது இளைஞர் ஒருவர் தானாகவே சிங்கத்தின் கூண்டுக்குள் சென்று மாட்டிக்கொண்டு உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.கடந்த நவம்... மேலும் பார்க்க

Rage Bait: 2025-ம் ஆண்டின் சிறந்த வார்த்தை; `இது வெறும் சொல் அல்ல' - எச்சரிக்கும் ஆக்ஸ்போர்ட்!

ஒவ்வொரு ஆண்டும் ஆக்ஸ்போர்ட் அகராதி ஒரு சொல்லைத் தேர்வு செய்து அதை அந்த ஆண்டின் சிறந்த வார்த்தையாக அறிவிக்கும். அதன் அடிப்படையில் இந்த ஆண்டு "ரேஜ் பெய்ட்" (Rage Bait) என்ற வார்த்தையைத் தேர்வு செய்திருக... மேலும் பார்க்க

Elon Musk:``என் மகன்களில் ஒருவரின் பெயரில் 'சேகர்' எனச் சேர்த்திருக்கிறேன்" - எலான் மஸ்க்

"WTF is" பாட்காஸ்ட் தொடரில் தொழில்முனைவோரும் முதலீட்டாளருமான நிகில் காமத் தொழில் வல்லுநர்களுடன் உரையாற்றுவார். அதன் அதன் அடிப்படையில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் உடன்... மேலும் பார்க்க