சாட்ஜிபிடி மூலம் புத்தகங்கள்; ஒரே நாளில் ISBN பெற்ற நூல்கள், அதே நாளில் ஒப்புதல்...
"நாங்கள் திருமண உறவில்தான் இருக்கிறோம்!" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரம்யா கிருஷ்ணன்!
நடிகை ரம்யா கிருஷ்ணனும், அவரது கணவரும் தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குநருமான கிருஷ்ண வம்சியும் பிரிந்துவிட்டதாகக் கடந்த சில ஆண்டுகளாகவே சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன.
தற்போது அதற்கு நடிகை ரம்யா கிருஷ்ணன் விளக்கமளித்திருக்கிறார். சமீபத்தில் 'ரா டாக்ஸ் வித் வி.கே' சேனலுக்கு அளித்த பேட்டியில் இதனை அவர் பேசியிருக்கிறார்.

ரம்யா கிருஷ்ணன் பேசுகையில், "நாங்கள் 100 சதவீதம் இப்போதும் திருமண பந்தத்தில்தான் இருக்கிறோம். ஆனால், எங்களின் வசதிக்கேற்ப, மிகவும் மகிழ்ச்சியாக இரண்டு வெவ்வேறு நகரங்களில் வசித்து வருகிறோம்.
என் மகன் ரித்விக் வளர்ந்து கொண்டிருந்த சமயத்தில் நான் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்பிற்காகச் சென்னையில் இருந்தேன். 15 நாட்களுக்கு ஒருமுறை ஹைதராபாத்துக்கு வந்து செல்வேன்.
அடிக்கடி நடந்த வேலைநிறுத்தங்களால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால், எனக்கும் என் மகனுக்கும் அது மிகவும் சிரமமாக இருந்தது.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், வம்சி ஆரம்பத்திலிருந்தே 'எதற்குத் திருமணம்? நாம் லிவ்-இன் முறையில் சேர்ந்து வாழலாமே' என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.
ஒருவேளை நான் அப்போதே அதற்குச் சம்மதம் சொல்லியிருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. ஏனென்றால், திருமணம் என்பது இரு குடும்பங்களையும் சுற்றியிருக்கும் பல மனிதர்களையும் உள்ளடக்கியது.

இதனால், நம் துணையுடனான உறவை விட, மற்றவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயமே அதிகமாக இருக்கிறது. என் கணவருடனான என் உறவு எப்போதும் மிகச்சிறப்பாகவே இருக்கிறது.
நாங்கள் தனித்தனியாக வசிப்பதால்தான் இப்போதும் திருமண பந்தத்தில் நீடிக்கிறோம் என்று நினைக்கிறேன். எப்போதும் சண்டை போட்டுக்கொண்டிருப்பதற்குப் பதிலாக, இப்போது நாங்கள் சிறந்த நண்பர்களாக இருக்கிறோம்" எனப் பேசியிருக்கிறார்.
















