செய்திகள் :

"நாங்கள் இருப்பதே வாடகை வீடு; என் குடும்பத்தில் யாரிடமும் ரூ.2 கோடி இல்லை..!"- அமைச்சர் ரமேஷ்

post image

கடந்த ஜூலை 25ம் தேதி அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்றிருந்தார்.

அப்போது கிழக்கு கோபுரத்தில் ஷூ அணிந்தபடி அவர் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பி இருந்தது.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரமேஷிடம் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

ஷூ அணிந்து சென்ற புகைப்படம்
ஷூ அணிந்து சென்ற புகைப்படம்

அதற்கு பதிலளித்த அமைச்சர், "ஸ்ரீரங்கம் கோயிலில் கிழக்கு கோபுரப் பணிகள் நடைபெற்று வருவதால் அப்பகுதி முழுவதும் கற்களும், ஆணிகளும், இரும்புகளும் சிதறி கிடக்கின்றன. அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களே தங்கள் பாதுகாப்புக்காகக் காலணி அணிந்துதான் வேலை செய்கிறார்கள்.

நான் சென்றபோது அங்கிருந்த நன்கொடையாளர் நீங்கள் ஷூவைக் கழற்ற வேண்டாம், அப்படியே வாருங்கள் என்று அழைத்துச் சென்றார். ஷூ அணிந்து சென்றதை விமர்சிப்பவர்களுக்கு பகுத்தறிவு என்று ஒன்று இருக்க வேண்டும்.

பகுத்தறிவு இருப்பவர்கள் இப்படியெல்லாம் கேள்வி கேட்க மாட்டார்கள். பாதுகாப்பு முக்கியம். அங்கு வேலை செய்யும் பணியாளர்களும் செருப்பு போடாமல் வேலை செய்ய வேண்டுமா? பணியாளர்களுக்கு ஏதாவது நடந்தால் பகுத்தறிவு இல்லாத இவர்கள்தான் பதில் சொல்வார்களா?

பாதுகாப்பிற்காக நான் ஷூ அணிந்து சென்றதை கோயிலை இழிவுப்படுத்தி விட்டோம் எனச் சொல்கிறார்கள். இத்தகையவர்கள் அரசியல் செய்தே பழக்கப்பட்டவர்கள். இந்த மாதிரி விஷயங்களை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு பகுத்தறிவே இருக்காது" என்று காட்டமாக பதில் அளித்திருக்கிறார்.

அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ்
அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ்

தொடர்ந்து பழனி கோயில் நில மோசடி வழக்கில் உங்கள் மீது குற்றம் சுமத்துகிறார்களே என்ற கேள்விக்கு, "முதலில் அது குற்றச்சாட்டே கிடையாது. என் மீது பொய் பரப்புகிறார்கள். ரமேஷ் குடும்பத்தில் உள்ளவர்கள்தான் 2 கோடிக்கு வாங்கி இருக்கிறார்கள் என்று சொல்கின்றனர்.

முதலில் என் குடும்பத்தில் யாரிடமும் 2 கோடி ரூபாய் பணமே கிடையாது. நாங்கள் இருப்பதே வாடகை வீடு. அப்படி இடம் வாங்குவதாக இருந்தாலும் சென்னையில் வாங்காமல் பழனியிலா வாங்குவேன். ஏதாவது ஒரு காரணத்தை வைத்து என் பெயரையும், புகழையும் கெடுக்கப் பார்க்கிறார்கள்" என்று பதிலளித்திருக்கிறார்.

மாணவர்கள் போராட்டம் குறித்த சுற்றறிக்கை: "பாசிச அரசியலைத் தொடங்க ஆழம் பார்த்ததா தவெக அரசு?"- கனிமொழி

காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் இடதுசாரி போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து சில நிமிடங்களிலேயே இந்த ... மேலும் பார்க்க

`ஆளுங்கட்சி ஆகிவிட்டோம்' தவெக கூட்டணியை உறுதி செய்த திருமா; பாமக-வுக்கு வைத்த செக்! - பின்னணி என்ன?

தவெக அமைச்சரவையில் அமைச்சர் வன்னி அரசு இடம்பெற்றிருந்தாலும் எந்தக் கூட்டணியில் விசிக இருக்கிறது என்பதை தெளிவாக கூறாமல் திருமாவளவன் குழப்பி வந்தார். 'திமுகவுடன் எங்களது நட்பு தொடர்கிறது' என்று திமுகவிற... மேலும் பார்க்க

மேகமலை: `துணை ராணுவப் படையை அனுப்ப நேரிடும்; முழுமையாக இடித்து அகற்றுங்கள்'- உச்ச நீதிமன்றம் அதிரடி

மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் மாஞ்சோலையைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், இலவம் பஞ்சு தோட்டங்களையும் முழுமையாக அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான உத்... மேலும் பார்க்க

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?'- திமுக கேள்வி

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?' என திமுக கேள்வி எழுப்பியிருக்கிறது.இது தொடர்பாக வெளியாகியிருக்கும் அறிக்கையில், `நேற்றைய தினம் அதிகார ஆணவத்திமிரோடு, “திண்டுக்கல் மாவட்டம்... மேலும் பார்க்க

`மூன்று தமிழர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, ஆணவத்தோடு டி.கே.சிவக்குமார் பேசுவதா?' - சீமான் கண்டனம்

`கர்நாடக வனப்பகுதியில் மூன்று அப்பாவித்தமிழர்களை ஈவிரக்கமற்றுச் சுட்டுக்கொன்றுவிட்டு, எங்கள் மாநிலத்தின் விவகாரத்தில் தலையிடாது, உங்கள் வேலையைப் பாருங்கள் எனத் துளியும் குற்றவுணர்ச்சியோ, பொறுப்புணர்ச்... மேலும் பார்க்க

"அந்தத் தண்ணீரைக் குடிக்கிறாங்க, கோயிலுக்கு அபிஷேகம் பண்றாங்க" - கூவம் நதி குறித்து சௌமியா அன்புமணி

தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை, நீர்வளம், ஊரக வளர்ச்சி, சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டமன்ற விவாதத்தின்போதுபேசிய பாமக எம்எல்ஏ சௌமியா அன்ப... மேலும் பார்க்க